ஒரே நாளில் 12 காசுகள் சரிந்த ரூபாய் மதிப்பு!
புதுதில்லி, ஜன. 23 - அமெரிக்க டாலருக்கு இணையான இந்திய ரூபாய் மதிப்பு, வியாழனன்று 12 காசுகள் சரிந்து 86 ரூபாய் 47 காசுகளுக்குச் சென்றுள் ளது. புதனன்று 23 காசுகள் உயர்ந்து ரூ. 86 ரூபாய் 35 காசுகளாக இருந்த நிலை யில், ரூபாய் மதிப்பு மீண்டும் சரிந்துள்ளது. இன்றைய வணிகத்தில் வங்கிகளுக்கு இடையிலான அந்நியச் செலா வணியில் ரூபாய் மதிப்பு 11 காசுகள் சரிந்து ரூ. 86 ரூபாய் 46 காசுகளாகத் தொடங்கி யது. பின்னர் படிப்படியாகச் சரிந்து ரூ. 86 ரூபாய் 52 காசு களாக இருந்தது. வணிகநேர முடிவில் புதனன்றைய மதிப்பில் இருந்து 12 காசுகள் சரிந்து ரூ. 86.47 காசுகளாக வணிகமானது.
ஆளுநரின் தேநீர் விருந்து: சிபிஎம் புறக்கணிப்பு
சென்னை, ஜன. 23 - சுதந்திர தினம், குடியரசு தினத்தை முன்னிட்டு, அரசியல் கட்சிகளுக்கு தமிழக ஆளுநர் தேநீர் விருந்து அளிப்பது வழக்கமாகும். அதன்படி, ஜனவரி 26 குடியரசு தினத்தன்று அரசியல் கட்சி களுக்கு தமிழக ஆளுநர் ஆர்.என். ரவி தேநீர் விருந்துக்கு ஏற்பாடு செய்துள்ளார். இந்நிலையில் ஆளுநர் கொடுக்க விருக்கும் தேநீர் விருந்தை புறக்கணிப்ப தாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி அறி வித்துள்ளது. இதுதொடர்பாக கட்சியின் மாநிலச் செயலாளர் பெ. சண்முகம் அறிக்கை ஒன்றை விடுத்துள்ளார். அதில், “அரசியலமைப்பு சாசனத்தை யும், குடியரசின் விழுமியங்களையும், கூட்டாட்சி கோட்பாடுகளையும், சட்டமன்ற மாண்புகளையும் மதிக்காமல் தொடர்ந்து சிதைத்து வருகிற ஆளுநர் ஆர்.என். ரவி தமிழ்நாட்டின் ஆளுநராக நீடிக்கிற தகுதியை இழந்துவிட்டார். ஆகவே ஆளுநர் மாளிகையில் ஏற்பாடு செய்யப்பட்டிருக்கக் கூடிய குடியரசு தின தேநீர் விருந்தை மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி புறக்கணிக்கிறது” என்று பெ. சண்முகம் குறிப்பிட்டுள்ளார். காங்கிரஸ், சிபிஐ, விசிக ஆளுநர் கொடுக்கவிருக்கும் தேநீர் விருந்தை திமுக கூட்டணியில் உள்ள காங்கிரஸ், சிபிஐ, விசிக உள்ளிட்ட கட்சி களும் புறக்கணிப்பதாக அறிவித்துள்ளன. கடந்த ஆண்டும் இதே போல் குடியரசு தினத்திற்கு ஆளுநர் தேநீர் விருந்தை திமுக கூட்டணிக் கட்சிகள் புறக்கணித் திருந்தது குறிப்பிடத்தகுந்தது.
நடிகர் சைப் அலிகான் பிரச்சனை மூலம் மதக்கலவரத்தை தூண்ட பாஜக திட்டம்
வெறுப்புப் பேச்சிற்கு பெயர் பெற்ற மகாராஷ்டிர பாஜக அமைச்சர் நிதேஷ் ராணே, நடிகர் சைப் அலிகான் பிரச்சனை மூலம் மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசி சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளார். இதுதொடர்பாக அவர் கூறுகை யில்,”நடிகர் சைப் அலி கான் டிஸ்சார்ஜ் செய்யப்பட்ட பிறகு அவரைப் பார்த்தேன். அப்போது அவர் உண்மையிலேயே தாக்கப்பட்டாரா அல்லது நடிக்கிறாரா என்று எனக்கு சந்தேகம் ஏற்படுகிறது. தேசியவாத காங்கிரஸ் (சரத்) கட்சி தலை வர் சுப்ரியா சுலே உள்ளிட்டோர் சுஷாந்த் சிங் ராஜ்புத் போன்ற ஓர் இந்து நடிகர் சித்ரவதை செய்யப்பட்டால், யாரும் எதுவும் கேட்க முன்வருவதில்லை என மதக்கலவரத்தை தூண்டும் வகையில் பேசியுள்ளார்.
