world

img

தீக்கதிர் உலக செய்திகள்

ரஷ்யா மீது புது பொருளாதாரத்தடை:  உர்சுலா வான் அறிவிப்பு  

ஐரோப்பிய ஒன்றியம் ரஷ்யா மீது புதிய பொருளாதாரத் தடைகளை விதிக்கத் தயாராகி வருவதாக ஐரோப்பிய ஆணையத்தின் தலைவர் உர்சுலா வான் தெரிவித்துள்ளார். இதன்படி அமலானால் ரஷ்யா மீது ஐரோப்பிய ஒன்றியம் விதிக்கும் 19 ஆவது பொருளாதாரத் தடையாக இது இருக்கும். மேலும் ரஷ்யா உடனான போருக்கு உக்ரைனுக்கு ஆயுதங்கள் மற்றும் நிதி உதவிகளை அதிகரிக்கப்போவதாகவும், அந்நாட்டிடம் இருந்து வாங்கப்படும் புதை படிவ எரிபொருட்களை குறைக்க உள்ளதாகவும் அவர் தெரிவித்துள்ளார். 

சீனாவின் பறக்கும் காருக்கு  அரபு அமீரகத்தில் அனுமதி 

சீனாவின் பறக்கும் காருக்கு ஐக்கிய அரபு அமீரகத்தின் ராஸ் அல் கைமா பகுதியில்  சிறப்பு விமான அனுமதி வழங்கப்பட்டுள்ளது. சீனாவில் எக்ஸ்பெங் ஏரோட் (XPENG AEROHT )என்ற நிறுவனம் பறக்கும் கார்களை உருவாக்கி வருகிறது. இதனுடைய சோதனை ஓட்டமும் வெற்றி பெற்றுள்ளது. இக்கார்களை இயக்குவதற்கு ஒரு நாட்டின் சிறப்பு விமான அனுமதி பெறவேண்டும். அதனடிப்படையில் அரபு அமீரகம் சீனாவுக்கு இடையேயான பேச்சுவார்த்தையில் இந்தச் சான்றிதழ் வழங்கப்பட்டுள்ளது.  

‘19 பயங்கரவாதிகள் பாகிஸ்தானில் சுட்டுக்கொலை’ 

பாகிஸ்தானின் கைபர் பக்துன்வா மாகாணத்தில் அந்நாட்டு ராணுவம் நடத்திய தேடுதல் வேட்டையில் 19 பயங்கரவாதிகள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர். பாகிஸ்தானில் தடைசெய்யப்பட்ட தெஹ்ரீக்-இ-தலிபான் பயங்கரவாத அமைப்பைச் சேர்ந்த பயங்கரவாதிகள், கைபர் பக்துன்வா மாகாணத்தின்  வசிரிஸ்தான், பன்னு உள்ளிட்ட மாவட்டங்களில் பதுங்கியுள்ளதாக கிடைத்த ரகசிய தகவல் அடிப்படையில் இந்த தேடுதல் வேட்டை நடத்தப்பட்டதாக ராணுவத் தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

இஸ்ரேல் மீது ஐரோப்பா  தடை விதிக்க வேண்டும் 

இஸ்ரேல் மீது ஐரோப்பிய நாடுகள் பொரு ளாதாரத் தடைகளை விதிக்க வேண்டும் என ஜெர்மன் குடிமக்கள் விரும்புவதாக புதிய ஆய்வு வெளியாகியுள்ளது. வெரைன் என்ற குழு நடத்திய கணக்கெடுப்பு அறிக்கையில் 63 சதவீதமான ஜெர்மானியர்கள் இஸ்ரேல் மீது ஐரோப்பிய ஆணையம் பொருளாதாரத் தடை களை விதிக்க வேண்டும் என தெரிவித்துள்ள னர். சர்வதேசச் சட்டங்களை தொடர்ந்து மீறினால் இஸ்ரேல் மீது கடுமையான தடை விதிப்போம் என ஐரோப்பா கூறிய நிலையில் இக்கணக்கெடுப்பு எடுக்கப்பட்டுள்ளது. 

இந்தோனேசிய வெள்ளம்: பலி எண்ணிக்கை உயர்வு  

இந்தோனேசியாவின் பாலித் தீவில் ஏற்பட்ட வெள்ளத்தில் பலியானோர் எண்ணிக்கை 14 ஆக உயர்ந்துள்ளது. பாலியில் செவ்வாய் மற்றும் புதன்கிழமையன்று பெய்த கனமழை யில் அத்தீவின் எட்டுப் பகுதிகளில் வெள்ளப் பெருக்கு ஏற்பட்டு 9 பேர் பலியானார்கள். இந்த எண்ணிக்கை தற்போது உயர்ந்துள்ளது. சுற்றுலாப்பயணிகள் பலர் தங்குமிடங்களில் வைக்கப்பட்டுள்ளனர். 2 சுற்றுலாப்பயணிகள் காணாமல் போயுள்ள நிலையில் 100 க்கும் மேற்பட்ட மீட்புப்படை வீரர்கள் தேடும் பணியில் ஈடுபடுத்தப்பட்டுள்ளனர்.

