பதில் சொல்லுங்கள் மோடிஜி, பாடம் நடத்துவது யாருக்கு?
“ஒன்றிய மாநில அரசுகள் ஒன்றி ணைந்து செயல்பட்டால் தான் நெருக்கடியை எதிர் கொள்ள முடியும்” என்று வலியுறுத்தி யுள்ளார் பிரதமர் நரேந்திர மோடி (தினத்தந்தி 25.03.2026). ஈரான் மீது தாக்குதல் நடத்திவரும் அமெரிக்க-இஸ்ரேல் அடாவடி காரணமாக எழுந்துள்ள எரிபொருள் தட்டுப்பாடு, உணவுப்பொருள் விநியோக பாதிப்பு ஆகியவை குறித்து மாநிலங்கள வையில் கடந்த செவ்வாயன்று உரை யாற்றிய போது தான் ஒன்றிய-மாநில அரசு கள் இணைந்து பணியாற்ற வேண்டியதன் அவசியம் குறித்து முழங்கியுள்ளார் மோடி. மேற்கு ஆசியப் போர்ச்சூழல் மட்டுமல்ல, எல்லாக் காலங்களிலும் மக்கள் நலன் சார்ந்த பிரச்சனைகளில் ஒன்றிய அரசும், மாநில அரசுகளும் கருத்தொற்றுமை யுடன் கரம் கோர்த்துச் செயல்பட வேண்டும் என்பதுதான் ஜனநாயகத்தின் மீது அக்கறை கொண்ட அனைவரது எதிர்பார்ப்பாகவும் எப்போதும் இருந்து வருகிறது.
அண்ணல் அம்பேத்கர் வடிவ மைத்து இந்திய நாட்டிற்கு வழங்கியுள்ள அரசியலமைப்புச் சட்டமும், கூட்டாட்சிக் கோட்பாட்டி னையும் அதற்கான வழிமுறைகளையும், அதில் ஒன்றிய அரசின் பொறுப்புகளை யும் மிகச் சரியாகவே வரையறுத்துள்ளது. கையேந்தி நிற்க வைத்த மோடி அரசு ஆனால் திருவாளர் மோடியின் தலை மையில் பாஜக அரசு பதவிக்கு வந்ததிலி ருந்து கடந்த 12 ஆண்டுகளாக, மாநில அர சுகளின் அதிகாரங்கள் யாவும் தொடர்ச்சியாக வெட்டிச் சுருக்கப்பட்டு வருகின்றன. அவற்றின் நிதியாதாரங்கள் தகர்க்கப்பட்டு வெறும் பஞ்சாயத்து ஒன்றியங்கள் போல் பலமற்றதாக மாற் றப்பட்டு வருகின்றன. எல்லாவற்றுக்கும் ஒன்றிய அரசிடம் கையேந்தி நிற்க வேண்டிய இக்கட்டான சூழலுக்கு இட்டுச் செல்லப்படுகின்றன. அதுவும் நம் தமிழகம் உள்பட எதிர்க் கட்சிகள் ஆளும் மாநிலங்கள் என்றால், அவை எதிர்கொள்ளும் இடர்ப்பாடுகள் எண்ணிலடங்காதவை.