பார் கவுன்சிலுக்கு உயர்நீதிமன்றம் நோட்டீஸ்
பார்கவுன்சில் சட்டம் மற்றும் விதிகளுக்கு முரணாக குற்ற வழக்கு நிலுவையில் உள்ள தமிழ்நாடு பார் கவுன்சில் துணை தலைவர் பதவி வகிப்பதை எதிர்த்த வழக்கில் அகில இந்திய பார்கவுன்சில், தமிழ்நாடு பார் கவுன்சில் பதில் அளிக்குமாறு நோட்டீஸ் அனுப்ப உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது. தமிழ்நாடு பார் கவுன்சில் உறுப்பினர் எம்.வரதன் உயர்நீதிமன்றத்தில் தாக்கல் செய்த மனுவில், தமிழ்நாடு பார்கவுன்சில் துணை தலைவர் வி.கார்த்திகேயன் மீது குட்கா வழக்கு நிலுவையில் உள்ளது. முன்னாள் அமைச்சர்கள் சி.விஜயபாஸ்கர், ரமணா, காவல்துறை முன்னாள் உயர் அதிகாரிகளும் இந்த வழக்கில் முக்கிய குற்றவாளிகளாக சேர்க்கப்பட்டுள்ளனர். எப்ஐஆர் பதிவு செய்யப்பட்டு குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்பட்டுள்ளவர் தமிழ்நாடு பார்கவுன்சில் நடவடிக்கைகளில் தொடர்ந்து செயல்படுவது விதிகளுக்கு முரணானது. இது குறித்து உரிய நடவடிக்கை எடுக்குமாறு கோரியிருந்தார். இந்த வழக்கு நீதிபதிகள் எஸ்.எம்.சுப்பிரமணியம், ஜோதிராமன் ஆகியோர் அடங்கிய அமர்வில் விசாரணைக்கு வந்தது. வழக்கை விசாரித்த நீதிபதிகள், அகில இந்திய பார்கவுன்சில் மற்றும் தமிழ்நாடு பார்கவுன்சில், துணை தலைவர் வி.கார்த்தி கேயன் ஆகியோர் 2 வாரங்களுக்குள் பதில் தருமாறு நோட்டீஸ் அனுப்பஉத்தரவிட்டனர்.
சமூக ஆர்வலர் கொலை வழக்கு சிபிசிஐடிக்கு மாற்றம்
சென்னை,ஜன.23- புதுக்கோட்டை மாவட்டம் திருமயம் அருகே உள்ள வெங்களூரைச் சேர்ந்த சமூக ஆர்வலர் ஜகபர் அலி (56), சட்டவிரோத கல்குவாரி மீது நடவடிக்கை கோரி புகார் தெரிவித்து வந்தார். இந்நிலையில், கடந்த 17 ஆம் தேதி அவர் மீது லாரியை மோதி கொலை செய்தனர். இந்த வழக்கின் விசாரணையில், துளையானூரில் கல்குவாரி நடத்தி வந்த ராசு (54), ராமையா, ராசு மகன் தினேஷ்குமார், லாரி உரிமையாளர் முருகானந்தம், ஓட்டுநர் காசிநாதன்(45) ஆகியோர் சதித்திட்டம் தீட்டி, ஜகபர் அலியைக் கொன்றது தெரியவந்தது. இதையடுத்து, ராமையாவைத் தவிர மற்ற 4 பேரும் கைது செய்யப்பட்டனர். தலைமறைவாக உள்ள ராமையாவை காவல்துறையினர் தேடி வருகின்றனர். ஜகபர் அலி கொலைக்கு அரசியல் கட்சியினர் கண்டனம் தெரிவித்ததோடு, விசாரணையை சிபிசிஐடிக்கு மாற்றுமாறு வலியுறுத்தினர். இந்நிலையில், ஜகபர் அலி கொலை வழக்கு தொடர்பான அறிக்கையை, மாவட்ட காவல் கண்காணிப்பாளர் அபிஷேக் குப்தா தமிழக அரசுக்கு அனுப்பினார். அதைப் பரிசீலித்த அரசு, இந்த வழக்கை சிபிசிஐடி விசாரணைக்கு மாற்றி உத்தரவிட்டது. விசாரணை அதிகாரியாக காவல் ஆய்வாளர் புவனேஸ்வரி நியமிக்கப்பட்டுள்ளார்.
முதல்வர் மருந்தகங்கள் : பணிகள் தொடக்கம்
சென்னை,ஜன.23- தமிழகத்தில் முதற்கட்டமாக 1,000 முதல்வர் மருந்தகங்கள் தொடங்குவதற்கான பணிகள் தொடங்கப்பட்டுள்ளன. இதுகுறித்து கூட்டுறவு சங்கங்களின் பதிவாளர் என்.சுப்பையன் தெரிவித்திருப்பதாவது: மக்களுக்கு குறைந்த விலையில் மருந்துகள் கிடைக்கும் வகையில் தொழில் முனைவோர் மற்றும் கூட்டுறவுச் சங்கங்கள் மூலம் பொதுப்பெயர் (ஜெனரிக்) மருந்துகளையும் பிற மருந்துகளையும் பொதுமக்களுக்கு கிடைக்கச் செய்யும் வகையில் முதற்கட்டமாக முதல்வர் மருந்தகங்கள் 1000 இடங்களில் தொடங்க முதல்வர் உத்தரவிட்டுள்ளார். இதைத் தொடர்ந்து, பொதுமக்கள் பயன்பெறும் வகையில் முதல்வர் மருந்தகம் அமைக்க www.mudhalvarmarun dhagam.tn.gov.in என்ற இணையதளம் மூலம் தொழில் முனைவோர்களிடமிருந்து 638 விண்ணப்பங்கள் மற்றும் கூட்டுறவு சங்கங்களிடமிருந்து 490 விண்ணப்பங்களும் ஆக மொத்தம் 1128 விண்ணப்பங்கள் பெறப்பட்டுள்ளன. கூட்டுறவு சங்கங்கள் நடத்தும் மருந்தகங்களுக்கு நேரடியாக சென்று களப்பயிற்சி வழங்கப்படும். அனைத்து முதல்வர் மருந்தக கடைகள் மற்றும் மாவட்ட சேமிப்புக் கிடங்குகளை ஆய்வு செய்து பணிகளை துரிதப்படுத்தி விரைவில் முதல்வர் மருந்தகம் தொடங்குவதற்கான நடவடிக்கைகளை மேற்கொள்ள அறிவுறுத்தப்பட்டுள்ளனர். இவ்வாறு அவர் தெரிவித்துள்ளார்.