திருப்பூர், ஜன.23- வெறி நாய்களால் வாழ்வாதா ரம் இழந்துள்ள விவசாயிகளுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும், கொலை, கொள்ளை உள்ளிட்ட குற்ற சம்பவங்களை தடுக்க நடவ டிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ் நாடு விவசாயிகள் சங்கத்தினர் வியாழனன்று காங்கேயம் பேருந்து நிலையம் முன்பு கண்டன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். திருப்பூரில் கடந்த சில மாதங் களாக தெரு நாய்கள், வெறி நாய் களாக மாறி கால்நடைகளை அடைத்து வைத்திருக்கும் இடத் திற்கே சென்றும், மேய்ச்சலில் இருக் கும் ஆடுகளையும் கடித்து கொன்று வருகின்றன. இதனால் சமீபத்தில் 500க்கும் மேற்பட்ட ஆடுகள், கோழி கள், கன்று குட்டிகள் உயிரிழந்தி ருக்கின்றன. இவை லட்சக்கணக் கான ரூபாய் விலை மதிப்புள் ளவை. தெருநாய்களால் நூற்றுக் கணக்கான விவசாயிகள் வாழ்வா தாரம் பாதிப்புக்குள்ளாகியுள்ளது. தெருநாய்களை கட்டுப்படுத்த வேண்டிய உள்ளாட்சி நிர்வாகங் கள் உரிய நடவடிக்கை எடுப்ப தில்லை. தெருவோரம் வீசி எறியப் படும் இறைச்சி கழிவுகளை தின்று பழக்கப்பட்ட தெருநாய்கள், அந்த உணவு கிடைக்காத போது வெறி நாய்களாக மாறிவிடுகிறது. அப்ப டிப்பட்ட இந்த நாய்களை கட்டுப் படுத்துவதற்கு போதுமான அளவு குடும்ப கட்டுப்பாடு செய்யப்படுவ தில்லை. அரசின் இந்த மெத்தன போக்கை சுட்டிக்காட்டி விவசாயி கள் போராட்டத்தில் ஈடுபட்டனர். இதையடுத்து, இறந்த கால்நடை களுக்கு உரிய இழப்பீடு வழங்க அர சுக்கு பரிந்துரைக்கப்படும். தெரு நாய்களின் இனப்பெருக்கத்தை கட்டுப்படுத்த உரிய கட்டமைப்பு விரைவில் உருவாக்கப்படும் என ஆட்சியர் உறுதி அளித்தார். இருப் பினும் எந்த பணிகளும் நடைபெற வில்லை. இழப்பீடு வழங்குவதற் காண அறிவிப்பும் வரவில்லை. இந்நிலையில், தமிழ்நாடு அரசு தாமதப்படுத்தாமல் உடனடியாக உயிரிழந்துள்ள ஆடு, கோழி, கன்று குட்டிகள் ஆகியவற்றுக்கு உரிய இழப்பீடு வழங்க வேண்டும். கொலை, கொள்ளை குற்ற சம்ப வங்களை தடுக்க நடவடிக்கை எடுக்க வலியுறுத்தி தமிழ்நாடு விவ சாயிகள் சங்கத்தினர் வியாழனன்று ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர். இந்த ஆர்ப்பாட்டத்திற்கு மாவட்டத் தலைவர் எஸ்.ஆர்.மதுசூதனன் தலைமை வகித்தார். மாநில துணைச்செயலாளர் பி.பெருமாள், மாவட்டச் செயலாளர் ஆர்.குமார், மாவட்டப் பொருளாளர் ஏ.பால தண்டபாணி, தமிழ்நாடு கரும்பு விவசாய சங்கம் அமராவதி கூட்டு றவு சங்க ஆலை செயலாளர் எம். எம்.வீரப்பன், தமிழ்நாடு பால் உற் பத்தியாளர்கள் சங்க மாவட்டத் தலைவர் எஸ்.கே.கொளந்தசாமி, தமிழ்நாடு தென்னை விவசாயிகள் சங்க மாவட்டத் தலைவர் எஸ். பரமசிவம் ஆகியோர் கோரிக்கை களை விளக்கி பேசினர். பிஏபி வெள்ளகோவில் கிளை வாய்க் கால் நீர் பாதுகாப்பு சங்க தலைவர் பி.வேலுச்சாமி, அனைத்திந்திய ஜனநாயக மாதர் சங்க மாவட்ட துணைத் தலைவர் கே.சரஸ்வதி ஆகியோர் வாழ்த்திப் பேசினர். இதில், திரளான விவசாயிகள் கலந்து கொண்டனர்.