கூட்டுறவு மென்பொருள் திட்டம் வெளிப்படையானது கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தகவல்
கூட்டுறவு மென்பொருள் திட்டத் தில் ரூ.700 கோடி ஊழல் நடந்த தாக காங்கிரஸ் தலைவர் ரமேஷ் சென்னிதலா சுமத்தியுள்ள குற்றச்சாட்டு ஆதாரமற்றது என கேரள முதலமைச்சர் பினராயி விஜயன் தெரிவித்தார். பாலக்காட்டில் சனியன்று நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் முதலமைச்சர் மேலும் கூறியதாவது: மென்பொருள் திட்டத்தின் அனைத்து நிலைகளும் வெளிப்படையானவை. பிற நிறுவ னங்கள் விலக்கப்பட்டது உள்ளிட்ட அனைத்து குற்றச்சாட்டுகளும் முற்றி லும் பொய்யானவை. 4,415 கூட்டுறவு நிறுவனங்களில் பொது மென்பொரு ளைச் செயல்படுத்துவதற்காக, 2021ஆம் ஆண்டு டெண்டரின்படி ரூ.206 கோடிக்கு டாடா கன்சல்டன்சி சர்வீசஸ் நிறுவனத்திற்கு விருப்பக் கடிதம் வழங்கப்பட்டிருந்தபோதிலும், அவர்கள் அக்டோபர் 2024இல் தன்னிச்சை யாக அதனைத் திரும்பப் பெற்றுக் கொண்டனர். அதனைத் தொடர்ந்து, மார்ச் 2025இல் தலைமைச் செயலாளர் தலைமையில் நடைபெற்ற கூட்டத்தில் புதிய டெண்டர் கோர முடிவு செய்யப் பட்டது. ரூ.1,000 கோடி செலவாகியிருக்கும் புதிய திட்டத்தின் முக்கிய அம்சம் என்னவென்றால், தரவு மற்றும் மூலக் குறியீடு ஆகியவை அரசாங்கத்தின் உரிமையிலேயே இருப்பதுதான். முந்தைய சேவையாக மென்பொருள் மாதிரியில் இதுபோன்று இருக்க வில்லை. அந்த மாதிரி பின்பற்றப்பட்டி ருந்தால், அதை முழு கூட்டுறவுத் துறைக்கும் விரிவுபடுத்த சுமார் 1000 கோடி ரூபாய் செலவாகியிருக்கும். இப்போது, இந்த மென்பொருளைக் குறைந்த செலவில் சுமார் 23,000 கூட்டுறவு சங்கங்களுக்கு விரிவுபடுத்த முடியும். சுமார் 45 நிறுவனங்களுக்கு ஒரு கூட்டமைப்பு வடிவில் பங்கேற்க வாய்ப்பு வழங்கப்பட்டது. அனைத்தும் வெளிப்படையாக இருப்பதாகவும், இந்தக் குற்றச்சாட்டு ஆதாரமற்றது என முதலமைச்சர் பினராயி விஜயன் தெளிவுபடுத்தினார்.
