districts

img

யானை தாக்கி முதியவர் பலி: மக்கள் மறியல்

கோவை, ஜன.23- தடாகம் அடுத்த தாளி யூர் அருகே ஒற்றை யானை  தாக்கி முதியவர் உயிரிழந்த நிலையில், வனத்துறையை கண்டித்து பொதுமக்கள் சாலை மறியலில் ஈடுபட்ட னர். கோவை வனச்சரகம் தடாகம் வனப்பகுதியில் இருந்து யானைகள் வெளி யேறி, பன்னிமடை, தாளியூர், வீரபாண்டி, சுற்றுவட்டாரப் பகுதிகளில் உலா வருகிறது. இதனை கண்காணிக்க வனத்துறையினர் குழு அமைத்து ரோந்து சென்று வருகின்ற னர்.  இந்நிலையில், கோவை தடாகம் பன்னி மடை அடுத்த தாளியூர் பகுதியை சேர்ந்த நட ராஜன் (69) என்பவர், அதே பகுதியில் மளிகை கடை நடத்தி வருகிறார். இவர் வியாழனன்று அதிகாலை வீட்டின் அருகே நடை பயிற்சி மேற்கொண்டுள்ளார். அப்போது அங்கு வந்த ஒற்றை யானை, நடராஜனை தாக்கி யது. இதில் அவர் சம்பவ இடத்திலேயே உயிரிழந்தார். இதனைக் கண்ட ஊர் பொது மக்கள் உடனடியாக வனத்துறையினர் மற் றும் தடாகம் போலீசாருக்கு தகவல் அளித் துள்ளனர். சம்பவ இடத்திற்கு வந்த வனத் துறை மற்றும் போலீசார் உயிரிழந்த நடரா ஜன் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக் காக அனுப்ப முயன்றனர். அதற்குள் அங்கு  வந்த நடராஜன் உறவினர்கள் உடலை எடுக்க விடாமல் தாளியூர் சாலையில் அமர்ந்து மறி யல் போராட்டத்தில் ஈடுபட்டனர். அடிக்கடி  யானைகள் ஊருக்குள் வரும் நிலையில்,  முறையாக கண்காணித்து அறிவித்திருந் தால் உயிரிழப்பு ஏற்பட்டு இருக்காது, என்ற னர்.  இதனிடையே தகவல் அறிந்து அங்கு வந்த கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப் பினர் பி.ஆர்.ஜி அருண்குமார் உயிரிழந்த நட ராஜன் உறவினர்களுக்கு ஆறுதல் கூறி,  பொதுமக்களிடமும் பிரச்சனைகள் குறித்து  கேட்டறிந்தார். நீண்ட நேரத்திற்கு பிறகு வனத் துறை மற்றும் போலீசார் பொதுமக்களுடன் நடத்திய பேச்சு வார்த்தையை தொடர்ந்து  மறியல் போராட்டம் கைவிடப்பட்டது. பின் னர் நடராஜன் உடல் பிரேத பரிசோதனைக் காக கோவை அரசு மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டது.