articles

img

தெற்கில் பாஜகவின் வளர்ச்சியைத் தடுத்து நிறுத்திடுவோம்!

மக்களவைத் தேர்தலின் ஒட்டு மொத்த முடிவுகள் நிச்சய மாக பாஜக-விற்கு ஒரு பின்னடைவேயாகும். 240 இடங்களைப் பெற்றுள்ள நிலையில், அது 2014 மற்றும் 2019 தேர்தல்களில் பெற்றதைப்போல அறுதிப் பெரும்பான்மையைப் பெறுவ தில் தோல்வியடைந்துள்ளது. நரேந்திர மோடி, மக்களவையில் பெரும்பான்மைக் கான எண்ணிக்கையை அளிப்பதற்காக, தற்போது தெலுங்கு தேசம், ஐக்கிய ஜனதா தளம் போன்ற கட்சிகளுடன் தேசிய ஜனநாயகக் கூட்டணி அரசாங்கத்திற்குத் தலைமை தாங்குகிறார். தேர்தலில் மக்கள் அளித்துள்ள தீர்ப்பு சாதகமான ஒன்றேயாகும். இவ்வாறு பாஜக பின்னடைவைச் சந்தித்திருப்ப தற்கு, அது உத்தரப்பிரதேசத்தில் பெரிய அளவில் இழப்பினை எதிர்கொண்டதும், மகாராஷ்டிரா, ராஜஸ்தான், ஹரியானா மற்றும் மேற்கு வங்கத்திலும் இழப்பு களை எதிர்கொண்டதே காரணமாகும்.

கவலையளிக்கும் விஷயம்

எனினும், தேர்தல் முடிவுகளை நுணுகி ஆய்வு செய்திடும்போது, அதன் ஆதாயங்களை ஒதுக்கித்தள்ளிவிட முடியாது. ஒடிசாவில் அது முன்னெப் போதும் இல்லாத அளவிற்கு வெற்றி பெற்றுள்ளது. அங்கே மொத்தம் உள்ள 21 மக்களவை இடங்களில் முதன்முறை யாக 20 இடங்களைக் கைப்பற்றி இருக்கி றது. சட்டமன்றத் தேர்தலிலும் அறுதிப் பெரும்பான்மையைப் பெற்றிருக்கிறது. இவ்வாறாக தென் மாநிலங்களிலும் படிப் படியாக அது முன்னேறியிருப்பது கவலை யளிக்கக்கூடிய விஷயமாகும். இடங்களின் எண்ணிக்கையைப் பொறுத்தமட்டில், பாஜக எவ்விதமான முன்னேற்றத்தையும் பெறவில்லை என்பதுபோல் தோன்றினாலும், 2019இல் ஐந்து தென் மாநிலங்களில் அது 29 இடங்களைப் பெற்றிருந்த அதே சம யத்தில், இப்போது 2024இலும் அதே எண்ணிக்கையை அதனால் தக்க வைத்துக் கொள்ள முடிந்திருக்கிறது. ஆனாலும், மாநிலவாரியாக ஓர் ஆழமான ஆய் வினை மேற்கொள்ளும்போது, ஒவ்வொரு மாநிலத்திலும் அது பெற்றுள்ள வாக்கு சத வீதத்தை ஆராயும்போது அது ஒரு வித்தி யாசமான சித்திரத்தை அளிக்கிறது.

பிஆர்எஸ்-சின் வீழ்ச்சியும் மஜத கூட்டணியும்

தெலுங்கானாவில் பாஜக 2019 தேர்தலில் 4 இடங்களைப் பெற்றிருந்தது. அப்போது அது பெற்ற வாக்கு 19.45 விழுக்காடாகும். இப்போது 2014 தேர்த லில் அது தன் எண்ணிக்கையை இரட்டிப் பாக்கி, எட்டு இடங்களைப் பெற்றிருக்கி றது, வாக்குகளும் கணிசமான அளவில் 35.19 விழுக்காடாக உயர்ந்திருக்கிறது. பாரத் ராஷ்ட்ரிய சமிதி (தெலுங்கானா ராஷ்ட்ரிய சமிதி) முன்பு பெற்ற வாக்கு கள் இப்போது வீழ்ச்சியடைந்து, பாஜக- விற்குப் பிரதானமாகப் பயன் அளித்தி ருக்கிறது. கர்நாடகாவில் பாஜக தன் தளத்தை இழந்துவிட்டது. 2019 தேர்தலின்போது அது 51.38 விழுக்காடு வாக்குகளைப் பெற்று 25 இடங்களில் வென்றிருந்தது. இப்போது, அதன் வாக்குப் பங்களிப்பு 46.09 விழுக்காடாக வீழ்ச்சியடைந்து 17 இடங்களைப் பெற்றிருக்கிறது. எனினும், மதச்சார்பற்ற ஜனதா தளத்துடன் கூட்டணி அமைத்து, 5.64 விழுக்காடு வாக்குகளை அது பெற்றிருப்பதன் கார ணமாக தேசிய ஜனநாயகக் கூட்டணியின் ஒட்டுமொத்த வாக்கு எண்ணிக்கை 51.73 விழுக்காடாக மாறியிருக்கிறது. இந்தக் கூட்டணி இடங்கள் இழப்பைக் கட்டுப்படுத்துவதற்கு உதவியிருக்கிறது.

