states

img

உடனடி கடன் சேவைகளால் குறையும் சேமிப்புத் திறன் ரிசர்வ் வங்கி துணை ஆளுநர் கருத்து

மும்பை கிரெடிட் கார்டு உள்ளிட்ட உடனடி கடன் சேவை கள் மூலம் இளம் தலை முறையின் சேமிப்புத் திறன் குறைந்துள்ளதாக ரிசர்வ் வங்கி யின் துணை ஆளுநர் சுவாமி நாதன் கூறியுள்ளார். 

இதுகுறித்து அவர் மேலும் கூறுகையில்,”சிறுநிதி கடன் வாங்குபவர்களின் எண்ணிக்கை நாளுக்குநாள் அதிகரித்து வரு கிறது. 2024 ஜூன் மாத நில வரப்படி 25 லட்சம் பேர் நுண் கடன் வழங்கும் நிறுவனங்கள் மூலம் கடன் வாங்கியுள்ளனர். கடந்த ஆண்டு இதே கால கட்டத்தை விட 17.2% அதிகமாக உள்ளது என கிரெடிட் பீரோ கிரிப் ஹை மார்க்கின் தரவு காட்டு கிறது. அதே போல கிரெடிட் கார்டு சேவைகளின் பயன்பாடும்  அதிகரித்து வருகிறது. இந்த கடன் வழங்கல் மூலம் கடன் வழங்கும் நிறுவனங்கள் அதிக லாபம் ஈட்டலாம். ஆனால் இளம் தலைமுறையின் சேமிப்புத் திறன் மிக  மோசமான அளவில் குறைந்துள்ளது. புதிய கடன்கள் அதிகரிப்பதால் தொழில்நுட்பங்கள், பாரம் பரிய பொருளாதாரக் கொள்கை களின் செயல்திறனும் பாதிக்க வாய்ப்புள்ளது” என அவர் எச்ச ரிக்கை விடுத்துள்ளார்.

“ஆட்டோமேடிக் பே” என்ற பெயரில் நவீன கொள்ளை

யுனிபைடு பேமெண்ட்ஸ் இன்டர்பேஸ் (Unified Payments Interface) சேவையின் கீழ் கூகுள் பே (Google Pay), போன் பே (PhonePe), பேடிஎம் (Paytm) போன்ற பணப்பரி வர்த்தனை ஆப்கள் செயல்பட்டு வருகின்றன. யுபிஐ (UPI) ஆப்கள் பல்வேறு வகை யில் நல்ல பலனை தந்தாலும், பலனுக்கு ஏற்ப மோசடி சம்பவங்களும் ஏராள மாக நிகழ்ந்து வருகின்றன. 

இந்த மோசடியில் முக்கியமானது “ஆட்டோ மேடிக் பே” என்ற பெயரிலான நவீனக் கொள்ளை ஆகும். வங்கியில் கடன் வாங்குவதற்காக “பாலிசி பஜார்” என்ற தளத்தில் சிபில் ஸ்கோர் (CIBIL SCORE) காணும் வாடிக்கையாளர்களிடம் “கிரடிட் பிளஸ்” என்ற பெயரில் இன்சூரன்ஸ் அம்சத்தை மறைமுகமாக (சிபில் ஸ்கோர் டவுன்லோட் மூலமாக) கொடுத்து ரூ.99 வசூலிக் கப்படுகிறது. ஆனால் இந்த கிரடிட் பிளஸ் இன்சூரன்ஸ் கட்டணம் மாதா மாதம் “ஆட்டோமேடிக் பே (Automatic pay)” என்ற பெயரில் வாடிக்கையாளர்களிடம் அனுமதி இல்லாமலேயே வசூலித்து வருகிறது பாலிசி பஜார். 

அதாவது ஒவ்வொரு மாதமும் ரூ.99 கட்டணத்தை கூகுள் பே, போன் பே மூலம் வங்கிக் கணக்கில் இருந்து வசூலிக்கிறது பாலிசி பஜார். ஹாட் ஸ்டார், நெட்பிளிக்ஸ் உள்ளிட்ட ஒடிடி தளங்களும் பாலிசி பஜார் போல  “ஆட்டோமேடிக் பே” தளம் மூலம் சந்தாவை வசூலித்து வருகின்றன. இந்த நவீனக் கொள்ளைக்கு நாடு முழுவதும் கடும் எதிர்ப்பு கிளம்பி வருகிறது என்பது குறிப்பிடத்தக்கது.