districts

img

இலவச வீட்டுமனை கேட்டு வட்டாட்சியரிடம் மனு

நாமக்கல், ஜன.23- திருச்செங்கோடு அருகே இலுப் புலி மாரப்பம்பாளையம் பகுதியில்  வசித்து வரும் பொதுமக்களுக்கு, இலவச வீட்டுமனை வழங்க வேண் டும், என வலியுறுத்தி திருச்செங் கோடு வட்டாட்சியர் அலுவலகத்தில் மனு அளிக்கப்பட்டது. நாமக்கல் மாவட்டம், திருச்செங் கோடு வட்டம், எலச்சிபாளையம் ஒன் றியம், இலுப்புலி கிராமம், மாரப்பம் பாளையத்தில் 100க்கும் மேற்பட்ட  குடும்பத்தினர் வசித்து வருகின்ற னர். விவசாயக் கூலி வேலைக்கு சென்று வாழ்க்கை நடத்தி வரும்  இப்பகுதி மக்கள், கூட்டு குடும்பமாக வும், பலர் வாடகை வீட்டிலும் வசித்து  வருகின்றனர். இதனால் பெரும் சிர மத்தை சந்தித்து வரும் பொது மக்கள், வியாழனன்று திருச்செங் கோடு வட்டாட்சியர் விஜயகாந்திடம் மனு அளித்தனர். அதில், வெள்ளக ரடு அருகே சர்வே எண்: 403இல் அரசு புறம்போக்கு நிலம் உள்ளது. புறம் போக்கு நிலத்தில் வீடு இல்லாத மக்களுக்கு இலவச வீட்டு மனை  நிலம் ஒதுக்கீடு செய்து தர வேண்டும், என தெரிவிக்கப்பட்டுள்ளது.முன்னதாக, இந்நிகழ்வில், மார்க் சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் சு.சுரேஷ், ஒன்றிக்குழு உறுப்பினர் பி.கிட்டு சாமி, கிளைச் செயலாளர் தங்கவேல்  மற்றும் 100க்கும் மேற்பட்ட பொ துமக்கள் கலந்து கொண்டனர். மனு வைப் பெற்றுக் கொண்ட வட்டாட் சியர், உடனடியாக ஆய்வு செய்து தகுதியுள்ளவர்களுக்கு நிலம் வழங் கப்படும் என உறுதியளித்தார்.