கொரோனா காலத்தில் வேகவேகமா கத் திணிக்கப்பட்ட வேளாண் சட்டங்கள் முதல், இன்றைக்கும் மிகுந்த சர்ச்சையாக உள்ள விதை உரிமைச் சட்டம், மின்சார திருத்த சட்டம் வரை எந்தவொரு சட்ட வரை வும் மாநில அரசுகளிடம் முறையாக முன்கூட்டியே விவாதிக்கப்படுவதில்லை. ஒன்றிய, மாநில அரசுகளின் ஒத்திசை வுப் பட்டியலில் இடம் பெற்றுள்ள போதிலும், கல்வித் துறையில் மிக முக்கியமான மாற்றங்களைப் பரிந்துரைக்கிற “புதிய கல்விக் கொள்கை” குறித்து மாநில அரசுகளிடம் எந்தவிதமான ஆலோச னையும் நடத்தப்படவில்லை. தமி ழுக்கும், தமிழக மக்களுக்கும் எதிராக மும்மொழித் திட்டத்தைப் புகுத்தும் இந்தக் கொள்கையை ஏற்க மறுப்பதால், கல்வி திட்டங்களுக்கான நிதியையும் நிறுத்திவைத்து ஆணவத்தை வெளிப்படுத்தி வருகிறது மோடி அரசு. மோடி பேச்சு... வெறும் மேல்பூச்சு ஜிஎஸ்டி நிதி பகிர்வுகளை உடனுக்குடன் விடுவிக்காமல் நீண்ட காலம் நிலுவையில் வைத்திருப்பது முதல், இயற்கைப் பேரிடர் காலங்களில் நிவாரண உதவிகளை மறுப்பது வரை ஒன்றிய அரசின் பாரா முகமும், பாரபட்சமும் அரசியல் பார்வை யாளர்களின் கடுமையான விமர்ச னத்திற்கு உள்ளாகியுள்ளன.
மகாத்மா காந்தி ஊரக வேலைவாய்ப்பு உறுதியளிப்புத் திட்டத்தின் பெயரையும் மாற்றி, ஒதுக்கீட்டையும் குறைத்த தோடு, மாநிலங்களுக்கு 10 சதவீதம் என்றிருந்த நிதி பகிர்வை 40 சதவீதமாக திடீரென்று உயர்த்தி, இதன் மூலமாகவும் நெருக்கடியில் தள்ளுகிறது மோடி அரசு. இவையெல்லாம் போதாதென்று, எதிர்க்கட்சிகள் ஆளும் மாநிலங்க ளுக்கு அப்பட்டமான ஆர்எஸ்எஸ் பிரச்சாரகர்களை ஆளுநர்களாக அனுப்பிவைத்து, அவர்கள் மூலம் போட்டி அரசு நடத்தவும் முனைப்புக் காட்டி வருகிறது மோடி அரசு. மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட மாநில அரசுகளைச் செயல்பட விடாமல் முடக்குவது என்கிற ஒற்றைத் திட்டத்துடன் ஆளுநர்கள் இயங்கி வருவது, மக்கள் மன்றம் முதல் நீதி மன்றம் வரையிலும் விவாதத்திற்கு ஆளாகியுள்ளது. தமிழக அரசுக்கும், மக்களுக்கும் திருவாளர் ஆர்.என்.ரவி தொடர்ச்சியாகக் கொடுத்து வந்த தொல்லைகளும், சர்ச் சைக்குரிய பேச்சுகளும் என்றும் மாறாத வடுக்களை எல்லோர் மனங்களிலும் ஏற்படுத்தியுள்ளன. இத்தகைய பின்புலத்தில் தான் பிரதமர் மோடியின் மாநிலங்களவைப் பேச்சு, வெறும் மேல் பூச்சாய் மக்களின் முன் அம்பலமாகி நிற்கிறது.
இப்போதைய உடனடித் தேவை, மாநிலங்களின் உரிமைகளை மதிப்பதும், மாநில அரசுகளின் நியாயமான குரல்க ளுக்குச் செவிமடுப்பதும் தானே தவிர, மோடிஜியின் வெற்று அறிவுரைகள் அல்ல. மாநில அரசுகளுக்கு முட்டுக்கட்டை போடுவதையே வாடிக்கையாகக் கொண் டுள்ள மோடி அரசின் வஞ்சகச் செயல்பா டுகளைத் தமிழக மக்கள் மிக நன்றாகவே புரிந்து வைத்துள்ளார்கள். உள்ளொன்று வைத்துப் புறமொன்று பேசிடும் மோடி, அமித் ஷாவின் பாஜக வுக்கும், அது அமைத்துள்ள அடிமைக் கூட்டணிக்கும் தேர்தல் களத்தில் தக்க பாடம் புகட்டி, மாநில உரிமைகளை நிலை நாட்டிட, தமிழக வாக்காளர்கள் தயாராகி வருகிறார்கள்.f.
