states

img

தீக்கதிர் முக்கிய செய்திகள்

சிபிஎம் பொதுச் செயலாளர் எம்.ஏ.பேபி

கேரளத்தில் பாஜக மற்றும் ஆர்எஸ்எஸ் அமைப்புகளுடன் கூட்டணி வைத்த வரலாறு காங்கிரஸிற்கு உண்டு. கடந்த காலத் தேர்தல்களில் கேரளம் முழுவதும் பல இடங்களில் காங்கிரஸும், பாஜகவும் ரகசியமாக கைகோர்த்து இடதுசாரிகளைத் தோற்கடிக்க முயன்றன.

ஆம் ஆத்மி தலைவர் கெஜ்ரிவால்

குஜராத் மாநிலத்தில் மிகவும் மோசமாகப் பாதிக்கப்பட்டவர்கள் பழங்குடியின மக்கள் தான். அதிக சுரண்டலுக்கும் அநீதிக்கும் ஆளாகியுள்ளனர். இன்று குஜராத் முழுவதும் பழங்குடியின சமூகம் மிகவும் ஏழ்மையான, ஒடுக்கப்பட்ட மற்றும் பின்தங்கிய நிலையிலேயே உள்ளன.

காங்கிரஸ் மூத்த தலைவர் உதித் ராஜ்

மோடி திறந்து வைத்த நொய்டா விமான நிலையம் 2024ஆம் ஆண்டிற்குள்ளேயே செயல்பாட்டிற்கு வந்திருக்க வேண்டும். ஆனால் விளம்பரத்திற்காக கால தாமதமாகிவிட்டது. மோடி திறந்து வைத்துள்ள 11 விமான நிலையங்கள் திறக்கப்பட்ட பிறகும் செயல்பாட்டிற்கு வராமல் மூடப்பட்டே கிடக்கின்றன. பாஜக ஆட்சியில் மக்கள் திட்டங்கள் பெரும் விளம்பரத்துடன்தான் தொடங்கப்படுகின்றன.'

சிபிஐ பொதுச் செயலாளர் து.ராஜா

எதிர்க்கட்சி ஆளும் மாநிலங்கள் காட்டாட்சியில் சிக்கி இருப்பதாக மோடி கூறுகிறார். உத்தரப் பிரதேசத்தில் என்ன நடக்கிறது? மத்தியப் பிரதேசம் மற்றும் பாஜக ஆளும் மற்ற மாநிலங்களில் என்ன நடக்கிறது? பாஜக ஆட்சி எப்படி தவறான ஆட்சியாக மாறியுள்ளது? என்றெல்லாம் மக்கள் கவனித்துக் கொண்டுதான் இருக்கிறார்கள்.