விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணிகர்களின் நலன்களை அழிக்கும் வகையில். தேசிய வேளாண்மைக் கொள்கைக் கட்டமைப்பு வரைவுக் கொள்கையை ஒன்றிய அரசு சுற்றுக்கு விட்டுள்ளது. இந்தச் சட்டத்தி ற்கு சம்யுக்த கிஷான் மோர்ச்சா (ஐக்கிய விவ சாயிகள் சங்கம்) கடும் எதிர்ப்புத் தெரி வித்துள்ளது. ஒன்றிய அரசு முன்மொழிந்துள்ள புதிய வரைவுக் கொள்கை ஏற்கெனவே ரத்து செய்யப்பட்ட மூன்று விவசாயச் சட்டங்களை விட மோசமானது. இதற்கெதிராக போராட் டம் நடத்த விவசாயிகள் சங்கங்கள் தீர்மா னித்துள்ளன. இது தொடர்பாக பஞ்சாப் மாநிலம் சங்ரூர் மாவட்டம் கானௌரியில் செய்தியாளர்களிடம் பேசிய சம்யுக்த கிஷான் மோர்ச்சா தலை வர்கள், சம்யுக்த கிஷான் மோர்ச்சா கடந்த 2020-ஆம் ஆண்டு உருவாக்கப்பட்டது. கொரோ னா தொற்றுப்பரவலுக்கு மத்தியில் நாடாளு மன்றத்தில் மோடி அரசு மூன்று வேளாண் விரோ தச் சட்டங்களைக் கொண்டு வந்தது. இந்தச் சட்டங்களுக்கு எதிராக ஓராண்டுக்கு மேலாக நாங்கள் தில்லியில் தொடர் போராட்டங்களை நடத்தினோம். இதையடுத்து 2021-ஆம் ஆண்டு மூன்று வேளாண் சட்டங்களை ரத்து செய்தது. தற்போது அந்த மூன்று வேளாண் சட்டங்க ளைவிடக் கொடூரமான (தேசிய வேளாண் மைக் கொள்கைக் கட்டமைப்பு தொடர்பா னது-(National Policy Framework on Agri cultural Marketing) விவசாயத்தை சந்தைப் படுத்தல் தொடர்பான தேசிய அளவிலான வரை வுக் கொள்கையை ஒன்றிய அரசு சுற்றுக்கு விட்டுள்ளது. இதை சட்டமாக்குவதற்கு ஏதுவாக பொதுமக்களின் கருத்துக்களை அரசு கேட்கி றது. இந்த வரைவு கொள்கைக்கு எதிராக 2025 ஜன.9-ஆம் தேதி புதிய போராட்டத்தை தொடங்க 500 விவசாயிகள் சங்கத்தை உள்ள டக்கிய சம்யுக்த கிஷான் மோர்ச்சா திட்ட மிட்டுள்ளது.
வரைவுக் கொள்கையின் உண்மை நோக்கம்...
சிறு உற்பத்தியாளர்கள் மற்றும் விவசாயி களின் நலன்களை காவுகொடுத்து கார்ப்ப ரேட்டுகளின் நலன்களுக்கு முன்னுரிமை அளிக்கும் வகையில் விவசாய உற்பத்தியை யும் சந்தைப்படுத்துதலையும் ஒருங்கிணைப்ப தே தேசிய வேளாண் கொள்கைக் கட்ட மைப்புச் சட்டத்தின் நோக்கமாகும். இந்த வரைவுக்கு எதிர்ப்புத் தெரிவித்து ஹரி யானா மாநிலம் தோஹானா, பஞ்சாப் மாநிலம் மோகாவில் சம்யுக்த கிஷான் மோர்ச்சா சார்பில் கூட்டங்கள் நடத்தத் திட்டமிட்டுள் ளோம். அப்போது வரைவு கொள்கைக்கு எதிராக தீர்மானங்களை நிறைவேற்றுவோம். சுற்றுக்குவிடப்பட்டுள்ள குறிப்பில், விவசா யிகளுக்கு குறைந்தபட்ச ஆதரவு விலையை (எம்எஸ்பி) உறுதி செய்வது பற்றி