tamilnadu

கானலாகும் குறுவை: காவிரியில் நீர் திறந்திடுக!

சென்னை, ஜூன் 15- மேட்டூர் அணையில் போதிய தண்ணீர் இல்லாத தால், காவிரி பாசனப் பகுதி யில் குறுவைச் சாகுபடியை  மேற்கொள்ள முடியாத சூழல் ஏற்பட்டுள்ள நிலை யில், உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய அளவு தண் ணீரை கர்நாடக மாநில அரசு  திறந்து விடுவதற்கான நட வடிக்கைகளை காவிரி மேலாண்மை வாரியம் மேற் கொள்ள வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வலியுறுத்தியுள்ளது.

இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்)-யின் தமிழ்நாடு மாநிலக்குழு கூட்டம் 2024 ஜூன் 14, 15  ஆகிய தேதிகளில் சென்னை யில் மாநில செயற்குழு உறுப்  பினர் க.கனகராஜ் தலை மையில் நடைபெற்றது.

அரசியல் தலைமைக் குழு உறுப்பினர்கள் பிர காஷ் காரத், ஜி. ராமகிருண் ணன், மாநிலச் செயலாளர் கே.பாலகிருஷ்ணன், மத்தி யக்குழு உறுப்பினர்கள் பி.  சம்பத், உ.வாசுகி, பெ.சண்  முகம், மாநில செயற்  குழு மற்றும் மாநிலக்குழு உறுப்பினர்கள், மாவட்டச் செயலாளர்கள் கலந்து கொண்டுள்ளனர். இக்கூட்  டத்தில் நிறைவேற்றப் பட்ட தீர்மானம் வருமாறு:

காவிரி டெல்டா மாவட் டங்களில் குறுவைச் சாகுபடியை துவங்கு வதற்கு வழக்க மாக ஜூன் 12-இல் மேட்டூர்  அணை திறக்கப்பட வேண்டும். நடப்பாண்டு  மேட்டூர் அணையின் நீர்மட்டம் தற்போது  மிக குறைந்தளவே உள்ள நிலையில் குறு வைச் சாகுபடிக்காக தண்ணீர் திறக்க முடி யாத நிலை ஏற்பட்டுள்ளது. ஆழ்குழாய்  பாசனம் மூலம்குறுவை சாகுபடி செய்தி டும் விவசாயிகளுக்கு பயன்படும் வகையில்  இந்தாண்டும் மாநில அரசின் சார்பில்  குறுவை தொகுப்பு திட்டம் அறிவிக்கப்  பட்டுள்ளதை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலக்குழு வரவேற்கிறது. 

மேட்டூர் அணையில் இவ்வளவு குறை வான அளவில் நீர்மட்டம் உள்ளதற்கு கடந்தாண்டு கர்நாடக அரசு தமிழ்நாட்டிற்கு வழங்க வேண்டிய தண்ணீரை முழுமை யாக வழங்காமல் சுமார் 99 டி.எம்.சி.யை  நிலுவையில் வைத்துள்ளது முக்கிய காரண மாகும். தற்போதைய சூழலில் ஏறக்குறைய குறுவை சாகுபடி மேற்கொள்ள முடியாத நிலை ஏற்பட்டுள்ளது. தென்மேற்குப் பருவ மழை துவங்கியுள்ள நிலையில், காவிரியில் கர்நாடக அரசு மாத வாரியாக வழங்க வேண்டிய தண்ணீரை வழங்கினால் மட்டுமே டெல்டா மாவட்டங்களில் சாகுபடியை மேற் கொள்ள முடியும்.

எனவே, உச்ச நீதிமன்ற இறுதித் தீர்ப்பின்படி தமிழ்நாட்டிற்கு தரவேண்டிய அளவு தண்ணீரை கர்நாடக மாநில அரசு திறந்து விடுவதற்கான நடவடிக்கைகளை காவிரி மேலாண்மை வாரியம் மேற்கொள்ள வேண்டும். தமிழ்நாடு அரசும் காவிரியில் தண்ணீர் பெறுவதற்கான சட்ட ரீதியான முயற்சிகளை மேற்கொள்ள வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கோருகிறது.

