அகர்தலா பாஜக ஆளும் திரிபுரா மாநி லத்தில் பெண்கள், சிறுமி களுக்கு எதிரான பாலி யல் வன்கொடுமை சம்பவங்கள் மிக மோசமான அளவில் அதிக ரித்து வருகிறது.
கிட்டத்தட்ட உத்த ரப்பிரதேச மாநிலத்தைப் போன்று திரிபுராவில் ஒவ்வொரு மாதமும் எண்ணற்ற பாலியல் வன்கொடுமை சம்பவங்கள் நிகழ்ந்து வருகின்றன. இந்நிலையில், திரிபுராவின் சாந்திர் பஜார் அருகே மன்பதர் அவுட்போஸ்டில் ஐந்தாவது படிக்கும் சிறுமியை 5 பேர் கொண்ட கும்பல் பாலியல் வன்கொடுமை செய்துள்ள அதிர்ச்சி சம்பவம் நடந்துள்ளது.
வெள்ளிக்கிழமை (டிச., 13) இரவு வீட்டிற்கு வெளியே விளையாடிக் கொண்டிருந்த சிறுமியை மந்தாரை கிராமத்திற்கு அருகே உள்ள ரப்பர் தோட்டத்திற்கு கடத்திச் சென்ற 5 பேர் கொண்ட கும்பல், இரவு முழு வதும் சித்ரவதை செய்து, பாலியல் வன்கொடுமை செய்துள்ளது. சனிக்கிழமை காலை மயக்கம் தெளிந்தவுடன், நடக்க முடியாமல் வீட்டிற்கு வந்த சிறுமி நடந்தவற்றை பெற்றோரிடம் கூறியுள்ளார். பெற்றோர்கள் மன்பதர் புறக்காவல் நிலையத்தில் புகார் அளித்தனர். சிறுமி அளித்த வாக்குமூலத்தின் அடிப்படையில் குற்றம் சாட்டப்பட்ட 5 பேரையும் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்துள்ளனர். சிறையில் அடைக்கப்பட்ட 5 பேரும் 20 வயதிற்குட்பட்டவர்கள் என்பது குறிப்பிடத்தக்கது.