முன்னொரு காலத்தில் மன்னர்கள் மாறுவேடத்தில் மக்கள் மத்தியில் விமர்சனங்களைக் கேட்பது வழக்கம். ஆனால் இன்றைய அரசர் கூட வேஷம் போடுவதையே விரும்புகிறார். இருப்பினும் பொதுவெளியில் செல்லும் தைரியமும் இல்லை, விமர்சனங்களைக் கேட்கும் தைரியமும் இல்லை.
பாஜக நாட்டை இன்னும் முழு கட்டுப்பாட்டிற்கு கொண்டு வந்து விட்டால் கோவிலுக்குள் யார் வரவேண்டும்? யார் வரவேண்டாம் என்பதை அவர்கள்தான் முடிவு செய்வார்கள்.
எமர்ஜென்சி காலத்தில் ஜனநாயகத்திற்கு மட்டுமே ஆபத்து இருந்தது. ஆனால் மோடி ஆட்சியில் அரசியலமைப்புச் சட்டத்தின் அடிப்படைக் கோட்பாடுகளான மதச்சார்பின்மை, சோஷலிசம் உள்ளிட்ட 6 கூறுகள் மீதும் தாக்குதல் நடத்தப்படுகிறது. இதுதான் மிகவும் ஆபத்தானது.
குஜராத் மாநிலம் மோர்பி பாலம் விபத்து நடந்த இடத்தை பிரதமர் மோடி பார்வையிட ரூ.30 கோடி செலவானது. இறந்த 135 பேருக்கு 5 கோடி இழப்பீடு; ஆனால் மோடிக்கு ‘பிஆர் - போட்டோகிராபி’ செலவு ரூ.5.5 கோடி. இதுதான் மக்களுக்கான அரசு.
சபரிமலை ஐயப்பன் கோவிலுக்கு 29 நாட்க ளில் 22.67 லட்சம் பக்தர்கள் வருகை தந்துள்ளதாகவும், இதன்மூலம் ரூ.163.89 கோடி வருவாய் கிடைத்துள் ளதாக திருவிதாங்கூர் தேவ ஸ்தானம் தெரிவித்துள்ளது.