இந்தியா கூட்டணிக்கு அமோக வெற்றியை வழங்கிய தமிழகம் - புதுவை வாக்காளர்களுக்கு நன்றி!

நடைபெற்று முடிந்துள்ள மக்களவை தேர்தலில் தமிழகம் மற்றும் புதுவையில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி 40க்கு 40 என அனைத்து இடங்களையும் கைப்பற்றி மகத்தான வெற்றியை குவித்துள் ளது. இந்த வெற்றிக்கு வித்திட்ட தமிழகம் மற்றும் புதுவை வாக்காளப் பெருமக்களு க்கு இந்திய கம்யூனிஸ்ட் கட்சி (மார்க்சிஸ்ட்) தமிழ்நாடு மாநிலக்குழு தனது நன்றியையும், வாழ்த்துக்களையும், பாராட்டுக்களையும் தெரிவித்துக் கொள்கிறது. இந்த சரித்திர சாதனையை சாத்தியமாக்கிய மாண்புமிகு தமிழக முதலமைச்சர் மற்றும் தோழமைக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர் கள், தோழர்கள் என அனைவருக்கும் கட்சி யின் மாநிலக்குழு பாராட்டுக்களை தெரி வித்துக் கொள்கிறது.

தமிழ்நாட்டில் மகத்தான வெற்றி பெறு வோம் என முழக்கமிட்ட பாஜக படுதோல்வி  அடைந்துள்ளது. அதிமுக முன்னெப்போதும் இல்லாத அளவுக்கு பல தொகுதிகளில் காப்புத் தொகையை இழந்துள்ளதும், சில தொகுதிகளில் 4-ஆவது இடத்திற்கு தள்ளப் பட்டுள்ளது என்பதும் இந்தியா கூட்டணிக்கு மக்கள் அளித்துள்ள பேராதரவுக்கு அடையா ளமாகும்.

தமிழகத்தில் திமுக தலைமையிலான இந்தியா கூட்டணி சார்பில் மதுரை மற்றும் திண்டுக்கல் தொகுதியில் போட்டியிட்ட மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் வேட்பா ளர்கள் மகத்தான வெற்றி பெற்றுள்ளனர். வேட்பாளர்களுக்கு வாக்களித்த மதுரை  மற்றும் திண்டுக்கல் தொகுதி வாக்காளர்க ளுக்கும், வெற்றிக்குத் துணை நின்ற கூட்டணிக் கட்சி தலைவர்கள், நிர்வாகிகள், தொண்டர்கள், கட்சித் தோழர்கள் என அனை வருக்கும் கட்சியின் சார்பில் நன்றியை தெரிவித்துக் கொள்கிறோம்.

கடந்த தேர்தலில் அறுதிப் பெரும் பான்மையுடன் ஆட்சி அமைத்த பாஜக, இந்த முறை தெலுங்கு தேசம் மற்றும் ஐக்கிய ஜனதா தளத்தின் ஆதரவுடன் கூட்டணி ஆட்சி அமைக்கும் நிலைக்கு தள்ளப் பட்டுள்ளது. இது பாஜகவுக்கு ஏற்பட்டுள்ள பின்னடைவே ஆகும். கடந்த முறை போல அவர்கள் நினைத்ததையெல்லாம் சட்ட மாக்க முடியாத நிலையை இந்த தேர்தல் முடிவு ஏற்படுத்தியுள்ளது. ஒரே நாடு, ஒரே தேர்தல், பொது சிவில் சட்டம் என அவர்கள் கொண்டு வர நினைத்த சட்டங்க ளையும், திட்டங்களையும் அவர்களால் நிறை வேற்ற முடியாத நிலையை ஏற்படுத்தி யுள்ளது என்பது இந்தியாவின் ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகளுக்கு கிடைத்துள்ள வெற்றியாகும்.

