districts

img

நுண் நிதி நிறுவனங்களின் அடாவடியை தடுத்து நிறுத்துக!

திருவாரூர், ஜுன் 15 - திருவாரூர் மாவட்டத்தில் நுண்  நிதி நிறுவனங்களால் பாதிக்கப் படும் பெண்கள் நிலை குறித்து மாதர் சங்கம் சார்பாக கடந்த சில மாதங்களுக்கு முன்பாக நேரடி யாக கள ஆய்வு செய்யப்பட்டது.  அந்த ஆய்வில் மகளிர் சுய உத விக் குழு என்ற பெயரில் செயல் படும் நுண் நிதி நிறுவனங்களில், பெரும்பான்மையான பெண்கள் கடன் வாங்கும் நிலை ஏற்பட்டு, அவர்கள் கடன் வலையில் சிக்கி யிருப்பது தெரிய வந்துள்ளது.

இதையொட்டி அனைத்திந் திய ஜனநாயக மாதர் சங்கத்தின் திருவாரூர் மாவட்டக் குழு சார் பாக, மாவட்டச் செயலாளர் பி.கோ மதி தலைமையில், மாவட்ட ஆட்சி யர் தி.சாருஸ்ரீயிடம் மனு அளிக்கப் பட்டது. 

அம்மனுவில், “கடந்த சில  ஆண்டுகளில் புற்றீசல் போல் 100- க்கும் மேற்பட்ட நுண் நிதி நிறு வனங்கள் உருவாகி, நகர்ப்புற-கிராமப்புற பெண்களுக்கு கடன்  தொகையை வழங்கி வருகின்றன.  இவ்வாறு கடன் வழங்கும்போது எவ்வித வரையறையும் இன்றி,  அதிக வட்டியும் கடன் செலுத்தும்  முறைகள் குறித்து எந்த இடத்தி லும் குறிப்பிடாமல் சாதாரண ஏழை, எளிய பெண்களின் வறு மையை பயன்படுத்தி கடனை வழங்குகின்றனர். 

கடனை வழங்கி திருப்ப செலுத்த முடியாத சூழலில் உள்ள  பெண்கள் மீது உளவியல் ரீதி யான தாக்குதலையும் நடத்தி வரு கின்றன. தமிழகத்தில் பல்வேறு  பகுதிகளில் நுண் நிதி நிறுவனங்க ளில் வாங்கிய கடனை திரும்ப  செலுத்த முடியாமல், தற்கொலை  செய்து கொள்ளும் பெண்களின் எண்ணிக்கை நாளுக்கு நாள் அதி கரித்து வருகிறது. 

கொரோனா மற்றும் மழை  வெள்ளம் போன்ற பேரிடர் காலங் களில்கூட கடன் தொகையை கட்டாயம் திரும்ப செலுத்த வேண்டும் என்று அடாவடித்தனம் செய்யும் நிறுவனங்கள் மீது பல  வழக்குகள் நிலுவையில் உள்ளன.

குழு கடன்

ஒரு உறுப்பினருக்கு 15-க்கும்  மேற்பட்ட நுண் நிதி நிறுவனங் கள் கடன் அளிப்பது, கடனை திரும்ப செலுத்த, மீண்டும் கடனை  வழங்குவது என்று பெண்களை மிகப்பெரிய கடன் வலையில் சிக்க வைக்கும் வேலைகளில் நுண் நிதி நிறுவனங்கள் பெரியளவில் மோசடியாக செயல்படுகின்றன. 

நுண் நிதி நிறுவனங்களின் கடனை திருப்பி அடைக்க பெண் கள் கந்து வட்டியை நோக்கி செல்லக் கூடிய அபாயகரமான அவல  நிலையும் திருவாரூர் மாவட்டத் தில் ஏற்பட்டுள்ளது. தேசிய மய மாக்கப்பட்ட வங்கிகள், குறைந்த வட்டிக்கு கடனை வழங்காமல் ஏழை, எளிய பெண்களை வஞ்சித்து  வருகிறது. 

நுண் நிதி நிறுவனங்களின் மோசமான அடாவடித்தனத்தை தடுத்து நிறுத்த தமிழக அரசு உடனே நடவடிக்கை எடுக்க வேண் டும். ரிசர்வ் வங்கியின் எந்த நடை முறையையும் பின்பற்றாமல் கடன் வழங்குவது, வசூலிக்க ரவுடி களை ஏவி விடுவது போன்ற செயல்களில் ஈடுபடும் நுண் நிதி நிறுவனங்கள் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும். 

நுண் நிதி நிறுவனங்களை முறைப்படுத்த மாவட்ட அளவில் அரசு குழுக்கள் அமைத்து கண்கா ணித்திட வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் மீது வரக் கூடிய புகார்களில் உடனே உரிய நடவ டிக்கை எடுக்க வேண்டும். நுண் நிதி நிறுவனங்கள் மீது புகார் அளிக்க, தனி உதவி எண்களை அரசு அறிவிக்க வேண்டும். 

பெண்கள் நல முன்னேற் றத்தை கருத்தில் கொண்டு தமிழக  அரசு பெண்களுக்கு கடனுதவி வழங்குவதற்காக, தனி வங்கி களை ஏற்படுத்திட வேண்டும்”  உள்ளிட்ட பல்வேறு கோரிக்கை கள் வலியுறுத்தப்பட்டுள்ளன. 

மனுவை பெற்றுக் கொண்ட மாவட்ட ஆட்சியர், உரிய நடவ டிக்கை எடுப்பதாக உறுதி அளித் தார். மனு அளிக்கும் போது மாதர்  சங்கத்தின் மாவட்டத் தலைவர் எஸ்.பவானி, மாவட்ட பொருளா ளர் ஆர்.சுமதி மற்றும் ஒன்றிய நிர்வாகிகள் உடனிருந்தனர்.
 

;