districts

img

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் வெடிவிபத்து: ஒருவர் உயிரிழப்பு

சாத்தூர் அருகே பட்டாசு ஆலையில் ஏற்பட்ட வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். 5 பேர் காயமடைந்துள்ளனர்.

விருதுநகர் மாவட்டம், சாத்தூர் அருகே  கீழத்தாயில்பட்டி பகுதியில் உள்ள ஹிந்துஸ்தான் பட்டாசு ஆலையில் இன்று காலை  வெடி விபத்து ஏற்பட்டுள்ளது.

இந்த வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்தார். இதில் 5 வடமாநில தொழிலாளர்கள் காயமடைந்துள்ளனர்.

பட்டாசு ஆலை உரிமையாளர் கணேசன், மேலாளர், போர்மேன் 2 பேர் என மொத்தம் 4 பேர்  மீது வழக்குப்பதிவு செய்யப்பட்டுள்ளது.

கடந்த சில தினங்களுக்கு முன்பு சாத்தூர் அருகே சின்னகாமன்பட்டியில் ஏற்பட்ட பட்டாசு ஆலை வெடி விபத்தில் 10 பேர் உயிரிழந்த நிலையில், தற்போது மீண்டும் அதே பகுதியில் வெடி விபத்தில் ஒருவர் உயிரிழந்து, 5 பேர் காயமடைந்துள்ளது அப்பகுதியில் சோகத்தை ஏற்படுத்தியுள்ளது.