districts

img

அடிப்படை வசதிகள் கேட்டு சிபிஎம் மனு

தருமபுரி, ஜன.23- பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பகுதி பொதுமக்களுக்கு அடிப்படை வசதிகள் செய்துதரக்கோரி, மார்க்சிஸ்ட் கட்சியி னர் வட்டார வளர்ச்சி அலுவலரிடம் மனு அளித்தனர். தருமபுரி மாவட்டம், பென்னாகரம் ஒன்றியம், பிக்கிலி ஊராட்சிக்குட்பட்ட பெரியூர், பூதிநத்தம், சக்கிலிநத்தம் ஆகிய  கிராமங்களில் எந்தவித அடிப்படை வசதிகளும் இல்லை.  எனவே, பூதிநத்தம் பகுதியில் இருந்து சங்கிலி நத்தம்  கிராமத்துக்கு தார்சாலை அமைக்க வேண்டும். குட்டகோசம் பள்ளம் பகுதியில் ஆழ்துளை கிணறுகளில், சிறு மின்விசை  பம்பு அமைத்து குடிநீர் தொட்டிகளில் நீரேற்றி விநியோகம் செய்ய வேண்டும். பூதிநத்தம் கிராமத்தில் உள்ள மேல்நிலை  நீர்த்தேக்க தொட்டியில், பொதுக்கிணறு மற்றும் போர்வெல்  ஆகியவற்றிலிருந்து நீரேற்றி தினசரி குடிநீர் விநியோகம் செய்ய வேண்டும். குட்டகோசம் பள்ளம் பகுதியில் வன விலங்குகள் நடமாட்டம் உள்ள குடியிருப்பு பகுதி அருகில்  தெரு விளக்கு வசதி செய்து தர வேண்டும். புதூர் பேருந்து  நிறுத்தம் அருகே வேகத்தடை அமைக்க வேண்டும், உள்ளிட்ட  கோரிக்கைகளை வலியுறுத்தி, மார்க்சிஸ்ட் கட்சியினர் வியாழனன்று பென்னாகரம் துணை வட்டார வளர்ச்சி அலுவ லர் சங்கீதாவிடம் மனு அளித்தனர். இதில் சிபிஎம் மாவட்ட  செயற்குழு உறுப்பினர் வே.விஸ்வநாதன், பகுதிக்குழு உறுப் பினர்கள் சண்முகம், பழனிச்சாமி, கோவிந்தராஜ் ஆகி யோர் உடனிருந்தனர்.