tamilnadu

img

பத்திரிகையாளர் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கூறி முதல்வர் உறுதி

சென்னை,டிச.17- பத்திரிகையாளர்களின் கோரிக்கைகள் நிறைவேற்றப்படும் என்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

சென்னை பத்திரிகையாளர் மன்றத் திற்கான தேர்தல் டிசம்பர் 15 அன்று நடைபெற்றது.  இந்ததேர்தலில் வெற்றி பெற்ற புதிய நிர்வாகிகள் டிசம்பர் 17 அன்று முதலமைச்சர் மு.க.ஸ்டாலினை சந்தித்து வாழ்த்து பெற்றனர். அப்போது, பத்திரிகையாளர்கள் கோரிக்கை நிறைவேற்றித்தரப்படும் என முதலமைச்சர் மு.க.ஸ்டாலின் உறுதியளித்துள்ளார்.

இது குறித்து சமூகவலைதளத்திலும் பதிவிட்டுள்ளார். தனது சமூக வலைதளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் சென்னை பத்திரிகையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகிகளுக்கு வாழ்த்துக்கள்! அவர்கள் வாழ்த்து  பெற வந்தபோது, அரசு பல்வேறு பத்திரிகையாளர் நலத்திட்டங்களைச் சிறப்பாகச் செய்து வந்தாலும், இன் னும் சில கோரிக்கைகள் இருப்பதாக தெரிவித்தனர். அரசு அவற்றையும் படிப்படியாக நிறைவேற்றித் தரும் என்பதைத் தெரிவித்துக் கொள் கிறேன் என்று பதிவிட்டுள்ளார். சென்னை தலைமைச் செயல கத்தில் முதலமைச்சர் மு.க.ஸ்டாலி னுடனான  சந்திப்பில் சென்னை பத்திரி கையாளர் மன்றத்தின் புதிய நிர்வாகி கள் எம்.சுரேஷ் வேதநாயகம், ஆசிப், மணிகண்டன், நெல்சன் சேவியர், மதன், சுந்தர பாரதி, ஸ்டாலின், செ. கவாஸ்கர், அகிலா ஈஸ்வரன், பழனி வேல், விஜயகோபால் ஆகியோர் வாழ்த்து பெற்றனர். வழக்கறிஞர் ரிச்சர்ட்சன் வில்சன் ஆகியோர் உடனிருந்தனர்.