புதுதில்லி, டிச. 17 - மக்களவைக்கே ஒரேமாதிரி தேர் தலை நடத்தமுடியாத பாஜக அரசு, எப்படி நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியும்? என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நாடாளுமன்ற மதுரை மக்களவைத் தொகுதி உறுப்பி னர் சு. வெங்கடேசன் கேள்வி எழுப்பியுள் ளார்.
இதுகுறித்து அவர் தனது சமூக வலைதளப் பக்கத்தில், ‘ஒரே தேர்தல் … மக்களவையே முன்மாதிரி! மக்களவை உறுப்பினர்கள் வாக்களிக்கும்போது பாதிபேரின் இருக்கையில்தான் மின்னணு வாக்கு இயந்திரம் வேலை செய்தது. மீதிப் பேர் வாக்குச்சீட்டு முறை யில் வாக்களித்தனர். ஒரு அவைக்குள் ஒரேமாதிரி தேர்தலை நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரேமாதிரி தேர்தலை நடத்தப்போவதாக சட்டத் திருத்தம் கொண்டுவருகிறது’ என்று பதிவிட்டுள்ளார்.
முன்னதாக, மக்களவை - மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களின் சட்டப் பேரவைகளுக்கு ஒரேநேரத்தில் தோ்தல் வகையில் இரண்டு மசோதாக்கள் மக்களவையில் செவ்வாயன்று தாக்கல் செய்யப்பட்டன. முன்னதாக இந்த மசோதாவை தாக்கல் செய்யலாமா? என்பது குறித்து வாக்கெடுப்பு நடத்தப்பட்டது.
மக்களவை யில் முதல்முறையாக மின்னணு முறையில் வாக்கெடுப்பு நடைபெற்றது. அப்போது சில எம்.பி.க்களின் இருக்கைகளில் உள்ள மின்னணு வாக்குப்பதிவு இயந்திரங்கள் வேலை செய்யவில்லை. இதனால், மின்னணு வேலைசெய்யாத இருக்கைகளின் எம்.பி.க்கள், வாக்குச் சீட்டுகளில் வாக்களிக்குமாறு சபநாயகர் கேட்டுக் கொண்டார். இதனால் எம்.பி.க்கள் மின் னணு முறையிலும், வாக்குச் சீட்டுகளிலு மான இரண்டு விதமாக வாக்களித்தனர். இதனைக் குறிப்பிட்டுத் தான், 543 பேர்களைக் கொண்ட ஒரு அவைக்குள் மட்டுமான தேர்தலைக் கூட ஒரே மாதிரி யாக நடத்த முடியாத மோடி அரசு, நாடு முழுவதும் ஒரே நேரத்தில் தேர்தல் நடத்து வதாக கூறுகிறது என்று விமர்சித்துள் ளார்.