districts

img

குவைத் தீ விபத்தில் இறந்த பேராவூரணி வாலிபர் உடல் சொந்த ஊரில் அடக்கம் நிவாரணத் தொகை வழங்கி ஆட்சியர் அஞ்சலி

தஞ்சாவூர், ஜூன் 15 -  குவைத் நாட்டில் ஏற்பட்ட தீ விபத்தில் பலியான, பேராவூரணி இளைஞரின் உடல்  சொந்த கிராமத்திற்கு கொண்டு வரப்பட்டது. மாவட்ட ஆட்சியர் நேரில் சென்று இறந்த வாலிபரின் உடலுக்கு அஞ்சலி செலுத்தி, அரசு அறிவித்த நிவாரணத் தொகையை அவரது குடும்பத்தினருக்கு வழங்கினார்

வளைகுடா நாடான குவைத் நாட்டில் மங்காஃப் என்ற இடத்தில் ஏற்பட்ட தீ விபத்தில் சிக்கி உயிரிழந்த, தஞ்சாவூர் மாவட் டம் பேராவூரணி ஆதனூர் பகுதியைச் சேர்ந்த ரூனாஃப் ரிச்சர்ட் ராய் என்பவரு டைய உடல் குவைத் நாட்டில் இருந்து விமான  மூலம் கேரளா மாநிலம் கொச்சி கொண்டு வரப்பட்டது. 

அங்கு கேரள முதல்வர் பினராயி விஜயன், தமிழக அமைச்சர் செஞ்சி மஸ் தான் அஞ்சலி செலுத் திய பின்னர், கொச்சி யில் இருந்து ஆம்பு லன்ஸ் மூலம் சொந்த  கிராமத்திற்கு வெள் ளிக்கிழமை நள்ளிரவு 12 மணிக்கு கொண்டு வரப்பட்டது. 

தொடர்ந்து ரூனாஃப் ரிச்சர்ட் ராய்  உடலுக்கு மாவட்ட  ஆட்சியர் தீபக்  ஜேக்கப், பட்டுக்கோட்டை வருவாய் கோட்டாட்சியர் ஜெயஸ்ரீ, வட்டாட்சியர் தெய் வானை ஆகியோர் அஞ்சலி செலுத்தி, தமிழ்நாடு அரசு அறிவித்திருந்த  நிவாரணத் தொகை ரூ. 5 லட்சத்திற்கான காசோலையை வழங்கி, குடும்பத்தின ருக்கு ஆறுதல் கூறினர். 

அதைத் தொடர்ந்து அவரது உடல் புனித  அன்னாள் ஆலயத்தில் வைக்கப்பட்டு, சிறப்பு பிரார்த்தனை மற்றும் இறுதி நிகழ்ச்சி கள் நடைபெற்றன. சனிக்கிழமை (அதி காலை 1.30 மணிக்கு) பின்னர் ஆர்.சி. கல்லறை  தோட்டத்தில் உடல் அடக்கம் செய்யப்பட்டது.

;