ஹெரின்ட்சலாமா ராஜா மடகாஸ்கர் பிரதமராக நியமனம்
ஹெரின்ட்சலாமா ராஜா எனரிவேலோ மடகாஸ்கரின் புதிய பிரதமராக நியமிக்கப்பட்டுள்ளார். இவர் உலக வங்கி உள்ளிட்ட சர்வதேச நிறுவனங்களில் பணி யாற்றிய பொருளாதார நிபு ணராவார். இளைஞர்களின் பெரும் போராட்டத்திற்கு பிறகு பிரான்ஸ் ஆதரவு ஜனாதிபதி மடகாஸ்கரை விட்டு வெளியேறினார். இச் சூழலில் ராணுவம் ஆட்சி யைக் கைப்பற்றியது. இடைக்கால ஜனாதிபதியாக கர்னல் மைக்கேல் ராண்ட்ரி யானிரினா நியமிக்கப்பட்ட நிலையில் இந்த பிரதமர் நிய மனம் நடைபெற்றுள்ளது.
சீனா மீது 155 சதவீத வரி : டிரம்ப் மிரட்டல்
அமெரிக்காவுடன் வர்த்தக ஒப்பந்தத்தில் கையெ ழுத்திடாவிட்டால், நவம்பர் 1 முதல் சீனா மீது 155 சதவீதம் வரை வரிகளை விதிப்பேன் என டிரம்ப் மிரட்டல் விடுத்துள் ளார். டிரம்பின் வரி மிரட்டல்களைத் தொ டர்ந்து அரியவகை கனிமங்கள் மற்றும் அது சார்ந்த தொ ழில்நுட்ப வர்த்தகத் தில் சீனா முக்கிய கட்டுப்பாடுகளை விதித்தது. இத னால் நவம்பர் 1 முதல் சீனா மீது கூடுதலாக 100 சதவீத வரி விதிக்க உள்ளதாக சமீபத்தில் அறிவித்தி ருந்தது குறிப்பிடத்தக்கது.
அமெரிக்காவுக்கு அடிபணிய மறுத்த ஈரான்
அணுசக்தி ஒப்பந்த பேச்சுவார்த்தையை மீண்டும் தொடங்க வேண்டும் என்ற டிரம்பின் வற் புறுத்தலை ஈரான் மதத் தலைவர் கமேனி நிராக ரித்துள்ளார். ஈரான் தலைநகர் டெஹ்ரா னில் உரையாற்றிய போது கமேனி இதனை தெரிவித் துள்ளார். மேலும் ஒரு ஒப்பந்தம் வற் புறுத்தலோடும் முன் மொழிவோடும் இருந்தால் அது மிரட்டலாகும். டிரம்ப் ஒரு தரகர், பேரம் பேசுபவர் எனவும் விமர்சனம் செய்துள்ளார்.
மியான்மரில் ஆன்லைன் மோசடி : 2,000 பேர் கும்பல் கைது
தாய்லாந்து எல்லைக்கு அருகே செயல்பட்டு வந்த ஆன்லைன் மோசடி மையத்தை மியான்மர் ராணுவம் கண்டறிந்து மூடியுள்ளது. அதில் பணி யாற்றிய 2,000-க்கும் மேற்பட்டோர் கைது செய்யப்பட் டுள்ளனர். மோச டிக்கு பயன்படுத் தப்பட்ட ஸ்டார் லிங்க் செயற்கைக் கோள் இணைய முனையங்கள் பறி முதல் செய்யப்பட்டுள்ளதாகவும் ராணுவம் அறிவித் துள்ளது. இம்மையங்களில் வேலை பெற்றுத் தருவதாக கூறி ஏமாற்றி அழைத்து வரப்பட்ட பல நாடுகளைச் சேர்ந்த இளைஞர்கள் இருந்தது குறிப்பிடத்தக்கது.
153 டன் குண்டுகளை காசா மீது வீசினோம் : நேதன்யாகு
காசாவில் உள்ள இலக்குகள் மீது தங்கள் ராணுவம் 153 டன் குண்டுகளை வீசியதாக இஸ்ரேல் பிரதமர் நேதன்யாகு அந்நாட்டு நாடாளு மன்றத்தில் தெரி வித்துள்ளார். அவர் பேசியதாவது: பலமானவர்களு டன் தான் அமைதி ஏற்படுத்த முடியும், பலவீனமானவர் களுடன் அல்ல. இன்று இஸ்ரேல் முன்பை விட வலிமையாக உள்ளது. அக்டோபர் 19 காசாவில் உள்ள இலக்குகள் மீது வான்வழித் தாக்கு தல்களைத் தொடங்கியதாக இஸ்ரேல் ஏற்கெனவே அறிவித்தது குறிப்பிடத்தக்கது.
