districts

கோயம்புத்தூர் முக்கிய செய்திகள்

இபிஎஸ் சுற்றுப்பயணம் அறிவித்த நிமிடத்திலேயே மாற்றி அமைப்பு

கோவை, ஜன.23- அதிமுக பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி கோவையில் இருந்து  31 ம் தேதி சுற்றுப்பயணத்தை துவங்கு வதாக அறிவித்த வேலுமணி சிறிது நேரத்தில் அதே மேடை யில், தேதி தள்ளி போகிறது அன்றைய தினம் சுற்றுப்பய ணம் இல்லை என்றார். இது அதிமுக வட்டாரத்தில் தங்கள் கட்சிக்குள் ஒருங்கிணைப்பு இல்லையோ என்கிற சல சலப்பை ஏற்படுத்தியது. கோவை மாவட்ட அதிமுக அலுவலகத்தில் வியாழனன்று செயல்வீரர் கூட்டம், கட்சியின் கொறாடாவும் முன்னாள் அமைச்சருமான எஸ்.பி.வேலுமணி தலைமையில் நடை பெற்றது. இந்த ஆலோசனை கூட்டத்தில் பேசிய முன்னாள்  அமைச்சர் எஸ்.பி வேலுமணி, அதிமுக ஆட்சி அமைக்க அதி முக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமி,  234 தொகுதி சுற்றுப்பயணம் செய்ய உள்ளார். ஜனவரி 31 ஆம் தேதி கோவையில் இருந்து சுற்றுப்பயணம் துவங்குகின்றது என் றார். மேலும், மிகப்பெரிய அளவில் வரவேற்பு இருக்க வேண் டும் என்றெல்லாம் பில்டப் கொடுத்தார்.  இதனிடையே கட்சி நிர்வாகிகள் அவரிடம் ஏதோ தக வலை சொல்ல மீண்டும் மைக்பிடித்து பேசிய எஸ்.பி.வேலு மணி, பொதுச்செயலாளரின் ஜன.31 மற்றும் பிப்.1 ஆம் தேதி  சுற்றுப்பயணம் தேதியில் மாற்றம் இருப்பதாகவும்,  அது 10  நாட்கள் தள்ளி போகின்றது என தெரிவித்தார். அதிமுக பொதுச் செயலாளர் எடப்பாடி பழனிச்சாமியின் சுற்றுப்பயணத் தேதி கோவை அதிமுக கூட்டத்தில் அறிவித்த சில நிமிடங் களில், அதே மேடையில் சுற்றுப்பயணம் தள்ளிப் போகிறது  என எஸ்.பி.வேலுமணி அறிவித்தது கட்சி நிர்வாகிகளி டையே சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.

‘உங்களை தேடி உங்கள் ஊரில்’ மாவட்ட ஆட்சியர் கள ஆய்வு

கோவை, ஜன.23- கோவையில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டம், மாவட்ட ஆட்சியர் பேரூர் வட்டத்தில் உள்ள பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, பொதுமக்களிடமிருந்து கோரிக்கை மனுக்களை பெற்றுக்கொண்டார். கோவை மாவட்டம், தொண்டாமுத்தூர் வட்டார வளர்ச்சி அலுவலகத்தில் உங்களை தேடி உங்கள் ஊரில் திட்டத் தினை வியாழனன்று மாவட்ட ஆட்சியர் கிராந்திகுமார் பாடி  தொடங்கி வைத்தார். அதனைத் தொடர்ந்து, தொண்டா முத்தூர் அரசு மருத்துவமனை, அரசு கலை மற்றும் அறிவியல் கல்லூரி, தொடக்க வேளாண்மை கூட்டுறவு கடன் சங்க நியாய விலைக் கடை, முத்திப்பாளையத்தில் உள்ள அரசு பெண்கள்  மேல்நிலைப்பள்ளி உள்ளிட்ட பல்வேறு பகுதிகளில் கள ஆய்வுகளை மேற்கொண்டு, அப்பகுதி பொதுமக்களிடமி ருந்து கோரிக்கை மனுக்களை பெற்றார். பின்னர், சம்மந்தப் பட்ட அலுவலர்களிடம் வழங்கி கோரிக்கை மனுக்கள் மீது விரைந்து நடவடிக்கை எடுக்குமாறு உத்தரவிட்டார்.  இந்த ஆய்வின்போது பொள்ளாச்சி நாடாளுமன்ற உறுப் பினர் கே.ஈஸ்வரசாமி, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் கே. கார்த்திகேயன், உதவி ஆட்சியர்(பயிற்சி) அங்கித் குமார் ஜெயின், மாவட்ட வருவாய் அலுவலர் தமிழ்நாடு நுகர் பொருள் வாணிபக் கழக முதுநிலை மண்டல மேலாளர் பழனி குமார், மாவட்ட ஊரக வளர்ச்சி முகமையின் திட்ட இயக்கு நர் (பொ) மதுரா உள்ளிட்ட அரசு உயர் அலுவலர்கள் பலர் கலந்து கொண்டனர்.

