பெண்ணுரிமைப் போராளியும், அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்கத்தை நிறுவிய தலைவர்களில் ஒருவருமான தோழர் பாப்பா உமாநாத் அவர்களின் 14ஆம் ஆண்டு நினைவுதினத்தையொட்டி மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் சார்பில் திருச்சி பொன்மலை சங்கத்திடலில் உள்ள அவரது நினைவிடத்தில் அஞ்சலி செலுத்தப்பட்டது. கட்சியின் மத்தியக்குழு உறுப்பினர் உ.வாசுகி, மாநில செயற்குழு உறுப்பினர் கே.பாலபாரதி, மத்திய கட்டுப்பாட்டுக்குழு உறுப்பினர் எஸ்.ஸ்ரீதர், மாநிலக்குழு உறுப்பினர்கள் ராஜா, ஜெயசீலன், மாநகர் மாவட்டச் செயலாளர் கோ.வெற்றிச்செல்வன், புறநகர் மாவட்டச் செயலாளர் சிவராஜன், பகுதிச் செயலாளர் விஜயேந்திரன், மூத்த தலைவர்கள் கே.வி.எஸ்.இந்துராஜ், சம்பத் மற்றும் மாதர் சங்க மாநிலத் தலைவர் எஸ்.வாலண்டினா, பொதுச் செயலாளர் அ.ராதிகா உள்ளிட்டோர் பங்கேற்றனர்.