சென்னை, டிச. 17- நாட்டின் கனிம வளங்களை கார்ப்பரேட் நிறு வனங்களுக்கு தாரை வார்க்கும் மோடி அரசின் கொள்கைகளுக்கு எதிராக, 2015 முதலே குரல் கொடுத்தவர்கள் கம்யூனிஸ்டுகள். அன்று அவர்கள் எழுப்பிய எச்சரிக்கை இன்று உண்மையாகி, டங்ஸ்டன் சுரங்க உரிமம் வழங்குவதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. நரேந்திர மோடி தலைமையிலான அரசு பதவியேற்ற பின்பு 2015-ல் சுரங்கங்கள் மற்றும் கனிமங்கள் (மேம்பாடு மற்றும் ஒழுங்குமுறை) சட்டத் திருத்தம் கொண்டு வரப்பட்டபோது, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாநிலங் களவை உறுப்பினர் டி.கே.ரங்கராஜன் தலைமை யில் கம்யூனிஸ்டுகள் கடும் எதிர்ப்பு தெரி வித்தனர்.
இம்மசோதாவை மாநிலங்களவையில் அறிமுகப்படுத்திய போது ஆட்சேபனை எழுப்பி யதைத் தொடர்ந்து தெரிவுக்குழு அமைக்கப் பட்டது. 19 பேர் கொண்ட அந்தக் குழுவில் டி.கே.ரங்கராஜன், து.ராஜா உள்ளிட்டோர் இடம்பெற்றிருந்தனர். அந்த தெரிவுக்குழுவின் பரிசீலனையின் போது, டி.கே.ரங்கராஜன் ஒரு விரிவான ஆட்சேபனைக் குறிப்பு முன்வைத்தார். டி.கே.ரங்கராஜனுடன், இந்திய கம்யூ னிஸ்ட் கட்சியின் து.ராஜா உள்ளிட்ட நான்கு உறுப்பி னர்கள் இணைந்து கொண்டு, அவரது எதிர்ப்புக் குறிப்பை ஆதரித்தனர்.
கனிம வளம் கொண்ட மாநிலங்களின் அதிகாரிகள் மற்றும் பழங்குடி அமைப்புகளின் கருத்துகளை அரசு புறக்கணித்துள்ளது என்று அவர்கள் சுட்டிக்காட்டினர். சுரங்க குத்தகை காலத்தை 30 ஆண்டுகளில் இருந்து 50 ஆண்டுகளாக உயர்த்துவதற்கு எதிர்ப்பு தெரி வித்தனர்.
சட்டவிரோத சுரங்கத்தை தடுப்பதற்கு அபராதம் மட்டுமல்லாமல், கடுமையான நட வடிக்கைகள் தேவை என்று வலியுறுத்தினர். மாநில அரசுகளிடம் போதிய உள்கட்டமைப்பு மற்றும் நிபுணத்துவம் இல்லாததால், சுரங்கத் திட்டங்களுக்கு ஒன்றிய அரசின் ஒப்புதல் அவசியம் என்றனர். 2011 மசோதாவில் இருந்த முக்கிய நன்மை கள் குறைக்கப்பட்டதையும் எதிர்த்தனர்.
நிலக்கரி அல்லாத கனிமங்களுக்கு 100% ராயல்டி பகிர்வு, நிலக்கரிக்கு 25% லாபப் பகிர்வு என இருந்த விதிகளை மாற்றி, ராயல்டியில் மூன்றில் ஒரு பங்கு மட்டுமே மாவட்ட கனிம அறக் கட்டளைக்கு வழங்க வழிவகைசெய்யப்பட்டது. கம்யூனிஸ்டுகளின் எச்சரிக்கை இன்று உண்மையாகியுள்ளது.
2023-ல் மேலும் கார்ப்ப ரேட் சார்பு திருத்தங்கள் கொண்டுவரப் பட்டுள்ளன. முக்கிய கனிமங்களை ஏலம் விடும் அதிகாரம் ஒன்றிய அரசிடம் குவிக்கப்பட்டுள் ளது. மாநில அரசுகளின் அதிகாரங்கள் பறிக்கப்பட்டுள்ளன. இதன் விளைவாக, தமிழகத்தில் மதுரை அரிட்டாபட்டியில் டங்ஸ்டன் சுரங்க உரிமம் வேதாந்தாவுக்கு வழங்கப்பட்டுள்ளது. தமிழக அரசின் ஒப்புதல் இன்றி இந்த உரிமம் வழங்கப் பட்டுள்ளது. தூத்துக்குடியில் 14 உயிர்களை பலி வாங்கிய வேதாந்தாவுக்கு மீண்டும் தமி ழகத்தில் நுழைய அனுமதி வழங்கப்பட்டுள் ளது.
இதற்கு எதிராக மக்கள் போராட்டம் வெடித்துள்ளது. 2015-ல் கம்யூனிஸ்டுகள் எதிர்த்த அதே கனிமக் கொள்ளை இன்று தீவிரமடைந்துள்ளது. மக்களுக்கு சொந்தமான கனிம வளங்களை கார்ப்பரேட் நிறுவனங்களுக்கு தாரைவார் க்கும் மோடி அரசின் கொள்கைகளை எதிர்த்துப் போராட வேண்டிய நேரம் இது. கம்யூனிஸ்டு கள் தொடக்கம் முதலே எச்சரித்து வந்த அபா யங்கள் இன்று நிஜமாகி உள்ளன. தமிழகத்தில் டங்ஸ்டன் சுரங்க உரிமத்திற்கு எதிரான மக்களின் போராட்டம் வலுத்து வருகிறது. மக்களின் கனிம வளங்களை பாதுகாக்க, கம்யூனிஸ்டு களின் தலைமையிலான மக்கள் இயக்கம் முன்னெடுக்கப்பட வேண்டிய காலம் இது.