world

img

செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவதை தடுக்க சட்டம் தேவை

ரோம்,ஜூன் 15- இயந்திரங்கள் மற்றும் தொழில்நுட் பங்கள் உயிரைப் பறிக்க பயன்படுத்தக் கூடாது என்றும், செயற்கை நுண்ணறிவு மனித குலத் தின் நலனுக்காகப் பயன்படுத்தப்படுமா அல்லது போர் ஆயுதமாகப் பயன்படுத்தப்படு மா என்பதை உலகத் தலைவர்கள் முடிவு செய்ய வேண்டும். செயற்கை நுண்ணறிவை தவறாக பயன்படுத்துவதை தடுக்க சட்டம் கொண்டு வர வேண்டும் என்றும் போப் பிரான் சிஸ் கூறினார்.

இத்தாலியில் ஜி -7 உச்சி மாநாட்டை யொட்டி நடத்தப்பட்ட அழைப்பாளர்களின் கூட்டத்தில் போப் பங்கேற்றார். மேடையில் இருந்த போப்பை இத்தாலி பிரதமர் ஜியோர் ஜியா மெலோனி வரவேற்றார். பங்கேற்ற அனைத்து நாட்டுத் தலைவர்களுக்கும் வாழ்த்து தெரிவித்த பிறகு அவர் பேசினார். இந் நிகழ்ச்சியில் கலந்து கொண்ட பிரதமர் நரேந் திர மோடி, போப்பை ஆரத்தழுவிக்கொண் டார். உக்ரைன் அதிபர் வோலோடிமிர் ஜெலென் ஸ்கி, இங்கிலாந்து பிரதமர் ரிஷி சுனக் மற்றும் பிரான்ஸ் அதிபர் இம்மானுவேல் மேக்ரான் ஆகியோருடனும் மோடி பேச்சுவார்த்தை நடத்தியதாக சமூக ஊடகங்களில் மோடி குறிப்பிட்டார்.

;