கோபி, ஜன.23- கோபி வட்டார போக்குவரத்து அலுவலகத்தில் தேசிய சாலைப் பாதுகாப்பு மாத விழாவை முன்னிட்டு ஓட்டுநர்க ளுக்கு இலவச கண்பரிசோதனை முகாம் நடைபெற்றது. ஈரோடு மாவட்டம், கோபி வட்டாரப் போக்குவரத்து அலு வலகத்தில் தேசிய சாலை பாதுகாப்பு மாத விழாவையொட்டி ஓட்டுனர்களுக்கு இலவச கண் பரிசோதனை முகாம் வியா ழனன்று நடைபெற்றது. இம்முகாமை கோபி மோட்டார் வாகன ஆய்வாளர் ரவிக்குமார், சத்தி மோட்டார் வாகன ஆய்வாளர் கண்ணன் ஆகியோர் தொடங்கி வைத்தனர். முகா மில் பள்ளி, கல்லூரி வாகன ஓட்டுனர்கள், தனியார் பேருந்து ஓட்டுனர்கள், அலுவலகப் பணியாளர்களுக்கு கண் மருத்துவர் கள் மூலம் தூரப்பார்வை, கிட்ட பார்வை, கண்ணில் நீர்வடிதல், கண்புரை உள்ளிட்ட கண் சம்பந்தமான நோய்களை கண்டறிய இலவச பரிசோதனை மேற்கொண்டனர். பரி சோதனை மேற்கொண்ட ஓட்டுனர்கள், அலுவலகப் பணி யாளர்கள் என 300க்கும் மேற்பட்டவர்களுக்கு கண் சம்பந்த மான பிரச்சனைகளுக்கு உரிய தீர்வு ஏற்படும் வகையில் ஆலோசனைகள் வழங்கினர்.