வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து ஆகஸ்ட் 8 அன்று நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம்
மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல்
ட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தத்தை எதிர்த்து வரும் ஆகஸ்ட் 8 அன்று நாடு முழுதும் கண்டன ஆர்ப்பாட்டம் மேற்கொள்ளுமாறு மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவல் விடுத்திருக்கிறது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழுக் கூட்டம் ஜூலை 18 (வெள்ளிக்கிழமை) அன்று புதுதில்லியில் உள்ள மத்தியக்குழு அலுவலகத்தில் நடை பெற்றது. அதனைத் தொடர்ந்து வெளியிடப் பட்ட அறிக்கை வருமாறு: பீகாரில் வாக்காளர் பட்டியல்களில் சிறப்பு தீவிர திருத்தம் (SIR-Special Intensive Revision) மேற்கொள்ள தேர்தல் ஆணையம் உத்தரவிட்டிருக்கிறது. இப்போது தேர்தல் ஆணையம் அதனை நாடு முழுவதற்கும் விரிவுபடுத்தவும் விரும்புகிறது. வாக்காளர் பட்டியல்களைத் திருத்துவது என்ற பெயரில், வாக்காளர்கள் குடியுரிமையைச் சரிபார்க்கும் அதிகாரத்தை தேர்தல் ஆணையம் தமதாக்கிக் கொண்டிருக்கிறது. இது அதற்கு அளிக்கப்பட்டுள்ள அரசமைப்புச்சட்ட அதிகார வரம்பெல்லைக்கு அப்பாற்பட்ட செயலாகும்.
வாக்காளர் பட்டியல்களிலிருந்து அயல்நாட்டைச் சேர்ந்தவர்களை களையெடுக் கிறோம் என்ற அடிப்படையற்ற சாக்குப் போக்கைக் கூறி சிறுபான்மையினத்தினர் மற்றும் தேர்ந்தெடுக்கப்பட்ட குழுக்கள் சில வற்றை வாக்குரிமையற்றவர்களாக மாற்றிக் கொண்டிருக்கிறது. இந்த ஒட்டுமொத்த செயல்முறையும் பல்வேறு மீறல்களால் நிறைந் துள்ளன. மேலும் இது அரசமைப்புச்சட்டம் உத்தரவாதம் அளித்துள்ள வாக்களிக்கும் உரிமையைப் பலருக்கு மறுப்பதற்கு இட்டுச் செல்லக்கூடும். ஆர்எஸ்எஸ் நிகழ்ச்சி நிரலை செயல்படுத்த உடந்தை கோவிட் தொற்றுநோய்க்கு முன்னர் விரி வான அளவில் மக்களால் எதிர்க்கப்பட்ட தேசிய குடிமக்கள் பதிவேடு (NRC-National Register of Citizens), இப்போது கொல்லைப்புற வழியாக செயல்படுத்த முயற்சிக்கப்படுகிறது. இதுநாள்வரையிலும் பாஜக-விற்கு ஆதரவாக செயல்பட்டு வந்த தேர்தல் ஆணையம் இப்போது ஆர்எஸ்எஸ்/சங் பரிவாரத்தின் நிகழ்ச்சிநிரலை செயல்படுத்துவதற்கும் உடந்தையாகிவிட்டது. நாடு முழுவதும் விரிவுபடுத்தப்படவுள்ள ஜனநாயக உரிமைகள் மீதான இந்தத் தாக்கு தலை அனுமதிக்கக்கூடாது. தெலுங்கு தேசம் கட்சி போன்ற பாஜகவின் கூட்டணிக் கட்சி களில் சிலவும் கூட, ‘சிறப்பு தீவிர திருத்தம்’ குறித்து தங்கள் கவலைகளை வெளிப்படுத்தி யுள்ளன என்பது குறிப்பிடத்தக்கது.
