tamilnadu

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

உச்ச நீதிமன்றத் தீர்ப்புக்கு  தீண்டாமை ஒழிப்பு முன்னணி வரவேற்பு

கண்ணகி - முருகேசன் சாதி ஆணவ கொலை வழக்கு

சென்னை, ஏப்.28- கண்ணகி - முருகேசன் சாதி ஆணவ  கொலை வழக்கில் குற்றவாளிகளின் தண்டனையை உறுதி செய்துள்ள உச்ச நீதிமன்ற தீர்ப்பிற்கு தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி வர வேற்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தீண்டாமை ஒழிப்பு முன்னணியின் மாநிலத் தலைவர் த.செல்லக்கண்ணு, பொதுச் செயலா ளர் கே.சாமுவேல்ராஜ் ஆகியோர் விடுத் துள்ள அறிக்கையில் தெரிவித்திருப்ப தாவது: கடலூர் மாவட்டம், விருத்தாசலம் வட்டம், புதுக்கூரைப்பட்டு கண்ணகி -  முருகேசன் ஆகியோர் காதலித்து 2003  இல் திருமணம் செய்து கொண்டனர். முருகேசன் பட்டியல் இனத்தை சார்ந்த வர் என்பதனால் ஆத்திரமுற்ற கண்ணகி யின் சகோதரன், தந்தை உள்ளிட்ட வர்கள் கண்ணகி, முருகேசன் ஆகிய இருவரின் காதிலும் விஷம் ஊற்றி கொலைசெய்து உடல்களை எரித்து விட்டனர். 2021 இல் கடலூர் அமர்வு நீதி மன்றம் கண்ணகியின் சகோதரன் மருது பாண்டியனுக்கு மரண தண்டனையும்,  தந்தை உள்ளிட்ட 13 பேருக்கு ஆயுள்  தண்டனையும் விதித்து தீர்ப்பளித்தது. சென்னை உயர்நீதிமன்றம் இவ்வழக்கில்  மரண தண்டனையை ஆயுள் தண்டனை யாக மாற்றியதோடு இருவரை விடு வித்து 11 பேரின் ஆயுள் தண்டனையை  உறுதிசெய்தது.  திங்களன்று (28.04.2025) உயர்நீதி மன்றத்தின் தீர்ப்பை உச்சநீதிமன்றம் உறுதிசெய்ததோடு  முருகேசன் குடும்பத் தினருக்கு ரூ.5 லட்சம் இழப்பீடு  வழங்கிடவும் உத்தரவிட்டுள்ளது.  உச்ச நீதிமன்றத்தின் இந்த தீர்ப்பை  தமிழ்நாடு தீண்டாமை ஒழிப்பு முன்னணி  வரவேற்கிறது. 22 ஆண்டு கால நீதிக் கான போராட்டங்களில் முருகேசன் குடும்பத்தினர் காட்டிய மனஉறுதியும், வழக்கறிஞர் ரத்தினம் அவர்களின் தொடர்ந்த போராட்ட முயற்சிகளும், இன்றைய வெற்றியின் அடித்தளமாக அமைந்துள்ளன. மேலும், உச்ச நீதி மன்றத்தில் முருகேசன் குடும்பத்திற் காக வாதாடிய வழக்கறிஞர் ராகுல்  ஷ்யாம் பண்டாரி  மற்றும் பிரிய தர்ஷினி  ஆகியோரை தீஒமு பாராட்டுகிறது. சாதி ஆணவப் படுகொலைக்கு எதிரான சட்டப் போராட்டத்தில் நம்பிக்கை அளிக்கும் தீர்ப்பு என்பதோடு சாதி ஆணவப்படுகொலைக்கு எதிரான தேவையையும் வலியுறுத்தும் விதமாக  இத்தீர்ப்பு அமைந்துள்ளது. இவ்வாறு அவர்கள் தெரிவித்துள்ளனர்.