ஆளுநரின் தேநீர் விருந்து: சிபிஎம் புறக்கணிப்பு

சென்னை, ஜன. 23 - சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகும். அதன்படி, ஜனவரி 26  குடியரசு தினத்தன்று அரசியல் கட்சி களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் ஆளுநர் கொடுக்க விருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது.  இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார்.  அதில், “அரசியலமைப்பு சாசனத்தை யும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது” என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார்.   காங்கிரஸ், சிபிஐ, விசிக ஆளுநர் கொடுக்கவிருக்கும் தேநீர்  விருந்தை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சி களும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டும் இதே போல் குடியரசு தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்தை  திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித் திருந்தது குறிப்பிடத்தகுந்தது.

தானாக திறந்த ஆனைமடுவு அணை மதகு: வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு

சேலம், ஜன.23- வாழப்பாடி அருகே உள்ள புழுதிக் குட்டை ஆனைமடுவு அணையின் மதகு, புத னன்று தானாக திறந்து தண்ணீர் வெளியேறி யதால், வசிஷ்ட நதியில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. சேலம் மாவட்டம், வாழப்பாடியை அடுத்த புழுதிக்குட்டை கிராமத்தில் 67.25  அடி உயரத்தில் 267 மில்லியன் கனஅடி தண்ணீர் தேங்கும் வகையில் ஆனைமடுவு அணை அமைந்துள்ளது. 3 ஆண்டுகளுக்குப் பிறகு கடந்த டிசம்பர் மாத இறுதியில் பெய்த பருவமழையால், ஆனைமடுவு அணை நிரம் பியது. அணையிலிருந்து விநாடிக்கு 2 ஆயி ரம் கனஅடிக்கு மேல் உபரிநீர் திறக்கப்பட்ட தால், வசிஷ்டநதியில் வெள்ளப்பெருக்கு ஏற் பட்டது. ஆற்றுப்படுகையில் உள்ள ஏரி,  குளங்கள் நிரம்பின. தற்போதும் விநாடிக்கு  36 கன அடி தண்ணீர் வசிஷ்ட நதியில் உபரி நீராக திறக்கப்பட்டு வருகிறது. இந்நிலை யில், புதன் மதியம் திடீரென ஆனைமடுவு அணையின் தலைமை மதகின் மைய மதகு தானாக மூன்றடி உயரத்திற்கு மேல் சென்று  திறந்ததால் தண்ணீர் ஆர்ப்பரித்து அசுர  வேகத்தில் வெளியேறியதால், வசிஷ்டநதி யில் வெள்ளப்பெருக்கு ஏற்பட்டது. அணை யிலிருந்து திடீரென தண்ணீர் வெளியேறும் சத்தம் கேட்டதால் அப்பகுதியில் இருந்த விவ சாயிகள், அணை பணியாளர்கள் அதிர்ச்சி யடைந்து அணைப்பகுதியில் திரண்டனர். இதன்பின் பணியாளர்கள் சுமார் அரை மணி நேரம் போராடி, தலைமை மதகை சீரமைத்து தண்ணீர் வெளியேறுவதைத் தடுத்து நிறுத் தினர். இதுகுறித்து அணை பாசன ஆயக்கட்டு விவசாயிகள் கூறுகையில், அணை முழு  கொள்ளளவை எட்டி நிரம்பியுள்ள நிலை யில், மதகுகளின் இயக்கத்தை அதிகாரிகள் கவனிக்கவில்லை. இதுகுறித்து உயரதிகாரி கள் விசாரணை நடத்த வேண்டும், என்றனர். அணை அதிகாரிகள் கூறுகையில், மின்சாரத் தில் இயங்கும் மதகின் மின்னணு இயக்கி  பெட்டிகளில் பல்லிகள் புகுந்து உரசியதால் மின் ஒயர்கள் கருகி, மதகு தானாக திறந்து கொண்டது. விரைவாக செயல்பட்டு மதகை மூடி தண்ணீா் வெளியேறுவது நிறுத்தப்பட் டது. தண்ணீர் அதிக நேரம் வெளியேற வில்லை. அணையில் நீர்மட்டம் பெரிதாகக் குறையவில்லை. வசிஷ்டநதியில் விநாடிக்கு 36 கன அடி உபரிநீர் மட்டுமே செல்கிறது. அணையின் மதகுகள் தற்போது சீராக இயங்குகின்றன, என்றனர்.

