பெர்லின், டிச.17- ஜெர்மனியின் நாடாளுமன்றத்தில் கொண்டுவரப்பட்ட நம்பிக்கை தீர்மானத்தின் மீதான வாக்கெடுப்பில் அதிபர் ஓலாஃப் ஸ்கோல்ஸ் தலைமையிலான அரசு தோல்வியடைந்துள்ளது.
இதனைத்தொடர்ந்து 2025 பிப்ரவரி 23 அன்று அந்நாட்டில் பொதுத்தேர்தல் நடத்தப்பட உள்ளது. ஜெர்மனியில் சமூக ஜனநாயகக் கட்சி (SDP), பசுமைக் கட்சி மற்றும் சுதந்திர ஜன நாயகக் கட்சி (FDP) ஆகியவற்றின் கூட்டணி ஆட்சி நடந்து வந்தது. அமெரிக்காவிற்கு அடுத்தபடியாக உக்ரைனுக்கும் இஸ்ரே லுக்கும் அதிக ஆயுதங்களை கொடுக்கும் நாடாக ஜெர்மனி உள்ளது. மேலும் ரஷ்யா மீதான பொருளாதார தடைகளால் ஜெர்மனி யும் நெருக்கடிகளை எதிர்கொண்டு வருகிறது.
மக்களின் வரிப்பணத்தில் பெரும்பகு தியை போர்களுக்காக மட்டுமே செலவு செய்து வரும் நிலையில் ஜெர்மனியில் பொரு ளாதார நெருக்கடி, பணவீக்கம் ஆகியவை அதிகரித்து வருகிறது. இதனால் ஆளும் அரசின் மீது மக்களின் கோபம் அதி கரித்து வரும் நிலையில் தான், அதிபர் ஒலாஃப் சோல்ஸ் கார்ப்பரேட் வரிகளை உயர்த்துவது தொடர்பாக முன்மொழிவு களை கொண்டு வந்தார்.
சுதந்திர ஜனநாயகக் கட்சியை சேர்ந்த தீவிர முதலாளித்துவவாதியான நிதி அமைச்சர் கிறிஸ்டியன் லிண்ட்னர் அந்த முன்மொழிவுகளை நிராகரித்து வந்தார். இத னால் கடந்த சில மாதங்களாகவே அதிப ருக்கும் நிதி அமைச்சருக்கும் மோதல் போக்கு நீடித்து வந்தது.
கார்ப்பரேட்கள் மீதான வரிக்கு எதிர்ப்பு தெரிவித்ததுடன் மக்கள் நலத்திட்டங் களுக்கான நிதிகளையும் வெட்ட நிதி அமைச்சர் வலியுறுத்தி வந்தார். இந்த மோத லால்சுதந்திர ஜனநாயகக் கட்சி ஒலாஃப் சோல்ஸ் ஆட்சிக்கு தந்து வந்த ஆதரவை திரும்பப்பெற்று நம்பிக்கை வாக்கெடுப்பு நடத்தும் நிலை உருவானது. நவம்பர் மாதத்திற்கு முன் நடத்தப்பட்ட கருத்துக்கணிப்புகளின் படி, மீண்டும் தேர்தல் நடந்தால் அதிபர் ஒலாஃப் சோல்சின் சமூக ஜனநாயகக் கட்சி 14 சதவீத வாக்கு களையே பெறும் என தெரியவந்துள்ளது.
தாராளவாதக்கட்சிகளின் இந்த பின்னடைவு அங்குள்ள தீவிர பழமைவாத மற்றும் வலதுசாரிக்கட்சிகளுக்கே சாதகமாக உள்ளது. ஜெர்மனியில் உள்ள கிறிஸ்துவ ஜனநாயக யூனியன் (CDU) என்ற தீவிர மான பழமைவாதக் கட்சிக்கு தற்போது 30-34 சதவீதம் வரை வாக்குகள் கிடைக்கலாம் என கருத்துக்கணிப்புகள் தெரிவிக்கின்றன.
அமெரிக்காவின் தலையாட்டி பொம்மைகளாக உள்ளதால் ஐரோப்பிய நாடுகளின் பொருளாதாரங்கள் மோசமான பின்னடைவை சந்திப்பதுடன் அந்நாடுகளில் திடீர் அரசியல் திருப்பங்கள் மற்றும் மாற்றங்கள் ஏற்பட்டு வருகின்றன.