ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுப்பதை அனுமதிக்க முடியாது!
சிஐடியு கண்டனம்
சிஐடியு கண்டனம் சென்னை, ஏப்.15 - ஒப்பந்த அடிப்படையில் தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கு வதற்கு சிஐடியு எதிர்ப்பு தெரிவித்துள்ளது. இதுகுறித்து தமிழ்நாடு அரசுப் போக்கு வரத்து ஊழியர் சம்மேளன மாநில பொதுச் செயலாளர் கே.ஆறுமுக நயினார் வெளி யிட்டுள்ள அறிக்கையில் கூறியிருப்பதாவது: அரசு விரைவு போக்குவரத்து மதுரை, விழுப்புரம் போக்குவரத்து கழகங்களில் தனி யார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்க டெண்டர் வெளியிடப்பட்டுள்ளது. அரசின் இந்த முடிவு எந்த வகையிலும் ஏற்றுக்கொள்ள முடியாது. சென்ற வருடம் திருவண்ணாமலை தீபத்தின் போதும், பொங்கல் பண்டிகையை யொட்டியும் போக்குவரத்து கழகங்கள் தனி யார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்கின. அரசின் இந்த நடவடிக்கை தவறு என சுட்டிக் காண்பித்தோம். ஆனால், அதே பாதையில் தொடர்ந்து பயணிக்க அரசு இப்போது டெண்டர் கோரியுள்ளது. மக்க ளுக்கு சேவை செய்வதற்காகவே தனியார் பேருந்துகள் வாடகைக்கு எடுத்து இயக்கப் படுவதாக அப்போது போக்குவரத்துத் துறை அமைச்சர் விளக்கம் அளித்தார். போக்குவரத்துக் கழகங்கள் மக்கள் நலனுக்காகத்தான் இயக்கப்படுகின்றன என்பதில் மாறுபட்ட கருத்து இல்லை. மற்ற மாநிலங்களைவிட தமிழக போக்குவரத்து கழகங்கள் சிறப்பாக செயல்பட்டு வருகின்றன. தமிழகத்தின் சமூக பொருளாதார வளர்ச்சிக்கு போக்குவரத்து கழகங்களின் சேவையும் மிக முக்கிய காரணமாகும். அரசின் இந்த நடவடிக்கை போக்குவரத்து கழகங்களை சீர்குலைத்துவிடும். 50 ஆண்டுகளுக்கு மேலாக கோடை விடு முறை, விழாக் காலங்களில் போக்குவரத்து கழகங்களே சிறப்பு இயக்கத்தை நடத்தி வந்தன. பொதுமக்களுக்கு எவ்வித குறை பாடும் ஏற்பட்டதில்லை. கடந்த 2016, 2017 ஆண்டுகளில் போக்கு வரத்து கழகங்களில் நாள் ஒன்றுக்கு பய ணம் செய்த பயணிகள் எண்ணிக்கை 2 கோடியே 10 லட்சம். அப்போது சுமார் 23 ஆயி ரம் பேருந்துகள் இயங்கி வந்தன. இப்போது தினமும் பயணம் செய்யும் பயணி களின் எண்ணிக்கை 1 கோடியே 75 லட்சம் மட்டுமே. 30 லட்சத்திற்கும் மேல் பயணிகள் குறைந்த நிலையில், போக்குவரத்து கழகங்கள் தனியார் பேருந்துகளை வாட கைக்கு எடுத்துதான் சிறப்பு இயக்கத்தை செய்ய முடியுமா? தினமும் 2 கோடியே 10 லட்சம் பயணிகளுக்கு சேவை செய்த போக்கு வரத்து கழகங்களால் இப்போது ஏன் சேவை செய்ய முடியவில்லை என்பதை அரசு தெளிவுபடுத்த வேண்டும். 2018 ஆம் ஆண்டு சுமார் 22,000 பேருந்து கள் இயங்கிய நிலையில், 2500 பேருந்து களைக் குறைத்து, அதிமுக ஆட்சியில் அர சாணை வெளியிடப்பட்டது. போக்குவரத்துக் கழகங்கள் துவங்கிய காலத்திலிருந்து வரு டத்திற்கு 10 சதவீதம் பேருந்துகள் அதி கரித்து வந்த நிலையில், போக்குவரத்து கழ கங்களின் பேருந்து எண்ணிக்கையை குறைத்து அதிமுக அரசு வெளியிட்ட அரசா ணையை ரத்து செய்யாமல் அரசு அமுல் படுத்துவது ஏன்? போக்குவரத்து வழித்தடங்களில் தனி யார் பேருந்துகளை இயக்க மோட்டார் வாகனச் சட்டத்தில் 2019 ஆம் ஆண்டு அதிமுக அரசு திருத்தம் செய்தது. அந்த திருத்தத்தை அப்போது எதிர்த்த திராவிட முன்னேற்ற கழகம் அந்த சட்டத்திருத்தத் தைப் பயன்படுத்தி தனியார் பேருந்துகளை வாடகைக்கு எடுத்து இயக்குவது நியாய தானா? இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.