தேர்தல் ஆணையத்தின் இந்த ஜனநாயக விரோத நடவடிக்கைக்கு எதிராக 2025 ஆகஸ்ட் 8 அன்று நாடு முழுவதும் எதிர்ப்புக் கிளர்ச்சிப் போராட்டங்களை நடத்திட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறைகூவி அழைக்கிறது. மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு சட்டமுன்வடிவை ரத்து செய்க! பாஜக அரசாங்கத்தால் நிறைவேற்றப் பட்டுள்ள மகாராஷ்டிரா பொது பாதுகாப்பு சட்ட முன்வடிவு, மக்களின் ஜனநாயக உரிமைகள் மீதான பெரும் தாக்குதலாகும். தீவிர இடதுசாரி சக்திகளை எதிர்த்துப் போராடுகிறோம் என்ற பெயரில், இந்த சட்டமுன்வடிவு, எதிர்ப்புதெரி விப்பவர்களை பொது பாதுகாப்பு மற்றும் தேசிய பாதுகாப்புக்கு அச்சுறுத்தலாக சித்தரிக்க முயல்கிறது. இந்த சட்டமுன்வடிவு, தீவிர இடதுசாரி சக்திகள் மற்றும் ஒத்த அமைப்புகளின் வரையறையை வேண்டு மென்றே தெளிவற்றதாக விட்டுவிடுகிறது.
இத னால் எந்தவொரு எதிர்ப்பையும் குறிவைப்ப தற்கு போதுமான வாய்ப்பு கிடைக்கிறது. சட்ட முன்வடிவில் உள்ள கடுமையான விதிகள், கருத்து வேறுபாடுகளைக் கட்டுப்படுத்தவும், அரசியல் எதிர்ப்பை மௌனமாக்கவும் பயன்படுத்தப்படும் அபாயம் உள்ளது. எதேச்சதிகாரமான இந்த சட்டமுன் வடிவை எதிர்த்துப் போராடுமாறு அனைத்து அரசியல் கட்சிகள் மற்றும் ஜனநாயக சக்திகளுக்கும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வேண்டுகோள் விடுக்கிறது. மேலும் மகாராஷ் டிரா பொது பாதுகாப்பு சட்டமுன்வடிவு உடன டியாக ரத்து செய்யப்பட வேண்டும் என்றும் கோருகிறது. ஜம்மு-காஷ்மீர் : பாதுகாப்பு தோல்வியை ஒப்புக் கொண்ட துணைநிலை ஆளுநர் ஜம்மு-காஷ்மீர் துணைநிலை ஆளுநர், சமீபத்தில் ஊடகங்களுக்கு அளித்த பேட்டி யில், பஹல்காமில் நடந்த பயங்கரவாதத் தாக்குதல் பாதுகாப்புத் தோல்வியின் விளை வாகும் என்று ஒப்புக்கொண்டுள்ளார். ஜம்மு- காஷ்மீர் ஒன்றிய அரசால் யூனியன் பிரதேச மாக நேரடியாக நிர்வகிக்கப்படுகிறது. மேலும் மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட முதல்வர் கூட பாதுகாப்பு, சட்டம்-ஒழுங்கு தொடர்பான விவாதங்கள் மற்றும் முடிவுகளில் பங்கேற்க தடை விதிக்கப்பட்டுள்ளது. பாதுகாப்புக் குறைபாட்டை ஒப்புக்கொள்வது என்பது, உண்மையில், பாதுகாப்பிற்கு நேரடியாகப் பொறுப்பான ஒன்றிய உள்துறை அமைச்சரின் தோல்வியை ஒப்புக்கொள்வதாகும். இத்த கைய கடுமையான குறைபாட்டிற்கு ஒன்றிய அரசாங்கம் பொறுப்பேற்க வேண்டும். மேலும் சம்பந்தப்பட்ட நபர்கள் மீது நடவடிக்கை எடுக்கப்பட வேண்டும்.
