ஒரே வாரத்தில் 4 அம்பேத்கர் சிலைகள் உடைப்பு உத்தரப்பிரதேசத்தில் பதற்றமான சூழல்
லக்னோ உத்தரப்பிரதேச மாநிலத் தில் பாஜக ஆட்சி நடை பெற்று வருகிறது. முதல மைச்சராக கோரக்பூர் மடத்தின் சாமியார் ஆதித்யநாத் உள்ளார். இந்நிலையில், கடந்த ஒரே வாரத்தில் உத்தரப்பிரதேத்தின் நான்கு மாவட்டங்களில் அடுத்த டுத்து 4 அம்பேத்கர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ளது, அம்மாநி லத்தில் பதற்றத்தை ஏற்படுத்தி யுள்ளது. மார்ச் 14 அன்று லக்கிம் பூர் கெரியின் பிபாரா மரவுடா கிராமத்தில் அம்பேத்கர் சிலை மர்ம நபர்களால் உடைக்கப் பட்டது. தொடர்ந்து காஜீப்பூர் மாவட்டம் தில்லா கிராமத்தில் இருக்கும் அம்பேத்கர் சிலை மார்ச் 20 அன்று இரும்புக் கம்பிகளால் நொறுக்கப்பட்டது. அலகாபாத் மாவட்டம் ரதவுரா கிராமத்தில் மார்ச் 22 அன்று அம்பேத்கர் சிலை உடைக்கப்பட்டது. திங்களன்று (மார்ச் 23) மீரட் மாவட்டம் பகவான் பூர் கிராமத்தில் அடையாளம் தெரி யாத மர்ம நபர்களால் அம் பேத்கர் சிலையின் தலை துண்டிக்கப்பட்டது. இந்துத்துவா குண்டர்களின் வேலை ஆர்எஸ்எஸ் - பாஜகவைச் சேர்ந்த இந்துத்துவா குண்டர்க ளால்தான் அம்பேத்கர் சிலைகள் தொடர்ச்சியாக உடைக்கப்பட்டு வருகின்றன என சிலைகள் உடைக் கப்பட்ட மாவட்ட மற்றும் கிராம மக்கள் குற்றம்சாட்டியுள்ளனர். இதுதொடர்பாக மீரட் மாவட்ட கிராமவாசியான ஆனந்த் பால் என்பவர் கூறுகையில்,“வாக்கா ளர் சிறப்பு தீவிர திருத்தம் (எஸ்ஐஆர்) மற்றும் பாஜகவின் உள்ளூர் தலைவர்களுக்கு இடை யிலான கோஷ்டி பூசலை மறைக்கவே அம்பேத்கர் சிலை உடைப்பு சம்பவங்கள் தொடர்ச்சி யாக நடைபெற்று வருகின்றன” என குற்றம்சாட்டியுள்ளார். பகவான்பூர் கிராமத்தைச் சேர்ந்த விபின் குமார் என்பவர் கூறுகையில்,“குற்றவாளிகளை அடையாளம் காண்பதில் காவல்துறை தோல்வியடைந்து விட்டது. ஆனால் கிராமம் முழு மைக்கும் அவர்கள் யார் என்று தெரியும். அவர்கள் ஆபத்தான வர்கள் என்பதால் நாங்கள் அவர்கள் மீது வழக்குத் தொடர முடியவில்லை. காவல்துறை ‘அடையாளம் தெரியாத நபர் கள்’ மீது வழக்குப்பதிவு செய்துள் ளது. ஆனால் அவர்கள் சிலையை உடைத்த உண்மையான குற்ற வாளிகள் கிடையாது” என்று கூறினார். அதே போல பகுஜன் சமாஜ் கட்சியின் மூத்த தலைவர் நீரஜ் பாசி கூறுகையில்,”காவல்துறை இதுபோன்ற வழக்குகளைத் தீவிரமாக எடுத்துக்கொள்வ தில்லை. இதனால் மக்கள் போராட் டங்களை நடத்திவிட்டுப் பின் களைத்துப் போய் வீடு திரும்பு கின்றனர்” என அவர் கண்டனம் தெரிவித்தார். ஒரே வாரத்தில் 4 அம்பேத் கர் சிலைகள் உடைக்கப்பட்டுள்ள தால், மாணவர் அமைப்புகள், சமாஜ்வாதி, பீம் ஆர்மி உள்ளிட்ட கட்சிகளுடன் இணைந்து போராட் டத்தை நடத்த உள்ளதாக செய்தி கள் வெளியாகியுள்ளன. இத னால் உத்தரப்பிரதேசத்தில் பதற்ற மான சூழல் தீவிரமாகிறது.
