நாளை அமைச்சரவைக் கூட்டம்
சென்னை: சென்னை தலை மைச் செயலகத்தில் முதல்வர் ஸ்டாலின் தலைமையில் ஏப்.17 ஆம் தேதி மாலை 5 மணிக்கு தமிழக அமைச்சரவை கூடுகிறது. இதில் முக்கிய தொழில் திட்டங் களுக்கு அனுமதி வழங்குவது தொடர்பாக ஆலோசிக்கப்பட வாய்ப்புள்ளதாக கூறப்படுகிறது. மேலும், புதிதாக தொடங்கப்பட உள்ள தொழில்கள், விரி வாக்கப்பட உள்ள தொழிற்சாலை பணிகள் குறித்தும் அமைச்ச ரவை கூட்டத்தில் ஆலோசிக்கப் படும். சில முக்கிய துறைகளில் கொள்கை முடிவுகள் எடுக்கப் படும் எனவும் எதிர்பார்க்கப் படுகிறது.
1.57 லட்சம் பேருக்கு எச்ஐவி தொற்று
சென்னை, ஏப்.15- தமிழக சட்டப்பேரவையில் கேள்வி நேரத்தின் போது, எச்ஐவி நோய் தொற்றாளர்கள் ஓய்வூதி யத்தை அரசு உயர்த்தி வழங்க வேண்டுமென கடையநல்லூர் எம்.எல்.ஏ. செ.கிருஷ்ண முரளி கோரிக்கை விடுத்தார். இதற்கு பதிலளித்து பேசிய அமைச்சர் மா.சுப்பிரமணியன், “தமிழகத்தில் 1,57,908 நபர்கள் எச்ஐவி தொற்றால் பாதிக்கப் பட்டுள்ளனர். அதில் 1,41,341 பேர் கூட்டு மருந்து சிகிச்சை பெற்று வருகின்றனர். அவர்களுக்கு 76 கூட்டு மருத்துவ சிகிச்சை மையங்கள் மூலம் மருந்து கள் வழங்கப்படுகின்றன. இதுதவிர எச்ஐவி தொற்றாளர்களின் குழந்தை களின் கல்வி, மருத்துவ செலவு தொகை தற்போது ரூ.25 கோடியாக உயர்ந்துள்ளது. எச்ஐவி தொற்றால் பாதிக்கப்பட்டவர்களின் குழந்தைகளுக்கு மாதந் தோறும் உதவித்தொகை வழங்க முதல்வர் கவ னத்திற்கு கொண்டு சென்று உரிய நடவடிக்கை எடுக்கப்படும்” என்றார்.
மாற்றுத்திறனாளிகளின் பிரச்சனைகளில் தலையிட முதல்வருக்கு வேண்டுகோள்
தமிழ்நாடு அனைத்து வகை மாற்றுத்திற னாளிகள் மற்றும் பாதுகாப்போர் உரிமை களுக்கான சங்கம் சார்பில், மாநிலத் தலை வர் தோ.வில்சன், மாநில பொதுச் செயலாளர் பா.ஜான்சிராணி ஆகியோர் தமிழக முதல மைச்சருக்கு அனுப்பியுள்ள கடிதத்தில், “தமிழ கம் முழுவதும் உள்ள மாற்றுத்திறனாளிகள் பல்வேறு பிரச்சனைகளை தங்களுக்கு கடிதம் மூலமாகவும், அமைச்சர் கீதாஜீவன் அவர்கள் மூலமாக நேரடியாகவும் தங்களிடம் பலமுறை தெரிவித்துள்ளோம். குறிப்பாக, மாற்றுத்திறனாளிகளின் உதவித் தொகையை ஆந்திர மாநிலத்தைப் போல் குறைந்தபட்சம் ரூ.6000 ஆக உயர்த்தி வழங்க வேண்டும். தமிழகத்தில் 100 நாள் வேலையில் மாற்றுத்திறனாளிகளுக்கு 4 மணி நேர வேலை என்பதை உறுதிப்படுத்த வேண்டும். அரசாணை எண்.151இன் படி தமிழக அரசின் பல்வேறு துறைகளில் இரண்டு ஆண்டுகளுக்கும் மேலாக பணிபுரிந்து வரும் மாற்றுத்திறனாளிகளை உடனே பணி நிரந்தரம் செய்ய வேண்டும். தமிழக அரசின்கீழ் உள்ள அனைத்துத் துறைகளிலும் 4 விழுக்காடு வேலைவாய்ப்பு மாற்றுத்திறனாளிகளுக்கு வழங்க வேண்டும். தமிழக அரசின் அனைத்துத் துறையிலும் பணிபுரியும் மாற்றுத்திறனாளிகளுக்கு ஊர்திப் படி ரூ.2500 கிடைப்பதை உறுதிப்படுத்த வேண்டும். எனவே, நடைபெற்றுக் கொண்டிருக்கக் கூடிய சட்டமன்ற கூட்டத் தொடரில் தமிழக முதல் வர், மாற்றுத்திறனாளிகள் துறைக்கு பொறுப் பான அமைச்சருக்கு தாங்கள் மேற்கண்ட கோரிக் கைகள் மீது உரிய தீர்வு காணும் வகை யில், அறிவிப்புகளை அறிவிக்க வேண்டும் என பல்லாயிரக்கணக்கான மாற்றுத்திறனாளி களின் சார்பில் கேட்டுக் கொள்கிறோம்” என கூறியுள்ளனர்.
கட்சியிலிருந்து நீக்கம் காரைக்கால்
, ஏப்.15- மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநி லம் காரைக்கால் வட்டச் செயலாளர் தமீம் அன்சாரி விடுத்துள்ள செய்தி வருமாறு: மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் புதுச்சேரி மாநிலம் காரைக்காலைச் சேர்ந்த வின்சென்ட், கட்சி விரோத நடவடிக்கைகள் காரணமாக கட்சியின் அடிப்படை உறுப்பினர் பொறுப்பிலிருந்து நீக்கப்பட்டுள்ளார். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.