மாநில அந்தஸ்தை மீட்க... துணைநிலை ஆளுநர் மக்களால் தேர்ந்தெ டுக்கப்பட்ட மாநில அரசின் செயல்பாட்டை அரித்து வீழ்த்திக்கொண்டிருக்கிறார். ஒன்றிய அரசின் உத்தரவின் பேரில், நிலப்பிரபுத்துவமகாராஜாவுக்கு எதிராகவும், அவரது ஆட்சியிலிருந்து ஜம்மு-காஷ்மீரை விடுவிப்ப தற்காகவும் போராடிய 22 தியாகிகளின் நினை வாக கொண்டாடப்படும் விடுமுறையை ரத்து செய்திருக்கிறார். அதற்கு பதிலாக, விவ சாயிகளைக் கொன்று விடுதலைப் போராட்ட த்தை அடக்க முயன்ற மகாராஜாவின் பிறந்த நாளை விடுமுறையாக அறிவித்திருக்கிறார். முத லமைச்சர் உட்பட பல்வேறு அரசியல் கட்சி களின் தலைவர்கள் தியாகிகளுக்கு அஞ்சலி செலுத்த அனுமதிக்கப்படவில்லை. இது ஜனநாயக உரிமைகள் மற்றும் கூட்டாட்சி அமைப்பின் மீதான கடுமையான தாக்குத லாகும். ஜம்மு-காஷ்மீருக்கு மாநில அந்தஸ்தை மீட்கவும், மாநில அரசாங்கத்தைத் தேர்ந்தெ டுத்த மக்களின் ஆணையை மதிக்கவும் உடனடி நடவடிக்கைகள் எடுக்கப்பட வேண்டும் என்று மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி கோருகிறது. வங்கமொழி பேசும் மக்களை நாடு கடத்துவதை நிறுத்துங்கள் வங்காள மொழி பேசும் மக்கள் மீது குறிவைத்து தாக்குதல் நடத்தப்படுவதாக பல மாநிலங்களில் இருந்து தகவல்கள் வெளியாகி வருகின்றன. தில்லி, ஒடிசா, அசாம், ஹரியானா, சத்தீஸ்கர் மற்றும் மகாராஷ்டிரா போன்ற பல பாஜக ஆளும் மாநிலங்களில், வங்காளிகள் அடையாளம் காணப்பட்டு, அவர்களின் ஆவணங்களை முறையாக சரிபார்க்காமலும், உரிய நடை முறைகளைப் பின்பற்றாமலும் அவர்கள் வங்கதேசத்தைச் சேர்ந்தவர்கள் என முத்திரை குத்தப்படுகிறார்கள். அத்தகைய நபர்கள் காவல்துறையினரால் தடுத்து வைக்கப்பட்டு, மனிதாபிமானமற்றமுறையில் சித்திரவதைக்கு ஆளாக்கப்படுகிறார்கள்.
நிலம் மற்றும் கடல் வழியாகவும் கூட அவர்கள் வலுக்கட்டாயமாக வங்கதேசத்திற்குத் திருப்பி அனுப்பப்படும் சம்பவங்களும் நடைபெற்றுள்ளன. வங்காளிகள் மீதான இந்தத் தாக்குதல்கள் இந்திய அரசமைப்புச்சட்டத்தால் அனைத்துக் குடிமக்களுக்கும் அளிக்கப்பட்டுள்ள சுதந்திரமாக நடமாடும் உரிமைக்கு எதிராக மேற்கொள்ளப்பட்டுள்ள நடவடிக்கை என்று கூறி இதனை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது. இந்த சட்டவிரோத தடுப்புக்காவல்களை நிறுத்தி மக்களின் உரிமைகளைப் பாதுகாக்குமாறு கட்சி அரசாங்கத்தைக் கோருகிறது. அசாமில் இன பிளவுகளை உருவாக்கும் வெளியேற்றங்கள் அசாம் மாநில அரசு ஏராளமான மக்களை அவர்களின் உரிமையான நிலங்களிலிருந்து வெளியேற்றி வருகிறது. முதலமைச்சர் இந்த வெளியேற்றங்களைப் பற்றி பெருமையாகப் பேசி, சமூகத்தில் மத வெறித் தீயை விசிறிவிட்டுக் கொண்டிருக் கிறார். இந்த நிலங்களுக்கு அடியில் வள மான கனிம வளங்கள் இருப்பது பற்றிய சமீபத்திய அறிக்கைகள், தனியார் நிறு வனங்கள் அவற்றைச் சுரண்ட அனுமதிக்கும் ஆர்வத்துடன் இணைந்து, இந்த வெளி யேற்றங்களுக்குப் பின்னால் மற்றொரு காரணத்தை வழங்குகின்றன. ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் வடகிழக்கு மாநிலங்களில் மக்கள் மத்தியில் உள்ள இன வேறுபாடுகளைப் பயன்படுத்தி அவர்களிடையே பிளவுகளை ஏற்படுத்தி தங்கள் ஆதிக்கத்தை நிலைநாட்ட முயற்சி கள் மேற்கொண்டு வருகின்றன.
