world

img

பாகிஸ்தானின் தாக்குதலில் உயிரிழந்த ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள்!

பாகிஸ்தான் நடத்திய தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிகெட் வீரர்கள் 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்த சம்பவம் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
கடந்த சில நாட்களாக ஆப்கானிஸ்தான் மீது பாகிஸ்தான் தாக்குதல்களை மேற்கொண்டுவருகிறது. இந்நிலையில் இரு நாடுகளுக்கும் இடையேயான 48 மணிநேர போர் நிறுத்தம் அமல் படுத்தப்பட்டது. இருப்பினும்  நேற்று இரவு பாகிஸ்தான் நடத்திய வான்வழித்தாக்குதலில் ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வீரர்கள் கபீர், சிப்கதுல்லா, ஹாரூன் ஆகிய 3 பேர் உட்பட 8 பேர் உயிரிழந்துள்ளனர்.
உயிரிழந்தவர்களுக்கு மரியாதை செலுத்தும் விதமாக, இலங்கை - பாகிஸ்தான் - ஆப்கானிஸ்தான் நாடுகள் பங்கேற்கவிருந்த முத்தரப்பு தொடரில் இருந்து விலகுவதாக ஆப்கானிஸ்தான் கிரிக்கெட் வாரியம் அறிவித்துள்ளது.