நாட்டில் எம்பிபிஎஸ்., பிடிஎஸ் போன்ற இளநிலை மருத்துவப் படிப்புகளில் சேருவதற்கு நீட் (NEET - National Entrance Eliglibilty En trance Exam) எனப்படும் நுழைவுத் தேர்வு ஆண்டு தோறும் நடத்தப்படு கிறது. தேசிய தேர்வு முகமை நடத்தும் இந்த நீட் தேர்வு கடந்த மே 5ஆம் தேதி நடைபெற்றது. ஆள்மாறாட்டம், வினாத் தாள் கசிவு உள்ளிட்ட நீட் தேர்வு முறை கேடு தொடர்பாக பீகார், ஜார்க்கண்ட், ராஜஸ்தான், குஜராத் என நாடு முழுவ தும் 50க்கும் மேற்பட்டோர் கைது செய் யப்பட்டிருந்தனர். மேலும் நீட் தேர்வு முடிவில் தமிழ்நாட்டைச் சேர்ந்த 8 மாண வர்கள் உட்பட நாடு முழுவதும் 67 பேர் முதலிடம் பிடித்து சாதனைப் படைத்த தாக தேசிய தேர்வு முகமை சர்ச்சைக் குரிய அறிவிப்பை வெளியிட்டது.
உயர்நிலைக் குழு
வினாத்தாள் கசிவு, கருணை மதிப் பெண், 67 பேருக்கு முழு மதிப்பெண்கள், நீட் தேர்வின் போது ஏற்பட்ட குளறுபடி கள், ஆள்மாறாட்டம் செய்து நீட் தேர்வு எழுதியது, ஒரே பயிற்சி மையத்தைச் சேர்ந்த பல மாணவர்கள் நிறைய மதிப் பெண்கள் எடுத்தது எனத் தொடர்ச்சி யாக பல்வேறு புகார் மனுக்கள் உச்சநீதி மன்றத்தில் தாக்கல் செய்யப்பட்டு வழக்கு களாக குவிந்தன. வழக்கை விசாரித்த உச்சநீதிமன்றம், நீட் முறைகேடு வழக் கில் ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வு முகமை பதிலளிக்க வேண்டும் என உத்தர விட்டது. தொடர்ந்து இந்திய விண்வெளி ஆய்வு மையத்தின் (இஸ்ரோ) முன்னாள் தலைவர் முனைவர் கே. ராதாகிருஷ் ணன் தலைமையில் 7 உறுப்பினர்களைக் கொண்ட உயர்நிலைக் குழுவை ஒன்றிய அரசு ஜூன் 22 அன்று அமைத்தது.
உச்சநீதிமன்றத்தில் சமர்ப்பிப்பு
இந்நிலையில், நீட் தேர்வு முறை கேடுகள் தொடர்பான உயர்நிலைக் குழு 101 பரிந்துரைகளுடன் ஒன்றிய அரசிடம் அறிக்கை அளித்துள்ளது. இந்த அறிக் கையை செவ்வாய்க்கிழமை அன்று உச்ச நீதிமன்றத்தில் ஒன்றிய அரசு சமர்ப்பித் தது. இதுதொடர்பாக ஒன்றிய கல்வித் துறை அமைச்சர் தர்மேந்திர பிரதான் கூறு கையில்,“உயர்நிலைக் குழு 101 பரிந்து ரைகள் அடங்கிய அறிக்கையை அளித் துள்ளது. பரிந்துரைகளில் தேசிய தேர்வு முகமையில் மாற்றம் செய்ய உயர்நிலைக் குழு கூறியுள்ளது. அதன்படி புதிய பணியி டங்கள் உருவாக்கப்பட்டு அதிகாரிகளை பணியில் அமர்த்த நடவடிக்கை மேற் கொள்ளப்படும்” என அவர் கூறினார்.