8 அடி நீள மலைப்பாம்பு மீட்பு

மேட்டுப்பாளையம், ஜன.23- கோவை மாவட்டம், மேட்டுப்பாளையம் அடுத்துள்ள சிறு முகை முத்துசாமி திருமண மண்டபம் அருகே குடியிருப்பு கள் நிறைந்த பகுதியில் மலைப்பாம்பு ஒன்று இருப்பதை அப்பகுதியினர் பார்த்தனர். இதுகுறித்து, பொதுமக்கள் வனச் சரக அலுவலகத்திற்கு தகவல் தெரிவித்தனர். சம்பவ இடத் திற்கு வந்த பாம்பு பிடி வீரர் குணா மற்றும் வனத்துறையி னர். அங்குள்ள புதரில் பதுங்கியிருந்த சுமார் 8 அடி நீள முள்ள மலைப்பாம்பை பிடித்தனர். இதனையடுத்து பிடிபட்ட  மலைப்பாம்பை பெத்திக்குட்டை வனப்பகுதியில் பத்திரமாக  விடுவித்தனர்.

தமிழசை மீது புகார்
தமிழசை மீது புகார் சேலம், ஜன.23– அறிவியலுக்கு புறமான தகவல்களை பரப்பிய தமி ழிசை மீது நடவடிக்கை எடுக் கக்கோரி காவல் ஆணையர்  அலுவலகத்தில் புகாரளிக் கப்பட்டுள்ளது. இதுகுறித்து பல் மருத்து வர் சுகுமார் சேலம் காவல் ஆணையர் அலுவலகத்தில் வியாழனன்று அளித்த மனு வில், சமூகத்தில் உயர் பொறுப்பில் இருக்கும் தமி ழிசை சௌந்தர்ராஜன், மாட் டின் சிறுநீர் (கோமியம்) குடிப்பதால் உடலுக்கு நன் மைகள் ஏற்படும் என, விஞ் ஞான ரீதியாக நிரூபிக்கப் படாத உண்மைக்கு மாறான தகவல்களை கூறியுள்ளார். இதுபோன்ற துல்லியமற்ற தகவல்களை பரப்புவதன் மூலம் சமுதாயத்தில் தேவையற்ற குழப்பம் ஏற் படுத்துவதுடன், மக்க ளின் உடலுக்கும் தீங்கு  விளைவிக்கும். பொதுமக் களின் ஆரோக்கியம் குறித்து  எந்த அக்கறையுமின்றி, தவ றான தகவல்களை பரப்புவ தன் மூலம் கடும் பின் விளை வுகள் ஏற்படுத்தும் என்ப தால், தமிழிசை சௌந்தர்ரா ஜன் மீது உரிய விசாரணை நடத்தி நடவடிக்கை எடுக்க  வேண்டும், என தெரிவிக்கப் பட்டுள்ளது.