ஏதும் குறிப்பிடப்படவில்லை. மாநில அரசுகளின் கூட்டாட்சி உரிமைகளை புதிய சட்டம் பறித்து விடும். விவசாயிகள், விவசாயத் தொழிலா ளர்கள், சிறு உற்பத்தியாளர்கள், சிறு வணி கர்களின் நலன்களை அழித்துவிடும். மாநிலங்கள் “விவசாயத் தொழிலாளர்க ளுக்கு வழங்கி வரும் குறைந்தபட்ச ஊதியம் பறிக்கப்படும். குறைந்தபட்ச ஊதியத்தை தீர்மானிக்கும் உரிமையை ஒன்றிய அரசே எடுத்துக்கொள்ளும். கொடூரமான தேசிய வேளாண்மைக் கொள்கைக் கட்டமைப்புச் சட்டத்தை ஏற்க மாட்டோம்” என பஞ்சாப் முதல்வர் பகவந்த் மான் அறிவித்துள்ளார். இவரைத் தொடர்ந்து மற்ற மாநிலங்களும் இந்தச் சட்டத்தை நிரா கரிக்க வேண்டும். மக்கள் நலனையும் நாட்டின் நலன்க ளையும் பாதுகாப்பதற்கான மாற்றுக் கொள் கையை உருவாக்க விவசாயிகள், விவசாயத் தொழிலாளர்கள், சிறு வணிகர்கள், ஏற்றுமதியா ளர்கள் என அனைவரும் ஒரே குடையின் கீழ் திரண்டு கார்ப்பரேட்டுகளின் நலன் சார்ந்து மோடி அரசு உருவாக்கியுள்ள வரைவுக் கொள் கையை நிராகரிக்க வேண்டும் என்றனர்.
நிறுவனமயமாக்கலும் கார்ப்பரேட்டுகளும்
நாட்டிலுள்ள மொத்த விவசாயிகளில் 86 சத வீதத்திற்கும் அதிகமானோர் சிறு மற்றும் குறு விவசாயிகள் தான். இவர்களின் நலன்க ளை காக்கப்போவதாகக் கூறிய மோடி அரசு 22,931 கிராமப்புறச் சந்தைகளை ஏற்படுத்தி யுள்ளது. தவிர பதிவு செய்யப்பட்ட 7,057 மிகப்பெரிய சந்தைகளும் உள்ளன. இவை அனைத்தையும் கார்ப்பரேட்டுகளுக்கு திறந்து விடுவதற்கு வசதியாக டிஜிட்டல்மயம், சந்தை களின் உட்கட்டமைப்பு மேம்பாடு, இயந்திர மயமாக்கல், செயற்கை நுண்ணறிவை பயன்படுத்துதல் என்ற வார்த்தை விளை யாட்டில் ஈடுபட்டுள்ளது மோடி அரசு. கார்ப்பரேட்டுகள் நுழைந்தால் உற்பத்தியி லும், சந்தைப்படுத்துதலிலும் சிறு-குறு விவ சாயிகள் நுழையவே முடியாது. உழவர் உற்பத்தியாளர் அமைப்புகளின் கதி? நாட்டில் உழவர் உற்பத்தியாளர் அமைப்பு கள் செயல்பட்டு வருகின்றன. இதன் மூலம் வர்த்தகர்கள், இடைத்தரகர்கள் உள் நுழை வது தவிர்க்கப்படுகிறது. நேரடியாக விவசாயி கள் சந்தையில் பொருட்களை விற்க இந்த அமைப்பு ஒரு பாலமாக உள்ளது. இதன் மூலம் சிறு-குறு விவசாயிகள் ஓரளவு பலன டைந்தனர். தற்போது ஒன்றிய அரசு கொண்டுவர திட்டமிட்டுள்ள புதிய சட்டம் உழவர்களையும்-உற்பத்தியாளர்களையும் ஓரங்கட்டிவிடும். இவர்கள் கார்ப்பரேட் நிறுவனங்களுடன் போட்டி போட முடியாது என்பது மட்டுமல்ல பேரம் பேசும் உரிமையையும் இழந்துவிடுவர். வேறு வழியில்லாமல் உழவர் உற்பத்தியாளர் அமைப்புகள் மாயமாகிவிடும்.