இவ்வாறான நடவடிக்கைகள் நம் நாட்டின் ஒற்று மைக்கும் ஒருமைப்பாட்டுக்கும் தீங்கு விளை விப்பவைகளாகும். இந்த நடவடிக்கைகள் நமது நாட்டில், குறிப்பாக நீண்ட சர்வதேச எல்லையைப் பகிர்ந்து கொள்ளும் ஒரு பிராந்தியத்தில், ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டிற்கு தீங்கு விளைவித்திடும். கேரள ஆளுநரின் அத்துமீறல் நடவடிக்கைகளை அம்பலப்படுத்துவோம் கேரள ஆளுநர் தனது அலுவலகத்தை, ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் இந்துத்துவா சித்தாந்தத்தை ஊக்குவிக்கத் தவறாகப் பயன்படுத்திக்கொண்டிருக்கிறார். ராஜ்பவனால் ஏற்பாடு செய்யப்படும் பொது விழாக்களில், அரசமைப்புச்சட்டத்தால் அங்கீகரிக்கப்படாத அகண்ட பாரதத்தின் வரைபடத்தையும், பாரத மாதாவின் படங்களை யும் வேண்டுமென்றே காட்சிப்படுத்துகிறார். தேர்ந்தெடுக்கப்பட்ட இடது ஜனநாயக முன்னணி அரசாங்கத்தின் ஆலோசனைகளை அவர் வெளிப்படையாக மீறுகிறார். அரசமைப்புச்சட்ட விதிமுறைகளின்படி அதிகாரப்பூர்வ நிகழ்வுகளை நடத்த மறுக் கிறார். அவர் தனது செயல்கள் மூலம், இடது ஜனநாயக முன்னணி அரசாங்கம் உயர்த்திப் பிடித்திடும் மதச்சார்பற்ற விழுமியங்களை அரித்துவீழ்த்திடும் விதத்தில், ஆர்எஸ்எஸ் மற்றும் அதன் துணை அமைப்புகளின் செயல்பாடுகளைத் தீவிரமாக ஊக்குவித்து வருகிறார்.
ஆளுநரின் இந்த நடவடிக்கைகளுக்கு எதிராக சமூகத்தின் பல்வேறு பிரிவுகளால், குறிப்பாக மாணவர்களால் ஏற்பாடு செய்யப்பட்ட பல்வேறு ஆர்ப்பாட்டங்களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி பாராட்டுகிறது. தமிழ்நாடு அரசு தாக்கல் செய்திருந்த வழக்கு ஒன்றில் ஆளுநர்களின் அதிகாரங்கள் குறித்து உச்சநீதிமன்றம் தீர்ப்பளித்ததைத் தொடர்ந்து, உச்சநீதிமன்றத்திடம் கேரள அரசு தாக்கல் செய்த மனுக்களைத் திரும்பப் பெற பாஜக தலைமையிலான மத்திய அரசு அனுமதிக்க மறுத்து வருகிறது. உச்ச நீதிமன்றத் தீர்ப்பு தமிழ்நாட்டிற்கு மட்டுமல்ல, அனைத்து மாநிலங்களுக்கும் பொருந்தும் என்பதால், இந்த மனுக்கள் இப்போது பயனற்ற வை. ஆளுநர் மற்றும் ஒன்றிய அரசின் நோக்கம், வழக்கை நீடிப்பதும், பல்கலைக்கழ கங்களுக்கு வழக்கமான துணைவேந்தர்கள் நியமனம் மறுக்கப்படுவதை உறுதி செய்வதும் ஆகும். வழக்கம் போல் துணைவேந்தர்களை நியமிக்கத் தவறியதற்காக கேரள உயர் நீதிமன்றமும் ஆளுநரை விமர்சித்துள்ளது. இவ்வாறு கேரளாவின் உயர்கல்வி அமைப்பு முறையை இழிவுபடுத்தவும் அழிக்கவும் ஒரு முயற்சி மேற்கொள்ளப்பட்டிருக்கிறது. கேரளாவில் இடது ஜனநாயக முன்னணி