பிரான்ஸ் தீவில் புயல் பலி ஆயிரத்தை கடக்கும்
பிரான்ஸ் நாட்டின் மாயோட்டே தீவில் வீசிய ‘சிடோ புயல்’ பேரழிவை ஏற்படுத்தியுள்ளது. கடந்த 100 ஆண்டுகளில் இல்லாத வகையில் வீசிய இப்புயல் ஒட்டுமொத்த தீவை யுமே அடையாளம் தெரியாமல் உருக் குலைத்து விட்டது. இந்த புயல் பாதிப் பால் 1000 க்கும் அதி கமான மக்கள் பலி யாகி இருப்பார் கள் என கூறப்படு கிறது. பாதிப்பு மிக மோசமாக இருப்பதால் துல்லிய மான தகவல்களை கொடுக்க 24 மணிநேரம் ஆகும் என அரசாங்கம் தெரிவித்துள்ளது. இதுவரை அதிகாரப்பூர்வ மாக 1400 பேர் படுகாயமடைந்துள்ளனர்.
பசிபிக் பெருங்கடலில் சுனாமி எச்சரிக்கை
பசிபிக் பெருங்கடலில் உள்ள ‘வனுவாட்டு தீவுக்கு’ சுனாமி எச்சரிக்கை விடப்பட்டுள்ளது. செவ்வாயன்று அதிகாலை 7.4 ரிக்டர் அளவில் சக்திவாய்ந்த நிலநடுக்கம் ஏற்பட்டுள்ளது. போர்ட் விலா என்ற பகுதியில் இருந்து மேற்கு திசையில் 30 கி.மீ தொலைவில் 43 கி.மீ ஆழத்தில் இந்த நிலநடுக்கம் உருவானதாக அமெ ரிக்க புவியியல் ஆய்வு மையம் தெரிவித்தது. இதனை தொடர்ந்து சுனாமி எச்சரிக்கை விடப்பட்டது. நில நடுக்கத்திற்கு பிறகு சுனாமி பேரலைகள் எழுவதாக சுனாமி எச்சரிக்கை மையம் தெரிவித்துள்ளது.
சிரியாவில் இருந்து 8 லட்சம் பேர் இடப்பெயர்வு
சிரியாவில் இருந்து சுமார் 8 லட்சத்து 80 ஆயிரத்துக்கும் அதிகமான மக்கள் இடம்பெயர்ந்துள்ளனர் என்று ஐநாமனிதாபிமான அமைப்பு தெரிவித்துள்ளது. மேலும் இடம் பெயர்ந்தவர்களில் சுமார் 6 சதவீத மக்கள் குறைந்த பட்சம் ஒரு கை அல்லது கால்களை இழந்துள்ளனர் என்றும் ஐ.நா அவை தெரிவித்துள்ளது. பயங்கரவாதிகள் சிரியாவை கைப்பற்றிய பிறகு இஸ்ரேல் அங்கு கொடூரமான தாக்குதல் நடத்தி வருவது குறிப்பிடத்தக்கது.
தென் கொரிய ஜனாதிபதி விசாரணைக்கு ஒத்துழைப்பார்
ராணுவச்சட்டத்தை அமலாக்கிய வழக்கில் தென் கொரிய ஜனாதிபதி யூன் சுக் யோல் விசாரணைக்கு ஒத்துழைப்பார் என்று அவரது பாதுகாப்புக் குழு தெரி வித்துள்ளது.அவர் கிளர்ச்சியில் ஈடுபட வில்லை எனவும் அவரது பாதுகாப்புக் குழு குறிப்பிட்டுள் ளது. ராணுவ சட்ட அமலாக்கத்தை தோற்கடித்த பிறகு யூன் சுக்கை பதவி நீக்கம் செய்யக்கோரி கொண்டுவரப்பட்ட தீர்மானம் அந்நாட்டு நாடாளுமன்றத்தில் வெற்றி பெற்றது. இந்த வழக்கை தென் கொரிய நீதிமன்றம் 180 நாட்களுக்குள் முடித்து தீர்ப்பளிக்க வேண்டும் என்பது குறிப்பிடத்தக்கது.
பைடனின் முடிவு முட்டாள் தனமானது
ரஷ்யாவின் எல்லைக்குள் சென்று தாக்குதல் நடத்தும் வகையிலான அமெரிக்காவின் நீண்ட தூர ஆயுதங்களைப் பயன்படுத்த உக்ரைன் ராணுவத்திற்கு கொடுக்கப்பட்ட அனு மதியை மாற்றலாம் என டொனால்டு டிரம்ப் கூறியுள்ளார். மேலும் ஜோ பைடன் எடுத்துள்ள இந்த முடிவு முட்டாள் தன மானது எனவும் விமர்சித்துள்ளார். இது போன்ற முக்கிய நடவடிக்கைகளை எடுப்பதற்கு முன் புதிதாக தேர்வாகியுள்ள ஜனாதிபதி மற்றும் நிர்வாகத்திடம் பைடன் கலந்தாலோசிக்கவில்லை எனவும் குற்றம் சாட்டியுள்ளார்.