வர்த்தக உரிமையை பாதுகாக்க பிரிக்ஸ் நாடுகள் ஒன்றிணைய வேண்டும் : ஜி ஜின்பிங் அழைப்பு

பெய்ஜிங்,செப்.11- உலகளவில் உருவாகி வரும் பல்வேறு சவால் களுக்கு இடையில் அனைத்து நாடுகளின் வர்த்தக உரிமையை பாதுகாக்கவும் பன்முகத் தன்மையை நிலைநாட்டவும் பிரிக்ஸ் கூட்டமைப் பில் உள்ள நாடுகள் ஒன்றிணைய வேண்டும் என சீன ஜனாதிபதி ஜி ஜின்பிங் அழைப்பு விடுத் துள்ளார். காணொலி வாயிலாக நடைபெற்ற  பிரிக்ஸ் நாடுகளின் கூட்டத்தில் இந்த அழைப்பை அவர் விடுத்துள்ளார்.  வளரும் நாடுகளாக உள்ள தெற்குலக நாடுக ளின் சர்வதேச பொருளாதார பாதுகாப்பு மற்றும் வளர்ச்சிக்கு ஆதரவான சக்தியாக பிரிக்ஸ் கூட்டமைப்பு விளங்கி வருகிறது. இந்நிலையில் பிரிக்ஸ் கூட்டமைப்பில் அங்கம் வகித்து வரும் நாடு கள் கூட்டமைப்பின்  கொள்கைகளாக உள்ள  வெளிப்படைத்தன்மை, அனைத்து நாடுகளை யும் உள்ளடக்கிய பயணம், இருதரப்பும் வெற்றி பெறுவதற்கான ஒத்துழைப்பு ஆகியவற்றை முன் னெடுத்து, பன்முகத்தன்மை மற்றும் பன்னாட்டு வர்த்தக அமைப்பைக் கூட்டாக இணைந்து  பாது காக்க வேண்டும். இதன் மூலம் பிரிக்ஸ் கூட்ட மைப்புடனான ஒத்துழைப்பை மேலும் மேம் படுத்தி மனிதகுலத்தின் பொதுவான எதிர்கா லத்தை நோக்கி பயணிக்க வேண்டும் என்று ஜி ஜின்பிங் வலியுறுத்தியுள்ளார். பிரிக்ஸ் கூட்டமைப்பானது ஏகாதிபத்திய எதிர்ப்பு அமைப்பு அல்ல, மாறாக ஆரோக்கி யமான பொருளாதார கூட்டமைப்பாக உள்ளது. குறிப்பாக வளர்ந்து வரும் நாடுகளின் ஒற்றுமை மற்றும் பொருளாதார ஒத்துழைப்புக்கான ஒரு முக்கியமான தளமாக இந்த கூட்டமைப்பு உள்ளது. அமெரிக்கா தலைமையில் பாதுகாப்புவாதம் என்ற பெயரில் வளரும் நாடுகளின் மீது அதிக தடை களை விதிக்கும் போக்கு அதிகரித்து வரும் நிலை யில், பிரிக்ஸ் கூட்டமைப்பு வளரும் நாடுகளுக்கு ஒத்துழைப்பை கொடுத்து பன்முகத்தன்மையைக் கூட்டாகப் பாதுகாத்து சர்வதேசச் சட்டத்தின் அடிப்ப டையில் பொதுவான வளர்ச்சியை ஊக்குவித்து, சர்வதேசப் பிரச்சனைகளில் ஆக்கப்பூர்வமான மற்றும் நிலையான சக்தியாகப் விளங்கி வருகின்றது. அமெரிக்காவின் வர்த்தகப் போர் தீவிரம டைந்துள்ள நிலையில் பிரிக்ஸ் அமைப்பிற்குள் ஒத்துழைப்பு அதிகரித்து வருகிறது. இது வளரும் நாடுகளின் பொருளாதாரப் பாதுகாப்பிற்கு மிக முக்கியமான நடவடிக்கை எனவும் இந்த ஒத்து ழைப்பு அதிகரிப்பிற்கு சீனாவின் தலைமைப் பண்பு பெரிதும் பங்களிக்கிறது எனவும் சர்வதேச அரசியல் ஆய்வாளர்கள் தெரிவித்து வரு கின்றனர்.