districts

ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக அறிவிப்பு!

சென்னை, டிச. 17 - ஈவிகேஎஸ் இளங் ங்கோவன் மறைவையடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப் பேரவை செயலகம் அறி வித்துள்ளது.

 காங்கிரஸ் கட்சியின் மூத்தத் தலைவரும் ஈரோடு கிழக்கு சட்டப்பேரவைத் தொகுதி உறுப்பினருமான ஈவிகேஎஸ் இளங்கோவன், உடல்நலக் குறைவால் சிகிச்சை பெற்று வந்த நிலை யில், கடந்த சனிக்கிழமை (டிச. 14) காலமானார்.

 இதை யடுத்து ஈரோடு கிழக்கு தொகுதி காலியானதாக சட்டப் பேரவைச் செயலகம் இன்று அறிவித்துள்ளது. அடுத்தாண்டு பிப்ரவரி  மாதம் தில்லி சட்டப்பேர வைத் தேர்தலுடன் ஈரோடு கிழக்கு தொகுதிக்கு இடைத் தேர்தல் நடத்த தேர்தல்  ஆணையம் திட்டமிட்டுள்ள தாக தகவல்கள் தெரி விக்கின்றன.