பள்ளிக் கட்டணம் கட்ட முடியாமல் குஜராத்தில் ஒரு மாணவி தற்கொலை செய்துள்ளார். அதே போல கடந்த 10 நாட்களில் ராஜஸ்தானில் 450 பள்ளிகளை மூடப்பட்டிருக்கின்றன. பள்ளிகளை திறக்கக்கோரி மாணவர்கள் பெற்றோருடன் போராடிக் கொண்டிருக் கின்றனர். பாஜக அரசாங்கம் குழந்தைகளின் கல்வி மீது காட்டும் அக்கறை இவ்வளவுதான்.
தானும் நேருவும் இணைந்து சரித்திரம் படைக்க முடியும் என்று சுபாஷ் சந்திர போஸ் நம்பினார். ஆனால் காந்தி இல்லாமல் தனது எதிர்காலத்தைக் காண நேரு தயாராக இல்லை. போஸ்-நேரு உறவு ஆழமாகாமல் போனதற்கு இதுவே மிகப்பெரிய காரணம் ஆகும்.
பீகார் மாநிலத்தில் கடந்த 8 மாதங்களாக நிகழ்ந்த குற்றங்கள் தொடர்பாக அறிக்கையை வெளியிட்டு வருகிறோம். ஆனால் முதல்வர் நிதிஷ் குமார் எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை.மாநிலத்தின் சட்டம்- ஒழுங்கு நிலைமையை அவர் அறியவில்லை. தலைநகர் பாட்னா அருகே கடந்த சில மாதங்களில் சுமார் 100 முதல் 200 ரவுண்டுகள் துப்பாக்கிச் சூடு நடத்தப்பட்டது.
தில்லி சட்டமன்ற தேர்தலில் பாஜக ஆட்சியை கைப்பற்ற வாய்ப்பு இல்லை. பெரும்பான்மை பலத்துடன் ஆம் ஆத்மி 60க்கும் மேற்பட்ட இடங்களை கைப்பற்றுவது உறுதி. கெஜ்ரிவால் 4ஆவது முறையாக முதல்வராக பொறுப்பேற்பார்.