மாட்ரிட் ஒபன் டென்னிஸ் கவுப் அபாரம்
ஸ்பெயின் நாட்டின் தலைநகர் மாட்ரிட் நகரில் “ஏடிபி மாஸ்டர்ஸ் 1000” டென்னிஸ் தொடர் நடைபெற்று வரு கிறது. தற்போது இந்த தொடர் இறுதிக் கட்டத்தை எட்டியுள்ள நிலையில், இந்திய நேரப்படி திங்களன்று நடை பெற்ற மகளிர் ஒற்றையர் பிரிவு 4ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசை யில் 4ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோகா கவுப், தரவரிசையில் இல்லாத முன்னணி வீராங்கனையான சுவிட்சர்லாந்தின் பென்கிச்சை எதிர்கொண்டார். தொடக்கம் முதலே ஆதிக்கம் செலுத்திய கவுப் 6-4, 6-2 என்ற செட் கணக்கில் அபார வெற்றி பெற்று, காலிறுதி சுற்றுக்கு முன்னேறினார். ரூத் அபாரம் ஆடவர் ஒற்றையர் பிரிவு 3ஆவது சுற்று ஆட்டத்தில் தரவரிசையில் 14ஆவது இடத்தில் உள்ள நார்வே வீரர் ரூத், தரவரிசையில் 23ஆவது இடத்தில் உள்ள அமெரிக்காவின் கோத்ராவை 6-3, 6-3 என்ற செட் கணக்கில் வீழ்த்தி 4ஆவது சுற்றுக்கு முன்னேறினார்.
ஐபிஎல் 2025 ரிஷப் பண்டிற்கு ரூ.24 லட்சம் அபராதம்
மகாராஷ்டிரா மாநிலம் மும்பை வான்கடே மைதானத்தில் ஞாயிற்றுக்கிழமை நடைபெற்ற 45ஆவது லீக் ஆட்டத்தில் மும்பை - லக் னோ அணிகள் மோதின. இந்த ஆட்டத் தில் லக்னோ அணி 54 ரன்கள் வித்தி யாசத்தில் தோல்வி அடைந்தது. முதலில் பந்துவீசிய லக்னோ அணி அதிக நேரம் எடுத்துக் கொண்டதால், ஐபிஎல் நடத்தை விதிகளின் பிரிவு 2.22இன் படி அபராதம் விதிக்கப் பட்டுள்ளது. மேலும் இது இரண்டா வது விதிமீறல் என்பதால் ரிஷப் பண்டுக்கு ரூ.24 லட்சமும், இம்பேக்ட் வீரர் உள்பட அணியின் மற்ற வீரர்களுக்கு ரூ. 6 லட்சம் அல்லது போட்டி சம்பளத்தில் 25% அபராதம் விதிக்கப்பட்டுள்ளது. ஏற்கெனவே கடந்த ஏப்ரல் 4ஆம் தேதி மும்பை அணிக்கு எதிரான போட்டியில் தாமதமாக பந்து வீசி யதற்காக லக்னோ அணியின் கேப்டன் பண்டுக்கு ரூ.12 லட்சம் அபராதமாக விதிக்கப்பட்டது. தொடர்ந்து நடப் பாண்டு ஐபிஎல் சீசனில் மூன்றாவது முறையாக லக்னோ அணி மெதுவாக பந்துவீசினால் ரிஷப் பண்டுக்கு ஒரு போட்டியில் விளையாடத் தடை விதிக்கப் படும் என்பது குறிப்பிடத்தக்கது
மகாராஷ்டிரா தேசிய கிரிக்கெட் அகாடமி தொடங்குகிறது
கர்நாடக மாநிலம் பெங்களூருவில் தேசிய கிரிக்கெட் அகாடமி (NCA) உள்ளது. 2000ஆம் ஆண்டு நிறுவப்பட்ட இந்த தேசிய அகாடமி எம்.சின்னசாமி சர்வதேச மைதானத்திற்கு அருகில் அமைந்துள்ளது. காயமடைந்த வீரர்களின் மறுவாழ்வு, வீரர்களின் திறன் சோதனை உள்ளிட்ட இதர செயல்பாட்டிற்காக இந்த அகாடமி பயன்படுத்தப்பட்டு வருகிறது. தற்போது முன்னாள் கிரிக்கெட் வீரர் வி.வி.எஸ்.லட்சுமணன் தேசிய அகாடமியின் இயக்குந ராக உள்ளார். இத்தகைய சூழலில், பெங்களூரு தேசிய அகாடமியைப் போல மகாராஷ்டிரா கிரிக்கெட் சங்கம் மாதிரி, தேசிய கிரிக்கெட் அகாடமியை தொடங்க உள்ளதாக அறிவித்துள்ளது. ஆனால் மாதிரி தேசிய அகாடமி எங்கு அமைய உள்ளது என அம்மாநில கிரிக்கெட் சங்கம் வெளிப்படையாக அறிவிக்கவில்லை.