திரிபுரா ஏடிசி தேர்தல் ஏப்ரல் 12-க்கு மாற்றம் இடது முன்னணி வேட்பாளர்கள் வேட்புமனுத் தாக்கல்
அகர்தலா திரிபுரா பழங்குடியினப் பகுதிகள் தன்னாட்சி மாவட்டக் கவுன்சில் (TTAADC - ஏடிசி) தேர்தலுக்கான வாக்குப்பதிவு தேதி மாற்றியமைக்கப்பட்டு, வரும் ஏப்ரல் 12ஆம் தேதி நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது. தேர்தல் தேதி மாற்றத்தைத் தொடர்ந்து, மாநி லம் முழுவதும் இடது முன்னணி வேட்பாளர்கள் தங்களது வேட்புமனுக்களை விறுவிறுப்பாகத் தாக்கல் செய்யத் தொடங்கியுள்ளனர். திருவிழாக் காலம் திரிபுரா தன்னாட்சி மாவட்டக் கவுன்சிலின் 28 இடங்களுக்கான தேர்தல் முதலில் ஏப்ரல் 13ஆம் தேதி நடைபெறும் என்று மாநில தேர்தல் ஆணையம் அறிவித்திருந்தது. ஆனால், அந்த சமயத்தில் பழங்குடியின மக்களின் பாரம்பரிய கலாச்சார திருவிழாக்கள் வருவதால், தேர்தலை முன்கூட்டியே நடத்த வேண்டும் என திரிபுரா சட்ட மன்றத்தில் அனைத்துக் கட்சிகளின் ஆதரவுடன் ஒருமனதாகத் தீர்மானம் நிறைவேற்றப்பட்டது. இதனை ஏற்று, தேர்தல் ஆணையம் வாக்குப் பதிவை ஏப்ரல் 12ஆம் தேதிக்கு மாற்றியமைத்துள் ளது. பதிவான வாக்குகள் ஏப்ரல் 17ஆம் தேதி எண் ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட உள்ளன. களத்தில் இடது முன்னணி வேட்பாளர்கள் தேர்தல் தேதி மாற்றப்பட்டதைத் தொடர்ந்து வேட்புமனுத் தாக்கல் விறுவிறுப்படைந்துள் ளது. மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலைமை யிலான இடது முன்னணி வேட்பாளர்களை அறி வித்து, பல்வேறு தொகுதிகளில் வேட்புமனுக்க ளைத் தாக்கல் செய்து வருகின்றது. வேட்பு மனுத் தாக்கலின் போது சிபிஎம் முக்கியத் தலை வர்கள் மற்றும் தொண்டர்கள் பெருந்திரளாகப் பங்கேற்று வருகின்றனர். பழங்குடியின மக்களின் நில உரிமை, தன்னாட்சிக் கவுன்சிலின் அதிகாரங்களைப் பாது காத்தல் மற்றும் கிராமக் கமிட்டி தேர்தல்களை உடனே நடத்துவது உள்ளிட்ட வாழ்வாதாரக் கோ ரிக்கைகளை முன்வைத்து இடது முன்னணி தீவிரப் பிரச்சாரத்தை முன்னெடுத்து வருகிறது. ஆளும் பாஜக மற்றும் திப்ரா மோதா (TIPRA Motha) ஆகிய கட்சிகளுக்கு இடையே நிலவும் அரசியல் முரண்பாடுகளுக்கு மத்தியில், பழங் குடியின மக்களின் உண்மையான உரிமைக ளுக்காக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி தலை மையிலான இடது முன்னணி இத்தேர்தலில் களம் காண்கிறது என்பது குறிப்பிடத்தக்கது. (லெப்ட் வியூஸ்)
