கும்பகோணம், டிச.17- மக்கள் நலன் காக்கப் போராடும் மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் தஞ்சை மாவட்ட 24 ஆவது மாநாடு கும்பகோணத்தில் டிச.17 18, 19 ஆகிய தினங்களில் நடைபெறுகிறது.
மாநாட்டையொட்டி, கும்பகோணம் முழுவதும் செங்கொடிகளால் அலங்கரிக்கப்பட்டு செம்மயமாக காட்சியளிக்கிறது.
செவ்வாயன்று மாலை கும்பகோ ணம் கும்பேஸ்வரர் கோயில் அருகி லிருந்து உச்சிப்பிள்ளையார் கோயில் கடைத்தெரு வழியாக பொதுக்கூட்டம் நடைபெறும், கட்சியின் மூத்த தோழர் சங்கரய்யா நினைவரங்கம் வரை ஆயி ரக்கணக்கான செந்தொண்டர்கள் செங்கொடி ஏந்தி பேரணியாக வந்த னர்.
பேரணியில், கட்சியின் மத்தியக் குழு உறுப்பினர்கள் உ.வாசுகி, பெ. சண்முகம், கட்சியின் மாநிலக் குழு உறுப்பினரும் கந்தர்வக்கோட்டை சட்ட மன்ற உறுப்பினருமான எம்.சின்ன துரை, தஞ்சை மாவட்டச் செயலாளர் சின்னை.பாண்டியன், கட்சியின் மூத்த தோழர்கள், செயற்குழு, மாவட்டக் குழு, மாநகர-ஒன்றியக் குழு உறுப்பி னர்கள், ஒன்றியச் செயலாளர்கள், மாதர், வாலிபர், மாணவர் சங்கத்தி னர், சிஐடியு மற்றும் மாற்றுத்திறனாளி கள், ஓய்வூதியர்கள், விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள் சங்கத்தி னர் என திரளான தொண்டர்கள் கலந்து கொண்டனர்.
தஞ்சாவூரில் இருந்து கொடிப் பயணம்; பட்டுக்கோட்டை, பூதலூரிலிருந்து தியாகிகள் சுடர்
தஞ்சாவூர், டிச.17 - தஞ்சாவூரில் இருந்து மாநாட்டு கொடிப்பயணம் செவ்வாய்க்கிழமை மாலை துவங்கியது.
தஞ்சாவூர் மாநகரச் செயலாளர் எம்.வடிவேலன் தலைமையில், மாவட்டக்குழு உறுப்பினர் என்.குரு சாமி கொடி எடுத்துக் கொடுத்தார். மூத்த தோழர் என்.சீனிவாசன் வாழ்த்திப் பேசினார். மாதர் சங்க மாநிலக்குழு உறுப்பினர் ஆர்.கலைச்செல்வி, மாவட்டச் செயலா ளர் இ.வசந்தி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர்.
தியாகிகள் நினைவுச் சுடர்
பட்டுக்கோட்டை ரயிலடியில், தியாகிகள் இரணியன், சிவராமன், ஆறுமுகம் நினைவுச் சுடரை சிபிஎம் ஒன்றியச் செயலாளர் எஸ்.கந்தசாமி தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் கோ.நீலமேகம் எடுத்துக் கொடுத்தார். மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எம்.செல்வம் மற்றும் ஒன்றியக்குழு உறுப்பினர்கள், கிளைச் செயலாளர்கள் கலந்து கொண்டனர்.
பூதலூர் தெற்கு ஒன்றியம், ராய முண்டான்பட்டி தியாகி என்.வி நினை விடத்தில், தியாகி என்.வெங்கடாசலம் நினைவுச் சுடரை, ஒன்றியச் செயலா ளர் சி.பாஸ்கர் தலைமையில், மாவட்டச் செயற்குழு உறுப்பினர் எஸ். தமிழ்ச்செல்வி எடுத்துக் கொடுத்தார்.