ஆபாசப் படங்களுக்கு தடை விதிக்கக் கோரிய வழக்கில் ஓடிடி, சமூக வலைதள நிறுவனங்கள் மற்றும் ஒன்றிய அரசு பதிலளிக்க உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
ஓடிடி மற்றும் சமூக வலைதளங்களில் வெளியிடப்படும் ஆபாச திரைப்படங்கள், இணையத் தொடர்கள், விடியோக்களை தடை செய்ய நடவடிக்கை எடுக்கக் கோரி உச்சநீதிமன்றத்தில் பொதுநல மனு ஒன்று தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை இன்று நீதிபதி கவாய் தலைமையிலான அமர்வு முன்பு விசாரணைக்கு வந்தது. அப்போது, இது தொடர்பாக பதில் மனு தாக்கல் செய்யும்படி, அமேசான் ப்ரைன், நெட்ஃபிளிக்ஸ், ஜியோ ஹாட்ஸ்டார் உள்ளிட்ட ஓடிடி நிறுவனங்களுக்கும், இன்ஸ்டாகிராம், எக்ஸ் போன்ற சமூக வலைதள நிறுவனங்களுக்கும், ஒன்றிய அரசுக்கும் உத்தரவிட்டுள்ளது.