ஒரே மாதத்தில் ரூ.1 லட்சம் கோடி இந்தியாவை விட்டு வெளியேறும் வெளிநாட்டு முதலீட்டாளர்கள்
மத்தியக் கிழக்கில் நீடிக்கும் போர் காரணமாக கச்சா எண்ணெய் விலை உயர்ந்துள்ளதால், இந்தி யப் பங்குச்சந்தை மற்றும் கடன் சந்தை யிலிருந்து வெளிநாட்டு முதலீட்டாளர் கள் வரலாறு காணாத வகையில் முதலீடு களைத் திரும்பப் பெற்று வருகின்றனர். பிப்., 28ஆம் தேதி போர் தொடங்கிய திலிருந்து தற்போது வரை ரூ.1 லட்சம் கோடி (12.14 பில்லியன் டாலர்) மதிப்பி லான பங்குகளை வெளிநாட்டு முதலீட்டா ளர்கள் விற்றுள்ளனர். இது மாதந்தோறும் நடக்கும் வெளியேற்றத்தில் இதுவரை இல்லாத மிகப்பெரிய அளவாகும். வெள்ளிக்கிழமை ஒரே நாளில் மும்பை பங்குச்சந்தை குறியீட்டு எண் சென் செக்ஸ் 1,690 புள்ளிகள் (2.25%) சரிந்து 73,583 புள்ளிகளில் நிலைபெற்றது. நிப்டி 486 புள்ளிகள் சரிந்து 22,819 புள்ளிகளில் தேசிய பங்குச் சந்தை முடிவடைந்தது. இந்த சரிவினால் முதலீட்டாளர்க ளின் சொத்து மதிப்பில் ரூ.8.86 லட்சம் கோடி துடைத்து எறியப்பட்டது. இந்திய ரூபாயின் மதிப்பு முன்னெப்போதும் இல்லாத வகையில் சரிவைச் சந்தித்து ரூ.94.84 என்ற நிலையை எட்டியது. போர் தொடங்கியதிலிருந்து ரூபாயின் மதிப்பு 4.2% வீழ்ச்சியடைந்துள்ளது. இதனால் அரசுப் பத்திரங்கள் போன்ற கடன் சந்தை யிலிருந்தும் சுமார் ரூ. ரூ.15,273 கோடி (1.61 பில்லியன் டாலர்கள்) முதலீடுகள் வெளியேறியுள்ளன என்பது குறிப்பி டத்தக்கது.
