சென்னை,டிச.17- நிர்வாகம் -கணக்கீட்டு பிரிவு- மின் கட்டண வசூல் மையங்களில் ரூ.4 ஆயிரத்திற்கு மேல் மின் கட்ட ணம் பெறுகிற சேவை நிறுத்தப் பட்டுள்ளது. மின் நுகர்வோர்கள் நலன் கருதி மின் கட்டணத்தை பண மாக பெற்றிட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று தமிழ்நாடு மின்சார வாரிய நிறுவனத் தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநருக்கு தமிழ்நாடு மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு) கோரிக்கை விடுத்துள்ளது.
இதுகுறித்து மின்ஊழியர் மத்திய அமைப்பு (சிஐடியு)வின் பொதுச்செயலாளர் எஸ்.இராஜேந் திரன் அனுப்பிய கடிதத்தில் கூறி யிருப்பதாவது:
தமிழ்நாடு மின்விநியோக கழக பிரிவு அலுவலகங்களில் உள்ள மின் கட்டண வசூல் மையங்களில், தாழ்வழுத்த மின்நுகர்வோர்களிடம் மின் கட்டணம் வசூல் செய்வதில் உள்ள குறைபாடுகளை சரி செய்திட மின்ஊழியர் மத்திய அமைப்பின் கருத்துகளையும் உடன் நடவடிக்கையையும் எடுக்க கேட்டுக்கொள்கிறோம்.
தமிழ்நாட்டில் ஒட்டுமொத்த மாக 2024 ஆம் ஆண்டு தாவுகளின் படி 5.45 கோடி மின் இணைப்புகள் உள்ளன. இதில் தாழ்வழுத்த மின் நுகர்வோர்கள் (LT Consumers) மட்டும் சுமார் 3 கோடி பேர் உள்ள னர். மேற்கண்ட மின் நுகர்வோர் களில் ஒரு பகுதியினர் வங்கி, தபால் நிலையம். இ- சேவை மையம் மூல மாகவும், ஒரு பகுதியினர் ஆன்லைன் பேமென்ட் (Online Payment) முறையிலும், பெரும் பகுதி ஏழை, எளிய மின் நுகர்வோர் கள் மின்வாரிய அலுவலகங்களில் நேரடியாக மின் கட்டணங்களை செலுத்தி வருகின்றனர்.
வாய்மொழி உத்தரவால் தன்னிச்சையாக மாற்றம்
கடந்த ஒரு வருட காலமாக மின்வாரிய தலைமை நிர்வாகம் மின் கட்டண வசூல் முறைகளில் எந்த விதமான உத்தரவுகளும் வழங்காமல், முன்னறிவிப்பும் இல்லாமல் பிரிவு அலுவலகங் களில் உள்ள மின்கட்டண வசூல் தொடர்பாக மாற்றங்களை வாய் மொழி உத்தரவின் மூலம் தன்னிச்சையாக செய்து வருவது ஊழியர்கள் மத்தியிலும், பொது மக்கள் மத்தியிலும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.
ஏனெனில் பெரும்பான்மை யான ஏழை, எளிய மக்கள் மின் கட்டணத்தை நேரடியாக செலுத்தி வரும் போது, மின் ஊழியர்கள் ஒரு மின் நுகர்வோரிடம், ஒரு மின்கட்டண அட்டைக்கு ரூ.10 ஆயி ரத்திற்குள் இருந்தால் பணமாக வும், காசோலை, வரைவோலை மூலமாகவும் பெற்று வந்தார்கள். ரூ.10 ஆயிரத்திற்கு மேல் செலுத்த வரும் மின் நுகர்வோரிடம் காசோ லை, வரைவோலை அல்லது ஆன் லைனில் மின் கட்டணம் செலுத்திட வலியுறுத்தி வருகின்றனர், அந்த அடிப்படையில் தான் மின் நுகர்வோ ரும் தான் விரும்பும் விதத்தில் மின் கட்டணத்தை செலுத்தி வந்தனர்.
பணியாளர்களிடம் வாக்குவாதம்
vகடந்த சில மாதங்களாக ரூ.5 ஆயிரத்திற்கு மேல் மின் கட்டணம் வரும் மின்நுகர்வோரின் கலெக்சன் கேட்வே (Collection Getway) முடக்கப்பட்டது. அது மட்டு மல்ல, இரண்டு மூன்று மின் கட்டண அட்டைகளின் மின் கட்டண கூட்டுத் தொகை ரூ.5 ஆயிரத்திற்கு மேல் வந்தால், அதுவும் கணினியில் முடக்கப்பட்டது. தற்போது ரூ.4 ஆயிரம் மின் கட்டணம் செலுத்தும் மின் நுகர்வோருக்கும் அதே நிலை வந்துள்ளது. இதனால் மின் கட்டணம் செலுத்த வரும் மின் நுகர்வோர்கள் கோபமடைந்து மின் கட்டண வசூல் மைய பணியாளர் களிடம் சண்டையிடுகின்ற நிகழ்வும் ஆங்காங்கே ஏற்பட்டுள்ளது. ஒரு சில மின்நுகர்வோர்கள் மின் கட்டணத்தை வாங்க மறுக்கும் ஊழியர்களிடம் வாரிய உத்தரவு களை கேட்டு மிரட்டுகின்றனர். மேலும் தமிழக அரசிற்கு அவப் பெயர் ஏற்படுத்திட திட்டமிட்டு மின் வாரிய அதிகாரிகள் செயல்படு கிறீர்களா எனவும் வினவுவது ஊழியர்கள் மத்தியில் ஒரு விதப் பதற்றத்தை ஏற்படுத்தியுள்ளது.
எனவே தலைவர் மற்றும் மேலாண்மை இயக்குநர் இக்கடி தத்தின் மீது உரிய நடவடிக்கை எடுத்து, மின் கட்டண வசூல் முறைகளில் மாற்றம் ஏற்படுத்து வதற்கு முன்பு வாரிய உத்தரவு களை வெளியிட்டு பொதுமக்களி டம் விழிப்புணர்வு ஏற்படுத்திடவும் மேலும், தற்போது ரூ.4 ஆயிரத்திற் கும் மேல் மின் கட்டணம் செலுத்திட கணினியில் கலெக்சன் கேட்வே (Collection Gateway)யில் முடக்கப்பட்டுள்ளதை நீக்கி ரொக்க மாக செலுத்தவரும் மின் நுகர்வோ ர்களிடம் பணமாக வசூல் செய்து பொதுமக்களிடம் நற்பெயர் ஏற்ப டும் விதத்தில் உரிய வழிகாட்டுதல் உத் தரவுகளை பிறப்பிக்க வேண்டும்.
இவ்வாறு அதில் தெரிவிக்கப் பட்டுள்ளது.