கேரளத்தின்  எச்சரிக்கை சமிக்ஞை

கேரளாவில் பாஜக திருச்சூர் தொகு தியை வென்றுள்ளது. கேரள மாநிலத்தில் முதன்முறையாக மக்களவைக்கான இடத்தை அது வென்றுள்ளது. அதன் வாக்கு சதவீதம் 2019இல் 12.9ஆக இருந் தது, இப்போது 16.67 ஆக உயர்ந்திருக்கி றது. தேசிய ஜனநாயகக் கூட்டணி 19.2 சதவீதம் பதிவு செய்திருக்கிறது. கேரளா வில் இந்த அளவிற்கு இதற்கு முன் அது பெற்றதில்லை. இது அளித்துள்ள எச்ச ரிக்கை சமிக்ஞையை இடது ஜனநாயக சக்திகள் மிகுந்த தீவிரத்துடன் எடுத்துக்கொள்ள வேண்டும்.

10 தொகுதிகளில் இரண்டாமிடம்...

தமிழ்நாட்டில் பாஜக தேர்தல் பிரச்சா ரத்தின்போது மிகப்பெரிய அளவில் வாய்ச்சவடால் அடித்த போதிலும் அத னால் ஓர் இடத்தைக் கூட பெற முடியா மல் தோல்வி அடைந்திருக்கிறது. 2019இல் பாஜக, அஇஅதிமுகவுடன்  கூட்டணி வைத்து போட்டியிட்டதுபோல் அல்லா மல் இப்போது அது அஇஅதிமுகவுடன் இல்லாமல் பாமக மற்றும் அஇஅதி முக-விலிருந்து பிரிந்த ஓ.பி.எஸ். அணியுடன் சேர்ந்து போட்டியிட்டது. 2019இல் 5 இடங்களில் போட்டியிட்ட போது அதன் வாக்கு 3.66 விழுக்காடாக இருந்தது. இப்போது 23 இடங்களில் போட்டியிட்டு அதனை 11.24 ஆக உயர்த்திக் கொண்டிருக்கிறது. அதுமட்டுமல்ல, பத்து தொகுதிகளில் பாஜக, இரண்டா வதாக வந்திருக்கிறது என்பதையும் குறித் துக்கொள்ள வேண்டும். சில இடங்களில் அஇஅதிமுக வாக்குகளையும் அதனால் பெற முடிந்திருக்கிறது என்பதையே இது காட்டுகிறது.

தெலுங்குதேசம் முதுகில்

பாஜக மிகவும் பலவீனமாகவுள்ள ஆந்திராவில், தெலுங்குதேசம் கட்சி யுடன் அது கூட்டணி வைத்ததன்மூலம் பயனடைந்திருக்கிறது. 11.29 சதவீத வாக்குகளைப் பெற்று 3 மக்களவைத் தொகுதிகளைப் பெற்றிருக்கிறது. 2019இல் அது வெறும் 0.96 சதவீத வாக்கு களை மட்டுமே பெற்றிருந்தது. 2024 சட்டமன்றத் தேர்தலிலும்கூட, அது 2.83 சதவீத வாக்குகளையே பெற்றுள் ளது. எனினும், 8 இடங்களைப் பெற்றி ருக்கிறது. தெலுங்குதேசம் கட்சியின் முது கில் உட்கார்ந்துகொண்டு தன் பலத்தை விரிவுபடுத்தலாம் என்று பாஜக நம்பிக்கொண்டிருக்கிறது. இவ்வாறு, பாஜக தென் மாநிலங்கள் ஐந்தில் தன் நிலையினை மெல்ல மெல்ல முன்னேற்றிக்கொண்டிருக்கிறது என்பதைக் காண முடிகிறது. இதில் கர்நாடக மாநிலத்தில் மட்டும் அது இருபது ஆண்டுகளுக்கும் முன்பாகவே தன் பலத்தை வலுவாக நிறுவியிருந்தது.

குறைத்து மதிப்பிடக்கூடாது

ஆர்எஸ்எஸ்/பாஜக பரிவாரங்கள் இவ்வாறாக புதிய தளத்தை ஆக்கிர மித்து, தான் இழந்த இடங்களை மீட்டெ டுக்கும் திறனைக் குறைத்து மதிப்பிடக் கூடாது என்பதையே இவை அடிக்கோ டிட்டுக் காட்டுகின்றன. மோடியின் தலைமையின்கீழ் புதிதாக அமைந்திருக்கும் அமைச்சரவையில், உள்துறை, ராணுவம், நிதி மற்றும் வெளியுறவுத்துறை ஆகியவற்றுடன் மேலும் பல முக்கியமான துறைகளையும் பாஜக-வே பெற்றிருக்கிறது. அரசு எந்திரத்தைப் பயன்படுத்தியும், தன்கீழ் இயங்கிடும் அமைப்புகளின் மூலமாகவும் ஆர்எஸ்எஸ்/பாஜக தன் செல்வாக்கை மேலும் விரிவுபடுத்தவும், பலப்படுத்தவும் முயலும். இவ்வாறு வளர்ந்துகொண்டிருக்கும் ஆர்எஸ்எஸ்/பாஜக-வின் இந்துத்துவா மதவெறி சித்தாந்தத்தையும், அதன் அரசியல் செயல்பாடுகளையும்,  அகில இந்திய அளவிலும்,  மாநில அளவிலும் எதிர்கொள்வதற்கும் அவற்றை எதிர்த்து முறியடித்திடுவதற்கும் இடது ஜனநாயக மதச்சார்பற்ற சக்திகள் உரிய அரசியல் வழிமுறைகளை உருவாக்கிட வேண்டும்.

ஜூன் 12, 2024, 
தமிழில்: ச.வீரமணி

 

;