districts

திருச்சி முக்கிய செய்திகள்

நெல்லை தாக்குதல் சிபிஎம் கண்டன  ஆர்ப்பாட்டம்

திருவாரூர், ஜுன் 15-மார்க்சிஸ்ட் கம்யூ னிஸ்ட் கட்சியின் நெல்லை அலுவலகத் தில் தஞ்சம் அடைந்த சாதி மறுப்பு திருமண தம்பதி களை கொலை வெறி யோடு தேடிய கும்பல், சிபிஎம் அலுவலகத்தை  சேதப்படுத்திய கும்ப லையும், முதல் குற்றவா ளியான பந்தல் ராஜா உள்ளிட்டோரை கைது செய்யக் கோரியும் சிபிஎம்  வலங்கைமான் ஒன்றியம்  சார்பில் கண்டன ஆர்ப்பாட் டம் நடைபெற்றது. வலங் கைமான் ஒன்றியம் ஆலங் குடி கடைவீதியில் நடை பெற்ற ஆர்ப்பாட்டத் திற்கு ஒன்றியச் செயலா ளர் என்.இராதா தலைமை  வகித்தார். மாவட்டக் குழு  உறுப்பினர் எஸ்.தம்பு சாமி, கே.சுப்பிரமணியன் ஆகியோர் கண்டன உரை யாற்றினர். 

கூரை வீட்டில்  தீ விபத்து

பாபநாசம், ஜூன் 15 - தஞ்சாவூர் மாவட்டம் அம்மாப்பேட்டை அருகே  கோவிலூர் வள்ளி நக ரைச் சேர்ந்தவர் அமுசு (75).  கணவர் இறந்து விட்ட தால், அமுசு கூரை வீட்டில்  தனியாக வசித்து வரு கிறார். 

இந்நிலையில் வியா ழனன்று மாலை அமுசு வெளியில் சென்ற நிலை யில், அவரது கூரை வீடு  தீப்பற்றி எரிந்தது. தகவ லறிந்து அங்கு வந்த தஞ்சாவூர் தீயணைப்புத் துறையினர், மேலும் தீ  பரவாமல் தடுத்து அணைத் தனர். இருந்தும் அவரது கூரை வீடு முழுவதும் எரிந்து சேதமானது. இதில் வீட்டில் இருந்த ஆதார் கார்டு, ரேசன் கார்டு, வீட்டு மனைப் பட்டா, ரூ.3000 பணம், துணிகள், பாத்திரங்கள் உள்ளிட்டவை தீயில் கரு கின. இதுகுறித்து அம்மாப் பேட்டை போலீசார் விசா ரணை மேற்கொண்டனர்.

போதை மாத்திரைகளுடன் வாலிபர் கைது
திருச்சிராப்பள்ளி, ஜூன் 15- திருச்சி கோட்டை காவல் ஆய்வாளர் பெரியசாமி தலைமையி லான போலீசார் கோட்டை சரகத்திற்கு உட்பட்ட பகுதியில் ரோந்து சென்றனர். அப் போது பழைய ரயில்வே குட்செட் ரோடு கிரவுண்ட்  பகுதியில் சந்தேகத்திற்கு  இடமாக நின்ற வாலிபரை பிடித்து விசாரித்தனர். விசாரணையில் அவர் போதை மாத்திரைகள் உட்கொண்டதும், அவரி டம் 90 மாத்திரைகள் இருந்ததும் தெரிய வந்தது.  அவற்றை பறிமுதல் செய்த போலீசார், வாலி பரை கைது செய்து விசா ரணை நடத்தினர். பின்னர்  அவரை ஜாமீனில் விட்ட னர்.

கோமாரி நோய் தடுப்பூசி முகாம்

பாபநாசம், ஜூன் 15 - தஞ்சாவூர் மாவட்டம் மெலட்டூர் அருகே கொத்தங்குடி ஊராட்சி உதாரமங்கலம், எடக்குடியில் கால் நடை மருத்துவத் துறை சார்பில் கோமாரி நோய் தடுப்பூசி முகாம்  நடைபெற்றது. முகாமை ஊராட்சித்  தலைவர் பழனி தொடங்கி வைத்தார். இதில் கால்நடை உதவி மருத்துவர்  ரகுநாத், பூங்கனூர் குட்டை இன மாடு கள், ஹரியானா மாநில நாட்டு இன  மாடுகள், கலப்பின மாடுகள் என  200-க்கும் மேற்பட்ட கால் நடை களுக்கு தடுப்பூசி செலுத்தினார். 

;