world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ஈரானுக்கு சீனாவின் ஆதரவு தொடரும்

ஈரானுடனான ஒத்துழைப்பை தொடர்ந்து வலுப்படுத்தும் என சீனா உறுதியளித்துள்ளது. ஷாங்காய் ஒத்துழைப்பு அமைப்பின் (SCO) வெளியுறவுத் துறை அமைச்சர்கள் கூட்டத்தில் கலந்து கொண்ட ஈரான் துணை வெளியுறவுத் துறை அமைச்சர்  மஹ்தி சஃபாரியுடன் நடந்த பேச்சுவார்த்தையில் சீன வெளியுறவுத்துறை அமைச்சர் வாங் யீ இந்த கருத்துக்களை தெரிவித்துள்ளார்.

செல்வ வரிக்கு எதிர்ப்பு  தெரிவிக்கும் அமெரிக்கா 

மிகப்பெரும் பணக்காரர்கள் மீதான செல்வ வரி விதிக்க அமெரிக்கா எதிர்ப்பு தெரிவித்து வருகிறது. ஜி-20 நாடுகளுக்கு தலைமை வகித்து வரும் பிரேசில், பணக்காரர்கள் மீது ஆண்டுக்கு 2 சதவீதம் செல்வ வரி விதிக்கும் நடைமுறையை   கொண்டு வர முயற்சித்து வருகிறது. இந்த முடிவிற்கு தென்னாப்பிரிக்கா,பிரான்ஸ்,ஜெர்மனி உள்ளிட்ட நாடுகள் ஆதரவு தரும் நிலையில் அமெரிக்கா மட்டும் எதிர்ப்பு தெரிவித்து வருகிறது.

ரஃபா நகரில் உணவு விநியோகம் நிறுத்தம்  

மே 21 முதல் ரஃபா நகரில் உணவு விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக  பாலஸ்தீன அகதிக ளுக்கான ஐ.நா நிவாரணம் மற்றும் பணி நிறுவனம்  அறிவித்துள்ளது.  உணவுப் பொருட்கள் பற்றாக்குறை மற்றும் பாதுகாப்பின்மை காரணமாக  விநியோகம் நிறுத்தப்பட்டுள்ளதாக தெரிவித்துள்ளது. ரஃபா நகருக்குள் தரைவழித் தாக்குதல் துவங்கிய போதே இஸ்ரேல் ராணுவம், ஐநா   நிவாரண வாகனங்களை தடுத்ததோடு, ஐநா அமைப்பின் வாகனங்கள், ஆம்புலன்ஸ்கள் மீதும் தாக்குதல் நடத்தியது குறிப்பிடத்தக்கது.
 

;