சத்திரம்புதூரில், எம்ஜிஆர் ஆட்சிக்காலத்தில் நிதி உதவி பெற்று கட்டப்பட்ட வீடுகள், தற்போது வசிப்ப தற்கே தகுதியற்ற நிலையில் வீடுகள் உள்ளதால், தமிழக அரசின் நிதி உத வியை எதிர்பார்த்து உழைக்கும் மக்கள் காத்திருக்கின்றனர். ஈரோடு மாவட்டம் கோபி அருகே உள்ள பெரியகொடிவேரி பேரூராட்சி சத்திரம்புதூர் பகுதியில் நூற்றுக்கும் மேற்பட்ட பட்டியலின குடும்பத்தினர் வசித்து வருகி்ன்றனர். இந்த சத்திரம்பு தூரில் பட்டியலின மக்களுக்கு கடந்த 35 ஆண்டுகளுக்கு முன் அப்போதைய முதல்வர் எம்ஜிஆர் ஆட்சியில் 60 பய னாளிகளுக்கு கடனுதவி அளித்து ஓட்டு வீடுகள் கட்டப்பட்டது. கடந்த 10 ஆண்டுகளுக்கு முன் சத்திரம் புதூர் மக்களின் 40க்கும் மேற்பட்ட ஓட்டு வீடுகளின் மேற்கூரை முழுவதும் சேதாரமாகி, தொங்கி சுவர்களில் விரிசல் ஏற்பட்டு இடிந்து விழுந்தது. இக்காலத்தில், உழைப்பை எவ் வளவு செலுத்தியும், தங்களது வாழ்க்கையில் எவ்வித முன்னேற் றமும் இல்லாத நிலையில், வீட்டை விட்டு வெளியேறி இடிந்த வீட்டின் எதி ரில் குடிசை அமைத்து குடியிருந்து வரு கின்றனர். இதனையடுத்து, கடந்த 10 ஆண்டு களாக இந்த சிதலமடைந்த வீடுகளை, அரசு சார்பில் பராமரிப்பு செய்து கொடுக்க வேண்டும் என அதிமுக ஆட்சியில் முன்னாள் அமைச்சர், அரசு அதிகாரிகள், பெரியகொடிவேரி பேரூ ராட்சி நிர்வாகம் என அனைத்து தரப்பி னரிடமும் முறையிட்டும் எவ்வித பய னும் ஏற்படவில்லை. இதுகுறித்து அப்பகுதி மக்கள் கூறு கையில், வாழவே முடியாத நிலையில் எங்கள் வீடுகள் உள்ளது. எங்கள் கோரிக்கைகளை கடந்த பத்தாண்டுக ளுக்கு மேலாக அரசின் கவனத்திற்கு கொண்டு செல்கிறோம். ஆனால், ஆட்சியில் இருப்பவர்களின் மனம் தான் இரங்க மாட்டேன் என்கிறது. ஆனால், பெரியகொடிவேரி பேரு ராட்சி நிர்வாகம், சத்திரம்புதூர் வீதிக ளுக்கு மட்டும் கான்கீரிட் வசதி, பேவர் பிளாக் வசதி செய்து கொடுத்து, வரியை மட்டும் வசூல் செய்து கொள்கி றது. தேர்தல் நேரத்தில் வாக்குகேட்க வரும் வேட்பாளர்களிடம் சிதல மடைந்து இடிந்து விழுந்த ஓட்டு வீடு களை பராமரிப்பு செய்து மேற்கூரை அமைத்து கொடுக்க வேண்டி கோரிக்கை விடுத்தால் தேர்தல் முடிந் தால் சத்திரம்புதூர் மக்களின் கோரிக் கையை மறந்து விடுகின்றனர். ஒழு காத குடிசை, ஆறாதசோறு அனைவ ருக்கும் கிடைக்க வேண்டும் என்பதை அன்று அறிஞர் அண்ணா சொன்னதை ஏற்று, சத்திரம்புதூர் மக்களுக்கு எம்ஜிஆர் ஆட்சியில் கடனுதவி அளித்து ஓட்டு வீடு அமைத்து கொடுக் கப்பட்டது. ஆனால் கடந்த 10ஆண்டுக ளுக்கு முன் சிதலமடைந்து இடிந்து விழுந்து காணப்படும் வீட்டை பார மாரிப்பு செய்து வழங்க வேண்டி அதி முக ஆட்சியில் மனு அளித்தும் நட வடிக்கை இல்லை. தேர்தலில் வாக்கு காக மட்டுமே எங்களை பயன்படுத்து கின்றனர் என வேதனையுடன் தெரி வித்தனர் இதுகுறித்து மார்க்சிஸ்ட் கட்சியி னர் கூறுகையில், வாழ்வதற்கே தகுதி யற்ற நிலையில் உள்ள வீடுகளைப் போன்ற கூடுகளில், பட்டியலின உழைப்பாளி மக்கள் வேறு வழியின்றி வாழ்ந்து வருகின்றனர். அதிமுக ஆட்சியில்தான் இம்மக்களின் கோரிக் கைகள் செவிமடுக்கவில்லை. திமுக அரசு கிராமப்பகுதியில் கடந்த 30 ஆண்டுகளுக்கு முன் கட்டப்பட்ட ஓட்டு வீடுகள், கான்கீரிட் தொகுப்பு வீடு களைகளை பராமரிப்பு செய்யும் திட்டத்தை மேற்கொண்டு வருகிறது. இதில் ஓட்டு வீடுகளுக்கு ரூ. 70 ஆயிரம் கான்கீரிட் தொகுப்பு வீடுகளுக்கு ரூ. 1.5 லட்சம் என அரசு நிதி உதவி செய்து பராமரிப்பு மேற்கொண்டு வருகிறது. அதைப்போலவே, பெரிய கொடிவேரி பேரூராட்சியில் உள்ள சத்திரம்புதூர் பட்டியலின மக்களின் நிலை உணர்ந்து ஓட்டு வீடுகளை பராம ரித்தல் திட்டத்தில் நிதி உதவி வழங்கிட வேண்டும். மேற்கண்ட கோரிக்கை களை தமிழக முதல்வரின் கவனத் திற்கு கொண்டு செல்ல உள்ளோம் என்றனர்.