tamilnadu

img

மாநில உரிமைகளை காக்க உயர்நிலைக் குழு!

மாநில உரிமைகளை காக்க உயர்நிலைக் குழு! 

சட்டப் பேரவையில் முதலமைச்சர் அறிவிப்பு

சென்னை, ஏப்.15 - “இந்திய அரசமைப்புச் சட்டத்தில் வழங்கப் பட்டுள்ள மாநிலங்களின் நியாயமான உரிமை களை பாதுகாக்க, உச்ச நீதிமன்ற முன்னாள் நீதிபதி குரியன் ஜோசப் தலைமையில் உயர் நிலைக் குழு அமைக்கப்படுகிறது” என  சட்டப்பேரவையில் முதலமைச்சர் மு.க. ஸ்டாலின் அறிவித்தார். தமிழ்நாடு சட்டப்பேரவையில் இயற்றப் படும் மசோதாக்களுக்கு, ஆளுநர்களை வைத்து தடை போடுவது; பாஜக ஆட்சியில்  இல்லாத மாநிலங்களுக்கு உரிய நிதி வழங்காமல் வஞ்சிப்பது ஒன்றிய பாஜக அரசின் தொடர் நடவடிக்கையாக அமைந் துள்ளது. இதனால், இந்தியாவை ஒற்றை  நாடாக, ஒற்றுமையாக காக்க முழுமையான  பங்களிக்கும் மாநிலங்கள் பொருளாதாரம், கல்வி, சுகாதாரம் உள்ளிட்ட இன்றியமை யாத துறைகள் சார்ந்து கடுமையாக வஞ்சிக்கப்படுகிறது.  இத்தொடர் வஞ்சிப்பை போக்கும் பொருட்டு, மாநிலங்களின் நியாயமான உரி மைகளைப் பாதுகாக்கவும், ஒன்றிய -  மாநில அரசுகளுக்கு இடையிலான உறவு களை மேம்படுத்திடவும் உயர்மட்ட அளவில்  குழுவை அமைப்பது குறித்து தமிழ்நாடு சட்டப்பேரவையில் செவ்வாய்க்கிழமை (ஏப்.15) கேள்வி நேரம் முடிந்த தும், பேரவை விதி 110இன் கீழ் முதல மைச்சர் மு.க.ஸ்டாலின் முக்கிய அறிவிப்பை வெளியிட்டுள்ளார். அதன்படி, “இந்திய அரச மைப்புச் சட்டத்தில் வழங்கப்பட்டு உள்ள மாநிலங்களின் நியாயமான  உரிமைகளை பாதுகாக்கவும், ஒன்றிய - மாநில அரசுகளுக்கு இடை யேயான உறவுகளை மேம்படுத்திட வும், உச்ச நீதிமன்ற முன்னாள் நீதி பதி குரியன் ஜோசப் தலைமையில்  உயர்நிலைக் குழு அமைக்கப்படு கிறது. இதன் உறுப்பினர்களாக, இந்திய  கடல்சார் பல்கலைக்கழகத்தின் முன்னாள்  துணைவேந்தர் அசோக் வர்தன் மற்றும் தமிழ்நாடு மாநில திட்டக் குழுவின் முன்னாள்  துணைத் தலைவர், பேராசிரியர் மு.நாக நாதன் ஆகியோர் இடம்பெறுவார்கள்” என  முதலமைச்சர் தெரிவித்து உள்ளார். இக்குழுவின் கொள்கைகள் பின்வருமாறு: ஒன்றிய - மாநில அரசு களின் உறவு நிலைகளில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடிய  இந்திய அரசமைப்புச் சட்டத்தின் விதிகளையும், நடைமுறையில் உள்ள சட்டங்கள், ஆணைகள்,  கொள்கைகள் மற்றும் ஏற்பாடு களின் அனைத்து நிலைப்படி களையும் உயர்நிலைக் குழு ஆராய்ந்து, மறு மதிப்பீடு செய்யும். இந்திய அரசமைப்புச் சட்டத்தில் தற்போது உள்ள விதிகளை உயர்நிலைக் குழு ஆராய்ந்து, காலப்போக்கில் மாநிலப் பட்டியலிலிருந்து ஒத்திசைவுப் பட்டி யலுக்கு நகர்த்தப்பட்ட பொருண்மைகளை மீட்டெடுப்பது குறித்த வழிமுறைகளை பரிந்துரைக்கும். மாநிலங்கள் நல்லாட்சி வழங்குவதில் உள்ள சவால்களை எதிர்கொள்ள தேவை யான நடவடிக்கைகளை பரிந்துரை செய்யும். நாட்டின் ஒற்றுமை மற்றும் ஒருமைப் பாட்டிற்கு குந்தகம் ஏற்படுத்தாத வகையில், நிர்வாகத் துறையிலும், பேரவைகளில், நீதிமன்றக் கிளைகளிலும், மாநிலங்கள் அதிகபட்ச தன்னாட்சி உரிமை பெற்றிட உரிய நடவடிக்கைகளை பரிந்துரைக்கும். 1971-இல் அமைக்கப்பட்ட இராஜமன் னார் குழு மற்றும் ஒன்றிய - மாநில உறவு கள் குறித்த ஏனைய ஆணையங்களின் பரிந்து ரைகளையும், 1971 முதல் நாட்டில் நிலவும் பல் வேறு அரசியல், சமூகம், பொருளாதார மற்றும் சட்டம் சார்ந்தவற்றில் இருக்கக் கூடிய வளர்ச்சியையும் உயர்நிலைக் குழு  கருத்தில் கொள்ளுதல் வேண்டும். இவற்றை  ஆராய்ந்து அறிக்கைகள் வழங்கும். உயர்நிலைக் குழு தனது இடைக்கால  அறிக்கையை ஜனவரி மாத இறுதிக்குள், இறுதி அறிக்கையை இரண்டு ஆண்டு களில் அரசுக்கு வழங்கும் என எதிர்பார்க்கப் படுகிறது. இவ்வாறு முதலமைச்சர் கூறினார்.