அரசின் சுமூகமான செயல்பாட்டைத் தடுக்கும் இந்த முயற்சிகளை ஒருபோதும் சகித்துக் கொள்ள முடியாது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அதன் கூட்டணிக் கட்சிகளுடன் இணைந்து கேரள மக்களின் நலனுக்காக தொடர்ந்து பாடுபடும் மற்றும் பாஜகவின் சூழ்ச்சிகளை அம்பலப்படுத்திடும். இறையாண்மையை சமரசம் செய்யும் வர்த்தக ஒப்பந்தங்களுக்கு எதிர்ப்பு அமெரிக்கா மற்றும் ஐரோப்பிய ஒன்றி யம் போன்ற நாடுகளுடன் அரசாங்கம் கையெழுத்திட திட்டமிட்டுள்ள பல்வேறு வர்த்தக ஒப்பந்தங்கள் குறித்த செய்திகள் குறித்து அரசியல் தலைமைக்குழு தன் கவலை யை வெளிப்படுத்தியது. சுதந்திர வர்த்தக ஒப்பந்தத்தில் கையெழுத்திடும் களியாட்டத்தில் ஈடுபடுவதற்கு முன்பு அரசாங்கம் பல்வேறு பங்குதாரர்களுடன் கலந்தாலோசிக்க வேண்டும். ஒன்றிய அரசு ஏற்கனவே அமெரிக்காவின் அழுத்தத்திற்கு அடிபணிந்து நமது பொருளாதாரத்தின் பல்வேறு துறைகளை சுரண்டலுக்குத் திறந்து விட்டிருக்கிறது. வர்த்தக ஒப்பந்தத்தை முடிக்க அரசாங்கம் அவசரப்படுவது பால், விவ சாயம், பாதுகாப்பு, மருந்துகள், நிதி போன்ற முக்கிய துறைகளில் நமது நாட்டின் நலன் களை காவு கொடுக்க வழிவகுக்கிறது. நமது இறையாண்மையை சமரசம் செய்து நமது நாட்டின் நலன்களை தியாகம் செய்யும் அனைத்து வர்த்தக ஒப்பந்தங்களையும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி எதிர்க்கிறது.
ஜூலை 9 பொது வேலைநிறுத்தம் வெற்றி : தொழிலாளர் வர்க்கத்திற்கு வாழ்த்து பத்து மத்திய தொழிற்சங்கங்கள் மற்றும் பல்வேறு அகில இந்திய கூட்டமைப்புகள் அழைப்பு விடுத்திருந்த பொது வேலைநிறுத்தம் மகத்தான வெற்றியைப் பெற்றுள்ளது. விவசாயிகள் மற்றும் விவசாயத் தொழிலாளர்களும் அந்தந்த அமைப்பு களின் தலைமையில் இந்த போராட்டங் களில் பெருமளவில் இணைந்துள்ளனர். வெற்றி கரமான பொது வேலைநிறுத்தத்திற்காக தொழி லாளர்கள் மற்றும் பிற உழைக்கும் பிரிவு களை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி வாழ்த்துகிறது. வரவிருக்கும் காலங்களிலும் நடைபெறும் அனைத்துப் போராட்டங்களிலும் அவர்களின் ஒற்றுமை இதேபோன்று தொடர வேண்டும் என்று வலியுறுத்துகிறது. மத்தியக் குழுக் கூட்டம் மத்தியக்குழுவின் அடுத்த கூட்டம் வரும் 2025 செப்டம்பர் 13-15 தேதிகளில் புதுதில்லியில் நடைபெறும். இந்தக் கூட்டத்தில், பிற நிகழ்ச்சி நிரல்களுடன், பீகார் மற்றும் பிற மாநிலங்களுக்கு வரவிருக்கும் தேர்தல்களில் கட்சியின் தேர்தல் தயாரிப்புகள் குறித்தும் விவாதிக்கப்படும்.