world

img

தீக்கதிர் உலக செய்திகள்

பாலஸ்தீனர்களை பட்டினிபோட்டு சாகடிக்க இஸ்ரேல் அமைச்சர் உத்தரவு 

இஸ்ரேலின் தீவிர வலதுசாரி அமைச்சர்கள் பாலஸ்தீனர்களை பட்டினி போட்டு சாகடிக்க ராணுவத்திற்கு உத்தரவிட்டுள்ளனர். ஆபரேஷன் கிதியோன்’ஸ் சாரியட்ஸ் 2’ (Operation Gideon’s Chariots 2) என்ற பெயரில் பாலஸ்தீனர்களை வெளியேற்ற திட்டமிட்டு வருகிறது இஸ்ரேல். இதற்கான கூட்டத்தின் போது நிதி அமைச்சர் பெசலேல் ஸ்மோட்ரிச், வெளியேறாத பாலஸ்தீ னர்களுக்கு தண்ணீர், மின்சாரம் எதுவும் கொடுக் காதீர்கள் என உத்தரவிட்டுள்ளார். அவர்கள் பசியால் இறக்கட்டும்; அதுதான் நமக்கு வேண்டும் எனக் கூறியுள்ளார்.

உக்ரைனுக்கு ராணுவ உதவி: கனடா அறிவிப்பு 

கனடா பிரதமர் மார்க் கார்னி உக்ரை னுக்கு 1.46 பில்லியன் டாலர்கள் அள விற்கு ஆயுதங்கள் உள்ளிட்ட ராணுவ உதவி கள் தருவதாக அறிவித்துள்ளார். உக்ரை னின் 34 ஆவது சுதந்திர தின விழாவில் கலந்துகொண்ட அவர் இந்த அறிவிப்பை வெளியிட்டுள்ளார். கடந்த ஜூன் மாதம் நடை பெற்ற ஜி-7 உச்சி மாநாட்டில் ரஷ்யாவிற்கு எதிராக உக்ரைனுக்கு ராணுவ உதவி செய் வது என கொடுக்கப்பட்ட வாக்குறுதி அடிப்படை யில் இந்த உதவிகளை செய்வதாக அவர் அறிவித்துள்ளார்.

ரஷ்யா மீது அழுத்தம் தர இந்தியா மீது வரி: ஜே.டி.வான்ஸ் 

உக்ரைன் மீதான போரை ரஷ்யா நிறுத்த வேண்டும் என அழுத்தம் கொ டுப்பதற்காகவே இந்தியா மீது வரிகளை விதித்துள் ளோம் என அமெரிக்கத் துணை ஜனாதிபதி ஜே.டி. வான்ஸ் தெரிவித்துள்ளார். மேலும் இது போரை நிறுத்த டிரம்ப் பயன்படுத்திய ஆக்கிரமிப்புப் பொருளாதார அழுத்தம் என அதனை நியாயப்படுத்தியுள்ளார். இந்த அழுத்தங்களுக்கு இந்திய அரசுத் தரப்பில் இருந்து நேரடி எதிர்ப்புகள் பதிவு செய்யப்பட வில்லை. 

அமெரிக்காவின் ஆக்கிரமிப்பை தடுக்க தேசிய முன்னணி : கொமேனி அழைப்பு 

ஈரானின் மீதான அமெரிக்காவின் ஆக்கிர மிப்பு முயற்சிகளை எதிர்கொள்வதற்கு ஒரு ஒன்றுபட்ட தேசிய முன்னணி தேவை என ஈரானின் மதத் தலைவர் அயத்துல்லா அலி கொமேனி அழைப்பு விடுத்துள்ளார். மேலும் ஈரானை தனது ஆதிக்கத்திற்கு அடிபணியச் செய்ய அமெரிக்கா முயற்சி செய்து வருகிறது எனவும் அவர் குற்றம்சாட்டினார். ஈரானின் வளர்ச்சிக்கு தேவையான அணுசக்தித் திட்டத்தை பற்றி உலக நாடுகளுடன் பேச்சு வார்த்தை நடத்தி வரும் நிலையில் இந்த அழைப்பை அவர் வெளியிட்டுள்ளார்.

பாகிஸ்தானுக்கு மீண்டும்  உலக வங்கி உதவி 

பாகிஸ்தானுக்கு 47.9 மில்லியன் டாலர்கள் பணத்தை கொடுக்க உலக வங்கி ஒப்புதல் அளித்துள்ளது. பாகிஸ்தானின் பஞ்சாப் மாகாணத்தில் துவக்கக் கல்வியை ஊக்குவிக்கவும் கல்வியை மேம்படுத்துவதற்கா கவும் இப்பணம் கொடுக்கப்பட்டுள்ளதாகக் கூறப்படுகிறது. அதாவது குழந்தைகளின் பள்ளிக் கல்வியை மேம்படுத்தவும், பள்ளிக்குச் செல்லாத குழந்தைகளை மீண்டும் பள்ளியில் சேர்ப்பது உள்ளிட்ட பணிகளுக்காக இந்த பணம் கொடுக்கப்பட்டுள்ளதாக தெரிவிக்கப் பட்டுள்ளது.