தேர்தல் நேரத்தில் பாஜகவின் தேர்தல் பத்திர மோசடியை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சி அம்பலப்படுத்தியதும் அவர்களின் தோல்விக்கு ஒரு காரணமாக அமைந்துள் ளது. கடந்த பத்தாண்டு கால நரேந்திர மோடி ஆட்சியில் சர்வாதிகார மக்கள் விரோத,  மனித விரோத காட்டாட்சிக்கு எதிராக தொடர் ச்சியாக இடதுசாரி மற்றும் ஜனநாயக சக்திகள் நடத்தி வந்துள்ள போராட்டத்தின் விளைவாகவே பாஜக கூட்டணிக்கு கடி வாளம் இடுவதாக இந்த தேர்தல் முடிவு கள் அமைந்துள்ளது. இந்திய மக்களின் வாழ்வாதாரத்தை சிதைத்த பாஜகவுக்கு மக்கள் தங்கள் தீர்ப்பின் மூலம் பதி லளித்துள்ளனர்.

மாநில சுயாட்சி, மதச்சார்பின்மை, ஜனநாயகம் போன்ற அரசியல் சட்ட விழுமி யங்களுக்காக ஓங்கிக் குரல் கொடுக்கும் மன்றமாக நாடாளுமன்றம் அமைந்துள்ளது. கூட்டணி ஆட்சி என்றபோதும் பாஜக தனது குதர்க்கப் புத்தியை காட்டவே செய்யும். தேர்தல் களத்தில் மட்டுமின்றி போராட்ட களத்திலும் இந்த பாசிச பாணி சக்திகளை முறியடிக்க சமரசமற்ற சமர்க்களம் காண உறுதியேற்க வேண்டுமென அனைத்துப் பகுதி மக்களையும் சிபிஐ (எம்) மாநி லக்குழு அறைகூவி அழைக்கிறது. 

இவ்வாறு தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

விக்கிரவாண்டி தொகுதி இடைத்தேர்தலில் திமுக வேட்பாளரை வெற்றி பெறச் செய்வோம்!

“விழுப்புரம் மாவட்டம், விக்கிரவாண்டி தொகுதி சட்டமன்ற உறுப்பினராக இருந்த  நா. புகழேந்தி அவர்கள் மரணம் அடைந்த தைத் தொடர்ந்து, வரும் ஜூலை 10 அன்று இடைத் தேர்தல் நடைபெறும் என தேர்தல் ஆணையம் அறி வித்துள்ளது. அண்மையில் நடந்து முடிந்த 18வது நாடாளுமன்ற தேர்தலில் தமிழ்நாடு மற்றும் புதுச்சேரி மக்கள் இந்தியா கூட்டணியை 40 தொகுதிகளிலும் வெற்ற பெற வைத்துள்ளனர். பாஜக மற்றும் அதிமுக  தலைமையிலான கூட்டணி முழுமையாக தோல்வி  அடைந்துள்ளது. மதச்சார்பின்மை, ஜனநாயகம் மற்றும் இந்திய அரசியல் சாசனம் ஆகியவற்றில் தமிழ்நாட்டு மக்களுக்கு இருக்கும் நம்பிக்கையை நாடாளுமன்ற தேர்தல் முடிவுகள் வெளிப்படுத்தியுள்ளது.

மேற்படி நம்பிக்கை மற்றும் மாநில உரிமைகளை பாதுகாக்க, விக்கிரவாண்டி தொகுதி வாக்காளர்கள், திமுக சார்பில் நிறுத்தப்பட்டுள்ள வேட்பாளர் அன்னி யூர் சிவா அவர்களை மகத்தான முறையில் வெற்றி  பெறச் செய்ய வேண்டுமென மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட்  கட்சியின் மாநிலக்குழு வேண்டுகோள் விடுக்கிறது. விக்கிரவாண்டி தொகுதி மற்றும் விழுப்புரம் மாவட்ட  மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி உறுப்பினர்களும், ஆத ரவாளர்களும் அன்னியூர் சிவா அவர்களின் வெற்றி யை உறுதி செய்திட பாடுபட வேண்டுமென இந்திய கம்யூனிஸ்ட் கட்சியின் (மார்க்சிஸ்ட்) மாநிலக்குழு கேட்டுக் கொள்கிறது” என்றும் மாநிலக்குழு கூட்டத்தில் தீர்மானம் நிறைவேற்றப்பட்டு உள்ளது.

;