ஜார்ஜியாவில் உள்ள இந்திய உணவகத்தில் விஷவாயு தாக்கி, 11 இந்தியர்கள் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்துள்ளனர்.
ஜார்ஜியாவின் குடாவிரி பகுதியில் உள்ள இந்திய உணவகம் ஒன்றில் மின்சாரம் துண்டிக்கப்பட்ட போது ஜெனரேட்டர் இயக்கப்பட்டுள்ளது. அப்போது, கார்பன் மோனாக்சைடு வாயு வெளியாகி அவ்விடத்தில் இருந்த 11 இந்தியர்கள் உட்பட 12 ஊழியர்கள் உயிரிழந்துள்ளதாக முதற்கட்ட விசாரணையில் தகவல் வெளியாகி உள்ளது.
மரணத்திற்கான சரியான காரணத்தை கண்டறிய தடயவியல் பரிசோதனையும் நடத்தப்பட்டு வருவதாக அந்நாட்டு போலீசார் தெரிவித்தனர்.