districts

img

மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி

மேட்டுப்பாளையம், ஜன.23- கோடைகாலத்தில் காட்டுத்தீ பர வலை கட்டுப்படுத்த வனத்துறையினர் மேட்டுப்பாளையம் கோத்தகிரி இடை யேயான மலைப்பாதையில் தீத்தடுப்பு கோடு அமைக்கும் பணி தீவிரமாக நடை பெற்ற வருகிறது. கோவை மாவட்டத்தின் வனம்  சார்ந்த பகுதிளான மேட்டுப்பாளையம் சுற்றியுள்ள பகுதிகளில் வழக்கத்தை விட சற்று குறைவாகவே கடந்தாண்டு மழை பெய்துள்ளது. இதனால் போதிய நீரின்றியும் கடந்த ஒரு மாதத்திற்கும் மேலாக கொட்டி வரும் கடும் பனி கார ணமாகவும் வனத்தில் உள்ள செடி கொடிகள் காய்ந்து காட்டுத்தீ எளிதில் பரவும் சூழல் ஏற்பட்டுள்ளது. வன அளவை நிறுவனத்தின் மூலம் செயற் கைக்கோள் உதவியோடு தீ பரவும் பகு திகள் கண்காணிக்கப்பட்டு, மாவட்ட வன அலுவலகத்தில் தீத்தடுப்பு கட்டுப் பாட்டு அறை அமைக்கப்பட்டுள்ளது. அங்கிருந்து இருபத்திநான்கு மணிநேர மும் வன அலுவலர்கள் மற்றும் ஊழி யர்களுக்கு தீ குறித்த தகவல்களை பெறுதல் அறிவித்தல் மற்றும் தடுப்பு நடவடிக்கைகள் மேற்க்கொள்ளபட்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக மேட்டுப்பாளையம் வனச்சரகதிற்குட் பட்டப் பகுதிகளில் முன்னெச்சரிக்கை நடவடிக்கையாக தீத்தடுப்பு கோடுகள் அமைக்கும் பணியை துவக்கியுள்ள னர். மேட்டுப்பாளையத்தில் இருந்து  கோத்தகிரி செல்லும் சாலையின் இரு புறமும் அடர்ந்த காடுகள் உள்ளதால் இப்பகுதியில் தீத்தடுப்பு பணிகள் முதற்கட்டமாக துவங்கியுள்ளன. வன சாலைகளில் பயணிப்போர் மற் றும் சுற்றுலாப் பயணிகள் ஒரு சிலர் புகை பிடித்துவிட்டு நெருப்புடன் சிகரெட், பீடி போன்றவற்றை வீசுவதால் சாலையோ ரம் காய்ந்து கிடக்கும் புதர்களில் காட்டுத் தீ எளிதில் பிடித்து காடுகளுக்குள் பரவி விடுகிறது. இதனை கட்டுப்படுத்தும் விதமாக தற்போது இம்மலைப்பாதை யின் இருபுறமும் காய்ந்து கிடக்கும் புற்கள் மற்றும் செடிகொடிகளை அகற்றி சாலையின் ஓரங்களில் தீத் தடுப்பு கோடுகள் அமைக்கும் பணி கள் தீவிரப்படுத்தப்பட்டுள்ளன. காய்ந்த புதர்கள் மற்றும் செடி கொடி களை வெட்டி அதனை வனத்தையும் சாலையினையும் இணைக்கும் பகுதிக ளில் நீண்ட கோடுகளை போல் வைத்து  அதில் மிக கவனமாக தீ வைத்து விட்டு அவை எரிந்த பின் அணைத்து விட் டால் அங்கு தீயில் கருகிய நீண்ட கோடு உருவாகி விடுகிறது. இதனால் பிற செயற்கையான காரணங்களினால் தீ  பிடித்தாலும் கருகிய கோட்டை தாண்டி  நெருப்பு பரவாது என்பதால் மேட்டுப் பாளையம் கோத்தகிரி சாலையில் சுமார் 13 கிலோமீட்டர் தொலைவிற்கு இப்பணிகள் தொடர்ச்சியாக நடை பெற்று வருகின்றன.